இட்லி மற்றும் தோசை தமிழர்களின் பாரம்பரிய உணவு. தற்போதைய துரித உணவு (fast food) காலத்திற்கேற்ப தோசை பல்வேறு மாறுதல்களை சந்தித்துள்ளது. பாரம்பரியமான மாவு தோசை, இப்போது சீஸ் தோசை, சிக்கன் தோசை, கீமா தோசை மற்றும் பல்வேறு வடிவங்களை எடுத்துள்ளது.
இப்போது, கேரளாவில் ரிலீஸ் ஆகப்போகும் கம்மத் & கம்மத் என்ற படத்தில் கேரள சூப்பர் ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் திலீப் ஆகியோர் தோசையின் பெருமையைப் பாடி ஆடும் ஆட்டம் பெரிய புகழ் பெற்றுள்ளது. இந்தப் பாட்டிலேயே "தமிழகத்தின் பெருமை சொல்லும் தோசை" என்ற வரியும் வருவது ஒரு சிறப்பு.
தோசை பாட்டை ரசிக்க இதோ ஒரு வாய்ப்பு:
Comments