Skip to main content

நேர்மை சாகாமல் இருக்க நமக்கு இன்னும் 100 அன்னா ஹசாரேக்கள் தேவை

 

பிரதமர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்கு, சர்வ அதிகாரமும் படைத்த லோக்பால் அமைப்பை ஏற்படுத்த வேண்டுமென்றும், இதற்கான சட்ட வரைவு மசோதாவை வலுவுள்ளதாக தயாரிக்க வலியுறுத்தியும், காந்தியவாதியும், சமூக சேவகருமான அன்னா ஹசாரே, டில்லியில் கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார். 

ஹசாரே தரப்புடன் மத்திய அரசு பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி, உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டது. ஹசாரே தரப்பைச் சேர்ந்த சுவாமி அக்னிவேஷ், கிரண் பேடி உள்ளிட்டோருடன் அமைச்சர் கபில் சிபல் நேற்று முன்தினம் மட்டும் மூன்று முறை பேச்சு நடத்தினார். இந்தப் பேச்சின் முடிவில், ஹசாரே தரப்பின் முக்கிய கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்பதாக அரசாங்கம் அறிவித்தது.

இந்த தகவல் வந்து சேர்ந்ததும், ஹசாரேவுக்கு தெரிவிக்கப்பட்டது. அரசாங்கம் அளித்திருந்த கடிதத்தை மேடையிலேய ஹசாரே வாசித்து காட்டினார். இருப்பினும், இவை அனைத்தையும் அரசாங்க கெஜட்டில் வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிட்டால், காலையில் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். ஏற்கனவே அளிக்கப்பட்டிருந்த உறுதிமொழியின்படி, கெஜட் அறிவிப்பு வெளியானதை அடுத்து, நேற்று காலையில் 10.45 மணியளவில் அன்னா ஹசாரே தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். பழச்சாறு கூட அருந்தாமல், வெறும் தண்ணீரை மட்டும் கண்ணாடி டம்ளரில் சிறுமி ஒருவர் தர, அதை வாங்கிக் குடித்தார். பிறகு அந்த சிறுமியிடம் உன்னுடைய பெயர் என்ன என்று கேட்டறிந்து, தலையை தடவிக் கொடுத்து தனது மகிழ்ச்சியை ஹசாரே வெளிப்படுத்தினார். 

இதையடுத்து, ஹசாரேயுடன் சேர்ந்து நான்கு நாட்களாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்த சில பெண்கள் உட்பட 300க்கும் அதிகமானோரும் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டனர். இதில், பலரும் ஹசாரே தரும் தண்ணீரை அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள விரும்பினர். இதன் காரணமாக சிலருக்கு தண்ணீரைத் தந்து பருகச் செய்தார் ஹசாரே. உண்ணாவிரதத்திற்கு வந்திருந்த பலரும் ஹசாரேயின் அருகில் சென்று அவரது பாதத்தை தொட்டு வணங்கினர்.

இதன் பின், அங்கு கூடியிருந்தவர்களிடையே ஹசாரே பேசியதாவது: ஊழலுக்கு எதிரான போராட்டம் இத்துடன் முடிந்து விடாது. இது, வெறும் ஆரம்பம் மட்டுமே. இனிமேல் தான் நிஜமான சண்டை உள்ளது. அளித்த வாக்குறுதியின்படி, லோக்பால் மசோதாவை நிறைவேற்றத் தவறினால், மீண்டும் எனது போராட்டம் தொடரும். வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வரை தான் இறுதி கெடு; அதற்குள் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையெனில், நானே தேசியக்கொடி ஏந்தி போராட்டத்தில் குதிப்பேன். பார்லிமென்டிலும், அமைச்சரவையிலும் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன், நிறைய தடங்கல் வரத்தான் போகிறது. ஆயினும் அத்தனையையும் முறியடிக்க மக்கள் ஒற்றுமை காட்ட வேண்டும். 

இப்போதைய வெற்றி, வருங்கால இந்தியாவின் இளைய சமுதாயத்திற்கு கிடைத்த வெற்றி.ஊடகங்கள் மிகப்பெரிய சேவையை ஆற்றியுள்ளன. இந்த போராட்டத்தை நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் எடுத்துச் சென்று தெரிவித்த அவர்களின் சேவை அளப்பரியது. இது முதற்கட்ட போராட்டம் மட்டுமே. வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறு இல்லையெனில், டில்லி செங்கோட்டையில் மக்களைத் திரட்டி, தேசியக் கொடியை ஏற்றி, இரண்டாம் சுதந்திரப் போரை பிரகடனப்படுத்துவோம். ஆகஸ்ட் 15க்குள் மசோதா நிறைவேற்றப்பட்டால், மகிழ்ச்சியுடன் பிரதமர் மன்மோகன் சிங்கை வரவேற்போம். இம்மசோதா நிறைவேறும் வரை அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். பார்லிமென்டில் இம்மசோதா நிறைவேறுவதில் தடங்கல் ஏற்பட்டால், தேசியக் கொடியை எனது தோளில் சுமந்துபடி நானே லோக்சபாவுக்குள் நுழையும் போராட்டம் நடத்துவேன். இவ்வாறு ஹசாரே பேசினார்.

வரலாற்று சிறப்புமிக்க மசோதா: மன்மோகன்: லோக்பால் மசோதா தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டிருந்ததாவது: லோக்பால் மசோதா, மிக முக்கியமான ஒன்று. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவை, வரும் மழைக்கால கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தி, நிறைவேற்ற அரசு உறுதி பூண்டுள்ளது. பொதுமக்கள் தரப்பும், அரசு தரப்பும் லோக்பால் மூலம் இணைந்து செயல்படுவது ஜனநாயகத்துக்கு நலம் தரக்கூடிய விஷயம். அதைவிட, ஊழலுக்கு எதிராக இரு தரப்புமே ஒற்றுமை காட்டுவது மிகவும் முக்கியமான அம்சம். அரசு தரப்பில், இடைவிடாமல் எடுக்கப்பட்ட முயற்சிகள் காரணமாக, அன்னா ஹசாரே, தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள முன்வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 அன்னா ஹசாரே போன்ற தன்னலமில்லாத, உண்மையான காந்தியவாதிகள் இன்னும் நிறைய பேர் நம் நாட்டுக்குத் தேவை. எங்கும் எதிலும் ஊழல் மலிந்துள்ள நிலை மாறவேண்டுமென்றால் இன்றைய இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். இதற்கு முதற்படியாக ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு போட ஆர்வம் காட்டவேண்டும். 

என்னைப் போன்ற 40 வயதிற்கு மேற்பட்டவர்கள்தான் வாக்கு போடவேண்டும், அரசியலில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் நம் இளைஞர்களுக்கு மாற வேண்டும். இல்லாவிட்டால், இன்றைய தினசரிகளில் தெனாவட்டாக இந்தத் தேர்தல் முடிந்தவுடன் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் நான்தான் முதல்வர் என்று 87 வயதான பின்னரும் பதவி  மற்றும் பணவெறியுடன் இருக்கும் கருணாநிதி போன்றவர்கள் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள்.

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...