Skip to main content

Posts

Showing posts from January, 2013

விஸ்வரூபம்....விமர்சனம்

விஸ்வரூபம் படம் சாதாரணமாக வந்திருந்தால் இந்த அளவு கவனிக்கப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை. காரணம் , அத்தனை சுலபத்தில் வசீகரிக்காத அதன் கதை! அமெரிக்காவில் ஆரம்பிக்கிறது கதை. பிராமணப் பெண் பூஜாகுமார் , பி.எச்.டி படிப்பதற்காக , அதிக வயசு வித்தியாசம் உள்ள கமலை திருமணம் செய்வதாக ஒப்பந்தம் போட்டு அமெரிக்கா வருகிறார். ஆனால் வந்த இடத்தில் கம்பெனி பாஸுடன் கள்ளக் காதல். நடன ஆசிரியரான கணவருக்கும் அவரது மாணவி ஆன்ட்ரியாவுக்கும் கள்ளத் தொடர்பு இப்பதாக சந்தேகம் பூஜாவுக்கு. இது உண்மையாக இருந்தால் கமலை வெட்டிவிடுவது எளிதாக இருக்கும் என்று ப்ரைவேட் டிடெக்டிவ்வை நியமிக்கிறார். அப்போதுதான் கமல் ஒரு முஸ்லிம் என்பது அம்பலமாகிறது. அதேநேரம் கமலை பின் தொடரும் டிடெக்ட்டிவ் கொல்லப்படுகிறார். அப்பாவி கமலும் , வில்லங்க பூஜாவும் வில்லன்கள் கையில் மாட்டிக்கொள்கிறார்கள். கமல் திடீரென வீராவேசமாக, வழக்கமான ஹீரோ போல  , வில்லன்களை அடித்து நொறுக்க , தனது அப்பாவிக் கணவனா இப்படி என்று பூஜாகுமார் விழிக்க , ஆக்‌ஷன் படமாக வேறு தளத்தில் , ஆப்கன் தலிபான் பின்னணியில் விரிகிறது. ப்ளாஷ்பேக...

இந்தியா.....மகத்தான இந்தியா.....

உலகின் பெரிய ஜனநாயக நாடு இந்தியா, என்பதில் பெருமை கொள்வோம். 121 கோடி மக்கள் தொகையை கொண்ட நம் நாட்டில் மொழி, மதம், இனம் என வேறுபாடுகள் இருந்த போதும், ஜனநாயகப் பாதையில் தொடர்ந்து பயணிப்பது தான் சிறப்பம்சம்.விஞ்ஞானம், அறிவியல், விளையாட்டு, கல்வி, சினிமா என அனைத்து துறைகளிலும் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக, இந்தியா முன்னேறிவருகிறது. கடந்த 15 ஆண்டுகளில்தனிமனித வருமானம் அதிகரித்துள்ளது.வடக்கில் பனிபடர்ந்த இமயமலை,தெற்கில் பசுமையான கேரளா,மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் வடகிழக்கு மாநிலங்கள், பாலைவனம் உள்ள ராஜஸ்தான் என புவியியல் அமைப்பிலும் பல வித்தியாசங்கள்.  சரியும் ஜனநாயகம் இவ்வளவு சிறப்புமிக்க இந்தியஜனநாயகம், இன்றைய நவீன காலத்தில் பல்வேறு பிரச்னைகளில் சிக்கிதவிக்கிறது. ஜனநாயகத்தின் தலைமை இடமான பார்லிமென்ட், பயனில்லாத இடமாக மாறிக்கொண்டிருக்கிறது. காந்தி, நேரு, வல்லபாய் படேல், நேதாஜி என ஆரம்பகால தலைவர்களின் சிறப்பான பணியை தொடர முடியாமல், தற்போதைய அரசியல்வாதிகள் தடுமாறுகின்றனர். இதனால் ஜனநாயகத்தின் மீதுமக்கள் நம்பிக்கை இழக்கின்றனர். தற்போதைய எம்.பி.,க்களில் மூன்றில் ஒ...

தோசையோ தோசை...மலையாள தோசை

இட்லி மற்றும் தோசை தமிழர்களின் பாரம்பரிய உணவு. தற்போதைய துரித உணவு (fast food) காலத்திற்கேற்ப தோசை பல்வேறு மாறுதல்களை சந்தித்துள்ளது. பாரம்பரியமான மாவு தோசை, இப்போது சீஸ் தோசை, சிக்கன் தோசை, கீமா தோசை மற்றும் பல்வேறு வடிவங்களை எடுத்துள்ளது. இப்போது, கேரளாவில் ரிலீஸ் ஆகப்போகும் கம்மத் & கம்மத் என்ற படத்தில் கேரள சூப்பர் ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் திலீப் ஆகியோர் தோசையின் பெருமையைப் பாடி ஆடும் ஆட்டம் பெரிய புகழ் பெற்றுள்ளது. இந்தப் பாட்டிலேயே "தமிழகத்தின் பெருமை சொல்லும் தோசை" என்ற வரியும் வருவது ஒரு சிறப்பு. தோசை பாட்டை ரசிக்க இதோ ஒரு வாய்ப்பு:

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி...

லஞ்சம் - சுஜாதா

 லஞ்சம் என்பதற்கு தூய தமிழ்ச் சொல்லாக ‘ கையூட்டு ‘ என்பதைப் பயன்படுத்துகிறார்கள். எனக்குத் தெரிந்தவரை இந்தச் சொல் 1910-ல் கோபிநாத் ராவின் ‘ சோழ வம்ச சரித்திரச் சுருக்கம் ‘ என்ற புத்தகத்தில் முதலில் வந்துள்ளது. லஞ்சம், சோழர் காலத்திலிருந்து இருந்திருக்கிறது என்பதற்கு மறைமுகமாக கல்வெட்டு ஆதாரங்கள் இருப்பதை நீலகண்ட சாஸ்திரியின் ‘The Cholas ‘ல் காணமுடிகிறது. சோழர்காலத்தில் அரச குற்றங்கள் செய்தவர்களை ஒரு மரச்சட்டத்தில் கட்டிவைத்து எழுபதிலிருந்து நூறு பிரம்படி கொடுத்ததாகக் கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன. சில சமயங்களில் தலையையும் கொய்திருக்கிறார்கள்… அல்லது யானையால் மிதித்திருக்கிறார்கள். ஆனால், சில சமயங்களில் தண்டனை அவ்வளவு தீவிரமானதாக இல்லை. கோயிலுக்கு ஒரு வருஷத்துக்கு தினம் ஒரு விளக்கு ஏற்றினால் போதும் என்று கொலைக்குற்றங்கள்கூட மன்னிக்கப்பட்டிருக் கின்றன. இதன் பின்னணியில் கையூட்டின் கை இருப்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். இப்போதெல்லாம் ‘ இவர்கள் ‘ விளக்கேற்றுவதில்லை. சிரித்துக் கொண்டே ஜெயிலுக்குப் போய், அடுத்த திங்கட்கிழமை ஜாமீனில் வெற்றி வேந்தர்கள் போ...

36-ம் சென்னை புத்தகக் கண்காட்சி

இந்தப் புத்தகக் கண்காட்சியை, வருடம் தவறாமல், கிட்டத்தட்ட 25 வருடங்களாக பார்த்து வருகிறேன். முதலில் கடலூரில் இருந்தபோது ஆரம்பித்த பழக்கம் (1988 என்று நினைக்கிறேன்), பிறகு சேலம் சென்ற போதும் தொடர்ந்தது. 1996-இல் சென்னைக்கு இடம் பெயர்ந்த பின் சுலபமாக செல்ல முடிந்தது. கன்னிமரா ஹோட்டலுக்கு எதிரே உள்ள காயிதே மில்லத் கல்லூரியில் ஆரம்பித்து எல்லா இடங்களிலும் இந்த புத்தகக் கண்காட்சிக்கு சென்று புத்தகம் வாங்குவது என்பது ஒரு சம்பிரதாயமே.  என்னுடைய புத்தகங்களில் ஒரு பகுதி வருடம் முழுவது லாண்ட்மார்க், ஹிக்கின்போத்தம்ஸ் போன்ற கடைகளில் புத்தகங்களை வாங்கிக் கொண்டிருந்த நான், தற்போது இரண்டு வருடங்களாக flipkart, amazon என ஆன்லைன் புத்தகக் கடைகளில் வாங்குகிறேன். இவ்வகை ஆன்லைன் கடைகளில் (??) வாங்குவது என்பது மிக வசதியான ஒன்று. பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை: பெட்ரோல் செலவு, அலைச்சல் மிச்சம்  நடுஇரவு 12 மணிக்குக்கூட ஷாப்பிங் செய்யலாம்  வருடம் முழுவதும் தள்ளுபடி கிடைக்கிறது (தள்ளுபடியை கழிவு என்று சொல்லுகிறார்கள். எனக்கு என்னவோ அந்த வார்த்தையை புத்தகங்களுடன...

சுவாரசியமான பதிவு - சுஜாதா என்ற சிநேகிதர் - ரா.கி.ரங்கராஜன்

நன்றி: பால்ஹனுமான் வலைப்பதிவு  சுஜாதாவின் பொழுதுபோக்கு வேலிகளை உடைப்பது. கதைக்கு எடுத்துக் கொள்கிற விஷயத்திலேயும், கதையை எழுதுகிற நடையிலேயும், கதைக்குக் கொடுக்கிற அமைப்பிலேயும் பழைய வேலிகளை உற்சாகமாக உடைத்துக் கொண்டு தனிக்காட்டு ராஜாவாய்த் துள்ளுகிறார் அவர். என்ன புதுமைகளைப் புகுத்தினாலும் தமிழினால் தாங்க முடியும் என்பதை உணர்ந்திருப்பதால் பேனாவை வைத்துக் கொண்டு சுதந்திரமாய்ச் சிலம்பு விளையாடுகிறார். ஓரோர் சமயம் அவருடைய கையெழுத்துப் பிரதியைப் பார்க்க நேர்கையில், “ டெலிபோனை வைத்து விட்டு, ‘வஸந்த், பதினைஞ்சு நிமிஷத்திலே தயாராகணும்’! ” என்று வாக்கியம் மொட்டையாக நின்று விடுவதைக் கண்டு நான் திடுக்கிட்டதுண்டு.  அந்த இலக்கண விநோதத்தை அனுமதிக்கக் கூடாதென்று முடிவு செய்து, உடனே பேனாவை எடுத்து, ‘ என்றான் ‘ என்று முடிப்பேன். முடித்துவிட்டு வாசித்துப் பார்த்தால், அவர் மொட்டையாக விட்டிருந்தபோது இருந்த அழுத்தம் இந்தப் பூர்த்தியான வாக்கியத்தில் இல்லை போலிருக்கும். முணுமுணுத்தபடியே அந்த ‘ என்றானை ‘ அடித்துவிடுவேன். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~...

பொங்கல் பரிசு !! - சுஜாதாவின் சிறப்பு சிறுகதை : முதல் மனைவி

(ஆனந்தவிகடன் -22/10/1989) கல்லூரியில் இருந்து திரும்பி வருவதற்குள் மழை பலமாகி, கடைசி பர்லாங்கில் ராஜலட்சுமி நனைந்துவிட்டாள். போதாக்குறைக்கு பஸ் ஒன்று உற்சாகமாக சகதியையும் சேற்று நீரையும் அவள் மேல் வாரி இறைத்துவிட, வீட்டு வாசலை அடையும்போது கோபம் மூக்கு நுனியில் துவங்கியிருந்தது. பால்காரன் வரவில்லை. மேனகா சாவியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாள். பூட்டின வீட்டுக்குள் டெலிபோன் பிடிவாதமாக ஒலித்துக்கொண்டு இருந்தது. கோபம் இப்போது அவள் பார்வையை மறைத்தது. கைகளை இறுக்க அழுத்திக்கொண்டதால், ரத்தம் செத்து மணிக்கட்டு வெளுப்பாகி இருந்தது. ராஜலட்சுமி, கோபத்தைக் குறை. கோபத்தைக் குறைத்தால்தான் பிளட் பிரஷர் விலகும். பால் வராவிட்டால் என்ன? மேனகா கொஞ்சம் லேட் பண்ணால் என்ன? டெலிபோன் ஒலித்தால் என்ன? மேனகா சற்றே பயத்துடன் சைக்கிளில் இருந்து இறங்கினாள். அவள் பேன்ட்டும் பட்டனில் அலட்சியமாக இருந்த சட்டையும் ராஜலட்சுமியின் கோபத்தை இன்னும் அதிகரித்தன. ”எப்பம்மா வந்தே?” ”போன் அடிக்கிறது… கதவைத் திற” என அதட்டினாள். மேனகா, ”ஈஸி மம்மி!” ”சரி போடீ… கதவைத் திற முதல்ல… அப்பு...