Skip to main content

Posts

Showing posts from April, 2011

சினிமாகிராஃப் (Cinemagraph) - அசையும் புகைப்படங்கள்

சினிமாகிராஃப் என்பது ஒருவகையான ஸ்டில் படம்தான், ஆனால், அந்தப் புகைப் படத்தின் ஏதாவது ஒரு பகுதி சிறிதளவு அசைவுடன் (உயிர்ப்புடன்) இருக்கும். இந்த வகை தொழில்நுட்பம் சாதாரண புகைப்படத்துக்கு ஒரு படி மேல், வீடியோவுக்கு ஒரு படி கீழ். கீழே கொடுத்துள்ள புகைப்படங்களைப் பாருங்கள்: (பிராட்பாண்ட் இணைப்பு வேண்டும்) பெண்ணின் தலைமுடியும், கழுத்திலுள்ள டாலரும் அசைவதைப் பாருங்கள் எல்லோரும் நடந்து கொண்டு இருக்கும்போது செய்தித்தாள் படிப்பவரின் கைகள் அசைவதைப் பாருங்கள் சாலை வழியே செல்லும் டாக்சியின் பிரதிபலிப்பை கண்ணாடியில் பாருங்கள் நன்றி: மெயில் ஆன்லைன் செய்தித்தாள்

ஆன்மிக குரு ஸ்ரீ சத்ய சாய் பாபா மறைவு

இன்று காலை சுமார் 7 : 40 அளவில் உலகப் புகழ் பெற்ற ஸ்ரீ சத்ய சாய் பாபா மறைந்தார். இவர் கடவுளின் அவதாரமா இல்லையா என்பது பற்றி இங்கு நான் விவாதிக்கப் போவதில்லை. ஆனால் சாய் பாபாவைப் பிடிக்காதவர்கள் கூட சாய் பாபாவின் தொண்டு நிறுவனங்களின் சேவையை மறுக்க முடியாது. கோடி, கோடியாக வருமானம் வருவதை ஏழை மக்களின் உதவிக்காக பல்வேறு மருத்துவமனைகள், குடி தண்ணீர் திட்டங்கள்,  கல்வி நிறுவனங்கள் நிறுவியது சாய் பாபாவின் ஒரு பாராட்டத்தக்க செயலாகும். அவர் மறைவுக்குப் பிறகு கிட்டத்தட்ட ரூ.40 ,000 கோடி பெறுமானமுள்ள அவருடைய ட்ரஸ்ட்டின் நிலை என்னவாகும், சாய் பாபா உயிருடன் இருந்தபோது நடந்த அந்த தன்னலமற்ற தொண்டு தொடருமா என்பது பெரிய கேள்விக்குறி. டாக்டர் ருத்ரன் போன்ற அதிமேதாவிகள் சாய் பாபா மக்களை ஏமாற்றினாரா, மக்களின் மூட நம்பிக்கையை வளர்த்தாரா என்பது போன்ற கேள்விகளைக் கேட்கும் போது, சாய் பாபா அவருடைய ட்ரஸ்ட்களின் மூலம் எவ்வளவு நல்ல காரியங்களை செய்து வந்தார் என்பதை ஏன் ஒப்புக் கொள்ள மறுக்க வேண்டும்? ஏழைகளின் உதவிக்காக ஒரு பைசா கூட செலவில்லாமல் ஓபன் ஹார்ட் சர்ஜரி வரை அவருடைய சூப்பர் ஸ்பெஷால்ட்டி மருத்து...

கோ -ஒளிப்பதிவில் ஒரு மைல்கல்

  ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் வித்தியாசமாக தொடர்ந்து சிந்திக்கிறார் என்பதற்கு சமீபத்திய சாட்சி "கோ" திரைப்படம். கோ என்றால் மன்னன் அல்லது தலைவன் என்று பொருள் (எந்த மொழியிலா? அடப்பாவிகளா, தமிழ் மொழிலதான்). இந்தப் படத்தில் முதலில் சிம்பன்ஸி.மன்னிக்கவும், சிம்பு எனும் எஸ்.டிஆர். நடிப்பதாக இருந்ததாம், நல்ல வேளை, நடிக்கவில்லை. நடித்திருந்தால் இந்த வெற்றிப் படம் பப்படம் ஆகியிருக்கும். முதலில் கோ படத்தின் கதாநாயகனை உங்களுக்கு அறிமுகப்படுத்துவது என் கடமை. இதோ அந்த நாயகன். கோ படத்தின் உண்மையான நாயகன் - படத்தின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம். நாதன்  இயக்குனர் கே.வி.ஆனந்த் ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளர் என்பதால் ஒரு மிகச் சிறந்த ஒளிப்பதிவுள்ள படத்துக்கு இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் மூலம் சிறப்பு சேர்த்துள்ளார். படத்தின் ஆரம்ப காட்சி முதல் கடைசி வரை ஒளிப்பதிவு மிகப் பிரமாதமாக வந்துள்ளது. ஆரம்ப வங்கிக் கொள்ளையில் ஆரம்பித்து, சந்து, பொந்து, சேரி எனத் தொடர்ந்து, நார்வே, சீனா என பயணித்து ரிச்சர்ட்டின் ஒளிப்பதிவு அட்டகாசம் செய்கிறது. கோ படத்தின் கதை மிகவும் டாப்பிகல் (topical) எ...

கிரிக்கெட்டில் ஹெலிகாப்டர் ஷாட்டை அறிமுகப்படுத்தியது சச்சின்தான்

இந்திய கிரிக்கெட் காப்டன் தோனிதான், ஹெலிகாப்டர் ஷாட் எனும் முறையை, பேட்டிங் நுட்பத்தில் புகுத்தினார் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது! இது குறித்து, பெப்ஸி விளம்பரமும் தோனியைக் கொண்டு, உலகக் கோப்பையை ஒட்டி வெளியிடப் பட்டது! ஆனால், இந்த முறையிலான மட்டை வீச்சு. சுமார் 9 வருடங்களுக்கு முன்னரே, சச்சினால் விளையாடப் பட்டுள்ளது, என்பது தற்போது நிரூபிக்கப் பட்டுள்ளது!   நன்றி: rammy's blogspot   என் கருத்து   இணைக்கப்பட்டுள்ள வீடியோவே இதற்கு சாட்சி. இதைப் பெரிதாக புகழ் பெறச் செய்த பெப்ஸி நிறுவனத்திற்கு நன்றி. ஆனால், இது தன்னால் ஏற்கனவே, 2002 ம் ஆண்டிலேயே விளையாடப்பட்ட ஒரு ஷாட் என்று தெரிந்தும் அதை தோனிக்கு கிரெடிட் செய்த பெப்ஸி விளம்பரத்தை பெரிதாக லட்சியம் செய்யாமல் தான் ஒரு பக்கா ஜென்டில்மேன் என்பதை மறுபடியும் நிரூபித்து இருக்கிறார் கிரிக்கெட் கடவுள் சச்சின்! குறிப்பு: தோனியின் கிரிக்கெட் திறமை குறித்து விமர்சனம் செய்வது இந்தப் பதிவின் நோக்கமல்ல. அவர் சந்தேகமில்லாமல் ஒரு மிகச் சிறந்த ஆட்டக்காரர்தான்.          ...

அன்நோன் (Unknown)-ஆங்கிலப் பட விமர்சனம்

லியம் நீஸன்ஒரு தேர்ந்த ஹாலிவுட் நடிகர். ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் (Schindler's List) , ராப் ராய் (Rob Roy), மைக்கேல் காலின்ஸ் (Michael Collins) போன்ற அருமையான படங்களில் நடித்துள்ளவர். சமீபத்தில் வெளிவந்த டேக்கன் (Taken) படம் ஒரு மிக விறுவிறுப்பான படம். இளம் பெண்களை கடத்தி, விபச்சாரத்திற்கும், கையாகாலாத கிழவர்களின் காம லீலைகளுக்கும் இரையாக்கும் ஒரு கும்பலை தேடிச்சென்று வேட்டையாடி அழிக்கும் இந்தப் படம் வணிக ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஓகே, அன்நோன் (Unknown ) படம் எப்படி என்று பார்ப்போம்: நாயகன் டாக்டர் மார்ட்டின் ஹாரிஸ் (லியம் நீஸன்)  தனது மனைவி எலிசபெத்துடன் ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகருக்கு ஒரு பயோ-டெக்னாலஜி மாநாட்டிற்கு வருகிறார். விமான நிலையத்திலிருந்து அவர்கள் தங்கப்போகும் ஹோட்டலுக்கு வரும்போது, தன்னுடைய கைப்பெட்டி (brief case) தொலைந்து போய்விட்டது என்று உணர்ந்து, அதில் தன்னுடைய பாஸ்போர்ட் மற்றும் முக்கியமான விஷயங்கள் இருப்பதால், மனைவியை ஹோட்டலில் விட்டுவிட்டு இன்னொரு டாக்சியில் மறுபடியும் விமான நிலையத்திற்கு செல்கிறார். போகும் வழியில் ஏற்படும் ஒரு விபத்தில் அவர...

ரஜினி வாக்களிப்பதை படமாக்கிய மீடியாவின் அடாவடி செயல்

தேர்தலில் வாக்களிப்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை. யாருக்கு வேண்டுமானாலும் அவர்கள் வாக்களிக்கலாம். ஆனால் அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்ற ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் தமிழ் சினிமாவில் உச்ச அந்தஸ்தை 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவித்துவரும் சூப்பர் ஸ்டார் ரஜினி, ஏதோ ஒரு கட்டத்தில் முதல்வர் பதவியில் அமர்ந்துவிடமாட்டாரா என ரசிகர்களால் (இன்னமும்) நம்பப்படும் இந்த விஷயத்தில் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களும், அரசியல்வாதிகளும் அவருக்கு சங்கடத்தை உண்டு பண்ணுவதில் குறியாக இருக்கிறார்கள். நேற்று அவர் வாக்களித்த போது, எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்ற ரகசியம் அம்பலமாகிவிட்டது. பொதுவாக அவர் வாக்களிக்க வரும்போது, ரசிகர்களை மிஞ்சும் அளவுக்கு மீடியாக்காரர்கள் மொய்த்துக் கொள்வார்கள். நேற்றும் அப்படித்தான் நடந்தது. அவர் வாக்களிக்கும் இடத்துக்குச் சென்றபோதும் காமிராக்கள் துரத்தின. அவர்களை அப்புறப்படுத்த ரஜினியும் முயற்சிக்கவில்லை. அவருடன் வந்திருந்தவர்களும் முயற்சிக்கவில்லை. இதனால் அவர் எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்பதை அப்படியே தெள்ளத் தெளிவாகப் படம்பிடித்துள்...

உளம் கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

நண்பர்கள் அனைவருக்கும் என் உளம் கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!! தொன்று தொட்டு சித்திரை மாத பிறப்பை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வந்த வேளையில் தேவையில்லாமல் அதை தைப் பொங்கலன்று மாற்றிய ஒரே காரணத்திற்காகவே தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வரவேண்டுமென வேண்டுகிறேன். இந்தப் புத்தாண்டில் ஹசாரே போன்ற நல்லவர்கள் மூலம் ஊழலுக்கும், குடும்ப ஆட்சிக்கும், எல்லையில்லாத சுரண்டலுக்கும், அதிகார துஷ்பிரயோகதிற்கும் முற்று புள்ளி வைக்க ஆண்டவனை வேண்டுவோம்.

என்னுடைய 5 (My Five) : என் மனம் கவர்ந்த ஐந்து சிறந்த ஆங்கிலப் படங்கள் : ஹிந்து நாளிதழில் வெளியான செய்தி

பிரபல ஆங்கில நாளிதழான "தி ஹிந்து ( The Hindu )" ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதனுடைய மெட்ரோ பிளஸ் பகுதியில் வாசகர்கள் அவரவருக்குப் பிடித்த ஐந்து ஆங்கிலப் படங்களை பற்றி எழுதி அனுப்பினால் அதை "My Five " என்ற தலைப்பில் பிரசுக்கிறது.  எவ்வளவோ ஆங்கிலப் படங்களைப் பார்க்கிறோம் முயன்று பார்க்கலாம் என்று என் மனம் கவர்ந்த ஐந்து படங்களை விமர்சித்து அனுப்பினேன். அது கடந்த 25 ம் தேதியன்றி வெளியானது. சற்று தாமதமாக உங்களுடன் அதைப் பகிர்ந்துகொள்வதற்கு மன்னிக்கவும். என்னுடைய படைப்பை நான் மிகவும் நேசிக்கும், மரியாதைக்குரிய தி ஹிந்து நாளிதழில் பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அந்த மகிழ்வை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்த பதிவு. கீழே உள்ள தொடர்புச் சுட்டியை (link ) க்ளிக் செய்தால் என்னுடைய படைப்பை படிக்கலாம். நன்றி. MY FIVE - The Hindu on 25/03/2011 தி ஹிந்து நாளிதழுக்கு என் நன்றி.

நேர்மை சாகாமல் இருக்க நமக்கு இன்னும் 100 அன்னா ஹசாரேக்கள் தேவை

  பிரதமர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்கு, சர்வ அதிகாரமும் படைத்த லோக்பால் அமைப்பை ஏற்படுத்த வேண்டுமென்றும், இதற்கான சட்ட வரைவு மசோதாவை வலுவுள்ளதாக தயாரிக்க வலியுறுத்தியும், காந்தியவாதியும், சமூக சேவகருமான அன்னா ஹசாரே, டில்லியில் கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார்.  ஹசாரே தரப்புடன் மத்திய அரசு பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி, உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டது. ஹசாரே தரப்பைச் சேர்ந்த சுவாமி அக்னிவேஷ், கிரண் பேடி உள்ளிட்டோருடன் அமைச்சர் கபில் சிபல் நேற்று முன்தினம் மட்டும் மூன்று முறை பேச்சு நடத்தினார். இந்தப் பேச்சின் முடிவில், ஹசாரே தரப்பின் முக்கிய கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்பதாக அரசாங்கம் அறிவித்தது. இந்த தகவல் வந்து சேர்ந்ததும், ஹசாரேவுக்கு தெரிவிக்கப்பட்டது. அரசாங்கம் அளித்திருந்த கடிதத்தை மேடையிலேய ஹசாரே வாசித்து காட்டினார். இருப்பினும், இவை அனைத்தையும் அரசாங்க கெஜட்டில் வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிட்டால், காலையில் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். ஏற்கனவே ...

இந்திய அணியிடம் மிதி வாங்கிய பாகிஸ்தான் அணி கேப்டன் அப்ரிதியின் கேவலமான பேட்டி

கிரிக்கெட் பற்றி நம்மில் பெரும்பாலோருக்கு அதிகம் தெரியாது என்றாலும் உலக தீவிரவாதிகளின் மையம் பாகிஸ்தான் என்பது நம்மூரில் உள்ள நாய்களுக்குக் கூட நன்றாக தெரியும். தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுப்பது முதல், அவர்களைச் சிறுவயது முதல் தீவிரவாத கொலைப் பயிற்சிகளில் ஈடுபடுத்தி உலகெங்கும் அப்பாவி மக்களைக் கொல்லத் தூண்டுவதுவரை பாகிஸ்தானின் கைவரிசை எவ்வளவு தூரம் இருக்கிறது என்பது நமக்கு நன்றாகவே தெரியும். இந்நிலையில், இந்திய அணியிடம் சமீபத்தில் முடிந்த உலகக் கோப்பை போட்டியில் மரண அடி வாங்கிய பாகிஸ்தான் அணியின் கேப்டன், அவர்கள் அணி அடைந்த கேவலமான தோல்வியை மறைக்க தேவையில்லாமல் ஒரு பேட்டியில் உளறி இருக்கிறார்: "என்னுடைய கருத்துப்படி நான் உண்மையை சொல்லவேண்டும்; அவர்கள் (இந்திய அணி) எப்போதுமே முஸ்லிம்களைப் போலவோ, பாகிஸ்தானியர்களைப் போலவோ பரந்த மனது உடையவர்கள் அல்ல. அல்லா நமக்கு பரந்த மனதைத் தந்திருக்கிறார்," என்று அந்தப் பேட்டியில் சொல்லியிருக்கிறார். இந்தத் தறுதலை அப்ரிதிக்கு தெரியாத விஷயங்கள் நிறைய இருக்கின்றன: உலகில் அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் இரண்டாவது பெரிய நாடு நம...

வீறு கொண்டு எழுந்த இந்தியா!! 28 ஆண்டுகளுக்கு பின் வெற்றிகரமாக உலகக் கோப்பையை வென்றது!!!

சொல்வதற்கு வார்த்தை எதுவும் இல்லை. தோனியின் அணி, நம் இந்திய அணி ஒரு நாள் போட்டியிலும் No . 1 என நிரூபித்துவிட்டது.  வாழ்க. இந்த வெற்றி தொடரட்டும். நம் இந்திய அணியைச் சேர்ந்த அத்தனை வீரர்களுக்கும் மனமாந்த வாழ்த்துக்கள். தோனி மச்சி, கலக்கிட்டப்பா.