Skip to main content

ஆன்மிக குரு ஸ்ரீ சத்ய சாய் பாபா மறைவு


இன்று காலை சுமார் 7 : 40 அளவில் உலகப் புகழ் பெற்ற ஸ்ரீ சத்ய சாய் பாபா மறைந்தார். இவர் கடவுளின் அவதாரமா இல்லையா என்பது பற்றி இங்கு நான் விவாதிக்கப் போவதில்லை. ஆனால் சாய் பாபாவைப் பிடிக்காதவர்கள் கூட சாய் பாபாவின் தொண்டு நிறுவனங்களின் சேவையை மறுக்க முடியாது. கோடி, கோடியாக வருமானம் வருவதை ஏழை மக்களின் உதவிக்காக பல்வேறு மருத்துவமனைகள், குடி தண்ணீர் திட்டங்கள்,  கல்வி நிறுவனங்கள் நிறுவியது சாய் பாபாவின் ஒரு பாராட்டத்தக்க செயலாகும். அவர் மறைவுக்குப் பிறகு கிட்டத்தட்ட ரூ.40 ,000 கோடி பெறுமானமுள்ள அவருடைய ட்ரஸ்ட்டின் நிலை என்னவாகும், சாய் பாபா உயிருடன் இருந்தபோது நடந்த அந்த தன்னலமற்ற தொண்டு தொடருமா என்பது பெரிய கேள்விக்குறி.

டாக்டர் ருத்ரன் போன்ற அதிமேதாவிகள் சாய் பாபா மக்களை ஏமாற்றினாரா, மக்களின் மூட நம்பிக்கையை வளர்த்தாரா என்பது போன்ற கேள்விகளைக் கேட்கும் போது, சாய் பாபா அவருடைய ட்ரஸ்ட்களின் மூலம் எவ்வளவு நல்ல காரியங்களை செய்து வந்தார் என்பதை ஏன் ஒப்புக் கொள்ள மறுக்க வேண்டும்? ஏழைகளின் உதவிக்காக ஒரு பைசா கூட செலவில்லாமல் ஓபன் ஹார்ட் சர்ஜரி வரை அவருடைய சூப்பர் ஸ்பெஷால்ட்டி மருத்துவமனைகளில் நடந்து வருகின்றன. ஆந்திர மாநிலம் மற்றும் தமிழ்நாட்டிலும் குடிதண்ணீர் வழங்குவதில் ஏரளாமான உதவிகளை அவருடைய ட்ரஸ்ட் செய்து வருகிறது. வசதி இல்லாத மாணவர்களின் படிப்பு வசதிக்காக அவருடைய பல்வேறு கல்வி நிறுவனங்கள் உதவி வருகின்றன.

தன்னை பகுத்தறிவுக் காவலன் என்று காட்டிகொள்ளும் நம் முதல்வரைப் போன்றவர்கள் கூட தமிழ்நாட்டு குடிதண்ணீருக்காக சாய் பாபாவின் உதவியைத்தான் நாடினார்கள். நம்முடைய துணை முதல்வர் ஸ்டாலின் வெட்கமே இல்லாமல், சென்னையில் கூவம் ஆறு சுத்தப்படுத்தும் பணிக்கு சாய் பாபாவிடம் பொருளுதவி கேட்பதாக பொது மேடைகளில் முழங்கினார். பகுத்தறிவை மக்களிடையே வளர்க்க முற்படும் அரசியல் கட்சிகள், அதனுடைய தலைவர்கள் யாராவது இதைப் போன்று தனக்கு வரும் வருமானத்தை செலவிட முன் வருவார்களா? இதற்கு முன் யாராவது செய்திருக்கிறார்களா? ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னைக்கு குடிதண்ணீர் வருவதற்காக சாய் ட்ரஸ்ட் ரூ.200 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது என்று இன்றைய இரங்கல் செய்தியில் முதல்வர் ஒப்புக்கொண்டுள்ளார்.

புட்டபர்த்திக்கு போகும் எந்த பக்தனும் கட்டாயமாக பொருளுதவி செய்ய வேண்டிய கட்டாயமில்லை. அங்கு வந்து குவியும் பொருளுதவி எல்லாமே பக்தர்கள் தாமாகவே முன்வந்து வழங்கும் நன்கொடைகள்தாம். கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் மூட நம்பிக்கையை வளர்த்து, வருமானத்தை பெருக்கிக் கொண்டு, சுயநலத்தோடு வாழும் எவ்வளவோ சாமியார்கள் இங்கு இருக்கிறார்கள். ஆனால், சாய் பாபா அவ்வகைச் சார்ந்தவரல்ல. உலகெங்கும் பரவியுள்ள அவருடைய தொண்டு நிறுவனங்களே அதற்கு சாட்சி. ஒருவர் மீது சேற்றைவாரி தூற்றும் முன் அவர் செய்த நல்ல காரியங்களை நினைவு கூற மறுப்பது டாக்டர் ருத்ரன் போன்ற அதிமேதாவிகளுக்கு நியாயமாகப்படுகிறதா? அல்லது மனிநிலை சரியில்லாதவர்களுடன் பழகிப்பழகி அவருக்கும் மனநிலை சரியில்லாமல் போய்விட்டதா?

Comments

Swami said…
I agree with your views. It is a wrong obituary by the doctor; it is not in good taste. But then you should not refuse to acknowledge his freedom of views.
SURYAJEEVA said…
உங்க பாக்கெட்டில நூறு ரூபாய் திருடிக் கொண்டு உங்கள் பயணத்துக்கே பத்து ரூபாய் திருப்பிக் கொடுக்கிறவன் நல்லவன் தான் சாமியோ...
Ram Sridhar said…
@suryajeeva
இன்னும் எத்தனை பேர் இதே பல்லவியை பாடப் போகிறீர்களோ தெரியவில்லை. நம்முடைய வரிப் பணத்தை எல்லாம் எடுத்து சொந்த செலவுக்கு/சொத்து சேர்ப்பதற்கு பயன் படுத்தும் அரசியல்வாதிகளுக்கும், எந்தவிதமான நிர்பந்தமும் இல்லாமல் வந்த நன்கொடைகளை மக்களின் நன்மைக்கு பயன்படுத்திய பாபா போன்ற உண்மையான ஆன்மிகவாதிகளுக்கும் உங்களால் வித்தியாசம் காண முடியவில்லை என்பதுதான் சோகம்.

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...