இன்று காலை சுமார் 7 : 40 அளவில் உலகப் புகழ் பெற்ற ஸ்ரீ சத்ய சாய் பாபா மறைந்தார். இவர் கடவுளின் அவதாரமா இல்லையா என்பது பற்றி இங்கு நான் விவாதிக்கப் போவதில்லை. ஆனால் சாய் பாபாவைப் பிடிக்காதவர்கள் கூட சாய் பாபாவின் தொண்டு நிறுவனங்களின் சேவையை மறுக்க முடியாது. கோடி, கோடியாக வருமானம் வருவதை ஏழை மக்களின் உதவிக்காக பல்வேறு மருத்துவமனைகள், குடி தண்ணீர் திட்டங்கள், கல்வி நிறுவனங்கள் நிறுவியது சாய் பாபாவின் ஒரு பாராட்டத்தக்க செயலாகும். அவர் மறைவுக்குப் பிறகு கிட்டத்தட்ட ரூ.40 ,000 கோடி பெறுமானமுள்ள அவருடைய ட்ரஸ்ட்டின் நிலை என்னவாகும், சாய் பாபா உயிருடன் இருந்தபோது நடந்த அந்த தன்னலமற்ற தொண்டு தொடருமா என்பது பெரிய கேள்விக்குறி.
டாக்டர் ருத்ரன் போன்ற அதிமேதாவிகள் சாய் பாபா மக்களை ஏமாற்றினாரா, மக்களின் மூட நம்பிக்கையை வளர்த்தாரா என்பது போன்ற கேள்விகளைக் கேட்கும் போது, சாய் பாபா அவருடைய ட்ரஸ்ட்களின் மூலம் எவ்வளவு நல்ல காரியங்களை செய்து வந்தார் என்பதை ஏன் ஒப்புக் கொள்ள மறுக்க வேண்டும்? ஏழைகளின் உதவிக்காக ஒரு பைசா கூட செலவில்லாமல் ஓபன் ஹார்ட் சர்ஜரி வரை அவருடைய சூப்பர் ஸ்பெஷால்ட்டி மருத்துவமனைகளில் நடந்து வருகின்றன. ஆந்திர மாநிலம் மற்றும் தமிழ்நாட்டிலும் குடிதண்ணீர் வழங்குவதில் ஏரளாமான உதவிகளை அவருடைய ட்ரஸ்ட் செய்து வருகிறது. வசதி இல்லாத மாணவர்களின் படிப்பு வசதிக்காக அவருடைய பல்வேறு கல்வி நிறுவனங்கள் உதவி வருகின்றன.
தன்னை பகுத்தறிவுக் காவலன் என்று காட்டிகொள்ளும் நம் முதல்வரைப் போன்றவர்கள் கூட தமிழ்நாட்டு குடிதண்ணீருக்காக சாய் பாபாவின் உதவியைத்தான் நாடினார்கள். நம்முடைய துணை முதல்வர் ஸ்டாலின் வெட்கமே இல்லாமல், சென்னையில் கூவம் ஆறு சுத்தப்படுத்தும் பணிக்கு சாய் பாபாவிடம் பொருளுதவி கேட்பதாக பொது மேடைகளில் முழங்கினார். பகுத்தறிவை மக்களிடையே வளர்க்க முற்படும் அரசியல் கட்சிகள், அதனுடைய தலைவர்கள் யாராவது இதைப் போன்று தனக்கு வரும் வருமானத்தை செலவிட முன் வருவார்களா? இதற்கு முன் யாராவது செய்திருக்கிறார்களா? ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னைக்கு குடிதண்ணீர் வருவதற்காக சாய் ட்ரஸ்ட் ரூ.200 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது என்று இன்றைய இரங்கல் செய்தியில் முதல்வர் ஒப்புக்கொண்டுள்ளார்.
புட்டபர்த்திக்கு போகும் எந்த பக்தனும் கட்டாயமாக பொருளுதவி செய்ய வேண்டிய கட்டாயமில்லை. அங்கு வந்து குவியும் பொருளுதவி எல்லாமே பக்தர்கள் தாமாகவே முன்வந்து வழங்கும் நன்கொடைகள்தாம். கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் மூட நம்பிக்கையை வளர்த்து, வருமானத்தை பெருக்கிக் கொண்டு, சுயநலத்தோடு வாழும் எவ்வளவோ சாமியார்கள் இங்கு இருக்கிறார்கள். ஆனால், சாய் பாபா அவ்வகைச் சார்ந்தவரல்ல. உலகெங்கும் பரவியுள்ள அவருடைய தொண்டு நிறுவனங்களே அதற்கு சாட்சி. ஒருவர் மீது சேற்றைவாரி தூற்றும் முன் அவர் செய்த நல்ல காரியங்களை நினைவு கூற மறுப்பது டாக்டர் ருத்ரன் போன்ற அதிமேதாவிகளுக்கு நியாயமாகப்படுகிறதா? அல்லது மனிநிலை சரியில்லாதவர்களுடன் பழகிப்பழகி அவருக்கும் மனநிலை சரியில்லாமல் போய்விட்டதா?

Comments
இன்னும் எத்தனை பேர் இதே பல்லவியை பாடப் போகிறீர்களோ தெரியவில்லை. நம்முடைய வரிப் பணத்தை எல்லாம் எடுத்து சொந்த செலவுக்கு/சொத்து சேர்ப்பதற்கு பயன் படுத்தும் அரசியல்வாதிகளுக்கும், எந்தவிதமான நிர்பந்தமும் இல்லாமல் வந்த நன்கொடைகளை மக்களின் நன்மைக்கு பயன்படுத்திய பாபா போன்ற உண்மையான ஆன்மிகவாதிகளுக்கும் உங்களால் வித்தியாசம் காண முடியவில்லை என்பதுதான் சோகம்.