கிரிக்கெட் பற்றி நம்மில் பெரும்பாலோருக்கு அதிகம் தெரியாது என்றாலும் உலக தீவிரவாதிகளின் மையம் பாகிஸ்தான் என்பது நம்மூரில் உள்ள நாய்களுக்குக் கூட நன்றாக தெரியும். தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுப்பது முதல், அவர்களைச் சிறுவயது முதல் தீவிரவாத கொலைப் பயிற்சிகளில் ஈடுபடுத்தி உலகெங்கும் அப்பாவி மக்களைக் கொல்லத் தூண்டுவதுவரை பாகிஸ்தானின் கைவரிசை எவ்வளவு தூரம் இருக்கிறது என்பது நமக்கு நன்றாகவே தெரியும்.
இந்நிலையில், இந்திய அணியிடம் சமீபத்தில் முடிந்த உலகக் கோப்பை போட்டியில் மரண அடி வாங்கிய பாகிஸ்தான் அணியின் கேப்டன், அவர்கள் அணி அடைந்த கேவலமான தோல்வியை மறைக்க தேவையில்லாமல் ஒரு பேட்டியில் உளறி இருக்கிறார்: "என்னுடைய கருத்துப்படி நான் உண்மையை சொல்லவேண்டும்; அவர்கள் (இந்திய அணி) எப்போதுமே முஸ்லிம்களைப் போலவோ, பாகிஸ்தானியர்களைப் போலவோ பரந்த மனது உடையவர்கள் அல்ல. அல்லா நமக்கு பரந்த மனதைத் தந்திருக்கிறார்," என்று அந்தப் பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
இந்தத் தறுதலை அப்ரிதிக்கு தெரியாத விஷயங்கள் நிறைய இருக்கின்றன: உலகில் அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் இரண்டாவது பெரிய நாடு நம் இந்தியா. எந்த முஸ்லிம் நாடுகளிலும் சிறுபான்மை மதங்களுக்கு சிறப்பு சலுகைகள் இல்லை. நம் இந்தியாவில் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் முஸ்லிம் மக்களுக்கு இடஒதுக்கீடு முதல் பல்வேறுபட்ட சலுகைகள் உள்ளன. இதையெல்லாம் பரந்த மனம் இல்லாமல் செய்ய முடியாது.
பாகிஸ்தான் போன்ற முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம் அல்லாதோர் ஒரு சிறு பதவி கூட வகிக்க முடியாது. ஜாகிர் ஹுசைன் முதல் அப்துல் கலாம் வரை நிறைய முஸ்லிம் மதத்தினர் நம் இந்தியாவில் ஜனாதிபதி பதவியில் இருந்து பல்வேறுவிதமான பொறுப்பான பதவிகளில் இருந்து வருகிறார்கள். பாகிஸ்தான் அணிக்கு இதுவரை முஸ்லிம் மதத்தினரைத் தவிர வேறு யாரும் கேப்டனாக இருந்ததில்லை, இனிமேலும் முடியாது. நம் அணியில் அசாருதின் போன்றவர்கள் கேப்டனாக இருந்திருக்கிறார்கள். இப்போதுள்ள அணியில் யூசுப் பத்தான், ஜாகிர் கான் ஆகியோர் இடம்பெற்று திறம்பட விளையாடி வருகிறார்கள்.
முஸ்லிம்களை இந்தியாவின் ஒரு அங்கமாக மட்டுமே மற்ற மதத்தினர் எண்ணி ஒரு இணக்கமான சூழ்நிலையில் வாழ்ந்து வரும்போது அப்ரிதியின் கேவலமான புத்தி இந்த பேட்டியின் மூலம் வெளிப்பட்டிருக்கிறது.
முக்கியமாக, அப்ரிதி தேவையில்லாமல் இங்கே மதத்தை இழுத்திருக்கிறார். இதைப் போன்ற மதவெறி பிடித்த பிறவிகளை இனிமேல் இந்தியாவில் விளையாட அனுமதித்தால் அது முட்டாள்தனம்.
Comments