Skip to main content

இந்தியா.....மகத்தான இந்தியா.....


உலகின் பெரிய ஜனநாயக நாடு இந்தியா, என்பதில் பெருமை கொள்வோம். 121 கோடி மக்கள் தொகையை கொண்ட நம் நாட்டில் மொழி, மதம், இனம் என வேறுபாடுகள் இருந்த போதும், ஜனநாயகப் பாதையில் தொடர்ந்து பயணிப்பது தான் சிறப்பம்சம்.விஞ்ஞானம், அறிவியல், விளையாட்டு, கல்வி, சினிமா என அனைத்து துறைகளிலும் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக, இந்தியா முன்னேறிவருகிறது. கடந்த 15 ஆண்டுகளில்தனிமனித வருமானம் அதிகரித்துள்ளது.வடக்கில் பனிபடர்ந்த இமயமலை,தெற்கில் பசுமையான கேரளா,மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் வடகிழக்கு மாநிலங்கள், பாலைவனம் உள்ள ராஜஸ்தான் என புவியியல் அமைப்பிலும் பல வித்தியாசங்கள். 

சரியும் ஜனநாயகம்

இவ்வளவு சிறப்புமிக்க இந்தியஜனநாயகம், இன்றைய நவீன காலத்தில் பல்வேறு பிரச்னைகளில் சிக்கிதவிக்கிறது. ஜனநாயகத்தின் தலைமை இடமான பார்லிமென்ட், பயனில்லாத இடமாக மாறிக்கொண்டிருக்கிறது. காந்தி, நேரு, வல்லபாய் படேல், நேதாஜி என ஆரம்பகால தலைவர்களின் சிறப்பான பணியை தொடர முடியாமல், தற்போதைய அரசியல்வாதிகள் தடுமாறுகின்றனர். இதனால் ஜனநாயகத்தின் மீதுமக்கள் நம்பிக்கை இழக்கின்றனர். தற்போதைய எம்.பி.,க்களில் மூன்றில் ஒரு பகுதியினர், கிரிமினல் பின்னணி உடையவர்கள். எந்த கூட்டத் தொடருமே, முழுமையான நாட்களை நிறைவு செய்வதில்லை. ஒவ்வொரு திட்டத்திலும் கோடிக்கணக்கில் ஊழல் நடக்கிறது.ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் மாறி மாறி அவர்கள் செய்த ஊழல்களை பற்றி பேசவே நேரம் கிடைக்கவில்லை. பின், மக்களைப்பற்றி சிந்திக்க எப்படி நேரம் வரும். 

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள, இந்தியர்களின் கறுப்பு பணத்தை பற்றிய விவரம் இன்றளவும் வெளியிடப்படவில்லை. வெளிநாட்டு, உள்நாட்டு பயங்கரவாதம், நவீன இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.நாட்டின் உயரிய விசாரணை அமைப்பான சி.பி.ஐ., ஆளும் கட்சியின், கைப்பாவையாக செயல்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. ஒரு ஆட்சியில் போடப்படும் வழக்குகள், அடுத்த ஆட்சியில், அதன் சுவடே இல்லாமல் தள்ளுபடி செய்யப்படுகிறது. இது,குற்றங்கள் அதிகரிக்கத்தான் வழி செய்யும். வாரிசு அரசியல், அசுர வளர்ச்சி பெறுகிறது. அதே நேரம், அரசியலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு இன்னும் கானல் நீராக உள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், ஆண்டுதோறும் அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர், ஒரு நாளைக்கு 100 ரூபாய்க்கும் கீழ் வருமானம் பெறுபவர்கள். நாளுக்குநாள் உயரும் விலைவாசியால், இவர்கள் இன்னலுக்கு ஆளாகின்றனர். இதற்கு ஒரே தீர்வு, பெரும்பான்மை மக்களுக்கு பயன்பெறக் கூடிய திட்டங்களை நிறைவேற்றுவதற்குஅரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். மறுபக்கம், ஜனநாயகத்தை பாதுகாக்க, மக்களும் ஒத்துழைக்கவேண்டும்.


மிரட்டும் படைபிரிவுகள்

டில்லியில் இன்று நடக்கும் குடியரசு தின அணிவகுப்பில், இந்திய ராணுவத்தில் புதிதாகசேர்க்கப்பட்ட ஏவுகணைகள், புதிய கண்டுபிடிப்புகள், விமானப்படையில் சமீபத்தில்சேர்க்கப்பட்ட விமானங்களின் மாதிரிகளை காணலாம். கப்பல்படையின் அணிவகுப்பும் நடக்கும். குதிரைப்படைகள் அணிவகுப்பு, பாராசூட் ரெஜிமண்ட், காவலர்களின் பிரிகேட், குமோன் ரெஜிமண்ட், அசாம் ரெஜிமண்ட், மகார் ரெஜிமண்ட், கூர்கா ரைபிள் ரெஜிமண்ட் போன்ற துணை ராணுவ படைகளின் அணிவகுப்புகள் இடம்பெறும். துணை ராணுவம், எல்லைபாதுகாப்பு படை, கடலோர காவல் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படை, மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை, ரயில்வேபாதுகாப்பு படை, என்.சி.சி., மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்களின் அணிவகுப்புகள் இடம்பெறும். தொடர்ந்து முன்னாள் படை வீரர்களின் அணிவகுப்பு இடம்பெறும்.

பாசறை திரும்புதல்

குடியரசு தினத்தின் இறுதியாக ஜன., 29ல் பாசறை திரும்பும் நிகழ்ச்சிநடைபெறும். இதில், முப்படைகளின்சார்பில் பேண்டு வாத்தியங்கள் முழங்க, ஜனாதிபதிக்கு வணக்கம் செலுத்தப்படும். தேசிய கீதத்துடன் விழாநிறைவடையும

ஒரே இந்தியா உருவானது எப்படி

சுதந்திரத்தின் போது, பல சிறு சமஸ்தானங்களாக இந்தியா பிரிந்திருந்தது. இவற்றை ஒருங்கிணைப்பது சவாலாக இருந்தது. ஒருங்கிணைப்பு பணியில், சர்தார் வல்லபாய் படேல்முக்கிய பங்கு வகித்தார். 565 சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து, இந்தியா என்ற ஒரேகொடையின் கீழ் கொண்டு வந்தார். பெரும்பாலானவை தாமே வந்தும், பேச்சுவார்த்தையின் மூலமும்இணைக்கப்பட்டன. ஐதராபாத், காஷ்மீர், ஜூனாகாத், ஜோத்பூர் ஆகியவை, ராணுவ நடவடிக்கையின் மூலம் இணைந்தன. உறுதியாக நின்று ஒருங்கிணைப்பில் ஈடுபட்ட வல்லபாய் படேல், இந்தியாவின் "இரும்பு மனிதர்' என பெயர் பெற்றார்.

"ஆப்பரேஷன் போலோ': 

ஐதராபாத், இந்தியாவுடன் இணைய மறுத்தது. சுதந்திரமாகவே செயல்படும் என அதன் நிஜாம்அரசாணை வெளியிட்டார். அப்பகுதியை இணைப்பது முக்கியமாக கருதப்பட்டது. பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து அரசு, "ஆப்பரேஷன் போலோ' என்ற ராணுவ நடவடிக்கையை 1948, செப்.13ம் நாள் துவக்கியது. சில நாட்களிலேயே அப்பகுதியைராணுவம், கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.குஜராத்தின் தென்மேற்குப் பகுதியில் இருந்த ஜூனாகாத், பாகிஸ்தானுடன் இணைய விருப்பம் தெரிவித்தது. இருப்பினும், அது இந்தியாவுடன் இணைவது தான் நியாயம் என மவுண்ட் பேட்டன் தெரிவித்தார். இதனால் அப்பகுதி ராணுவ நடவடிக்கை மூலம் இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது. எல்லைப் பகுதிகளான ஜோத்பூர் மற்றும் ஜெய்ஷல்மார் ஆகியவை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தன. அப்பகுதி மக்களின் விருப்பப்படி, இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது.

அரசின் கடமை

* நாட்டு மக்களுக்கு பேதம் கருதாது நல்ல வாழ்க்கை, வசதிகளை அமைத்துத் தருதல்.
*சுகாதாரத்தை மேம்படுத்தி, சிறந்த சுற்றுச்சூழலை ஏற்படுத்துதல்.
*உலக அமைதியையும், பாதுகாப்பையும் மேம்படுத்த நடவடிக்கை எடுத்தல்.
*இலவச கட்டாய கல்வி, மருத்துவ வசதியை அளித்தல்.
*குறிப்பிட்ட சிலரின் கையில், நாட்டின் செல்வம் அனைத்தும் சென்று சேரா வண்ணம் தடுத்தல்.
* மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த நாளும் பாடுபடுதல்.
*ஏழைகளுக்கு இலவச சட்ட உதவியை வழங்குதல்.
*நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாத்தல்.மக்களின் கடமை
*அரசியல் அமைப்பை பின்பற்றி தேசிய கீதத்தையும், தேசியக் கொடியையும் மதித்து நடத்தல்.
* நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டை பாதுகாத்தல்.
*தேசியப் பணிபுரிய எப்போதும் தயாராக இருத்தல்.
*இந்தியர்கள் அனைவரிடத்திலும், சகோதரத்துவ உணர்வு கொண்டிருத்தல்.
*நமது பண்பாடு, கலாசாரத்தை கட்டிக் காத்தல்.
*இயற்கை சூழ்நிலைகளை பாதுகாத்தல்.
*வன்முறையில் ஈடுபடாமல் பொதுச் சொத்துக்களை காத்தல்.
*குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்புதல்.
*அறிவியல், தொழில்நுட்பத்தை வளர்த்து நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுதல்.
*மனிதாபிமான உணர்வோடு இருத்தல்.
 
அமெரிக்காவுக்கு "நோ
1950ல் இருந்து ஒவ்வொரு குடியரசு தினத்தின் போதும், வெளிநாட்டு தலைவர் ஒருவர், விருந்தினராக பங்கேற்பது வழக்கம். 1950ல் நடந்த முதல் குடியரசு தினத்தில், விருந்தினராக இந்தோனேசிய அதிபர் சுகர்னோ பங்கேற்றார். இதன்பின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இப்பட்டியலில், வல்லரசு நாடான அமெரிக்காவில் இருந்து ஒரு விருந்தினர் கூட பங்கேற்றதில்லை என்பது ஆச்சரியமான விஷயம். அதிகபட்சமாக பிரான்ஸ்மற்றும் பூடானில் இருந்து தலா நான்கு முறை விருந்தினர்கள் பங்கேற்றுள்ளனர்.

* இந்தாண்டு வெளிநாட்டு சிறப்பு விருந்தினராக பூடான் மன்னர் "ஜிக்மே கேசர்நாம்கியல் வாங்சுக்' பங்கேற்கிறார். உலகின் நீளமானஅரசியலமைப்பு
* குடியரசு தினம் மூன்று நாள் விழா. இறுதி நாளில் வீரர்கள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி நடக்கிறது.
* இந்திய அரசியலமைப்பு இந்திமற்றும் ஆங்கிலத்தில்மட்டுமே எழுதப் பட்டுள்ளது. இதுஉலகின் நீளமான அரசியலமைப்பு. ஒருநாளில் இதை வாசித்துவிட முடியாது. 1950 ஜன., 26 காலை 10.18 மணிக்கு அமலுக்கு வந்தது.
* குடியரசு தினத்தில் ஜனாதிபதி உரை நிகழ்த்துவார்; சுதந்திர தினத்தில் பிரதமர் உரை நிகழ்த்துவார்.
* 2002ல் நடந்த 53வது குடியரசு தினத்துக்குப்பின், இந்திய குடிமகன் யார் வேண்டுமானாலும் தேசியக்கொடியை (முறைப்படி) ஏற்றிஇறக்கலாம் என்ற அறிவிப்பு வந்தது. இதற்கு முன் அரசு உயர் அதிகாரிகளுக்குமட்டுமே இந்த உரிமை இருந்தது.
* குடியரசு தின அணிவகுப்பு ராஜ்பாத்தில் நடப்பது தெரிந்த விஷயம். இது 1954க்குப்பின் தான் இங்கு நடக்கிறது. இதற்கு முன் ஆண்டுதோறும் வெவ்வேறு இடங்களில் நடந்தது.

கம்பீரமான ராஜபாட்டை

டில்லியில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பு, ராஷ்டிரபதி பவனில் துவங்கி, விஜய் சவுக்,இந்தியா கேட் வழியாக தேசிய மைதானத்தைசென்றடையும். இது நடைபெறும் பெருமைக்குரியதெருவின் பெயர் தான் ராஜபாட்டை (ராஜ்பாத்). இதை ஆங்கிலேயர்கள் ராஜ வழி (கிங்ஸ் வே) என்று அழைத்தனர்.
 
வரலாறு

பிரிட்டன் கட்டட கலைஞர் எட்வின் லூட்டியன்ஸ், ராஜ்பாத்தை சுற்றியுள்ள பகுதிகளை கட்டினார். அப்போது இந்த தெருவிற்கு, அதிக முக்கியத்துவம் அளித்தார். ராஷ்டிரபதி பவனில் இருந்து பார்க்கையில், டில்லி நகரின் பரந்து விரிந்த அமைப்பு தெரிய வேண்டும் என்ற நோக்குடன் இந்த தெருவையும் சுற்றியுள்ள கட்டடங்களையும் வடிவமைத்தார். தெருவின் இருபுறமும், புல்வெளிகள், வாய்க்கால்கள்மற்றும் வரிசையான மரங்கள் காணப்படுகின்றன. கிழக்கு - மேற்கு திசையில் செல்லும் இந்த பாதை,செயலக கட்டடத்தின் வடக்குமற்றும் தெற்கு பகுதியின் பக்கவாட்டில் உள்ளது. ராஷ்டிரபதி பவன் வாயில் கதவுடன், பாதை முடிகிறது.

"மாண்புமிகு'' மக்களாட்சி

குடியரசு என்பதன் நேரடி பொருள் "மக்களாட்சி'. தேர்தல் மூலம் மக்களே ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறைக்கு குடியரசு என பெயர். இது குடியரசு நாடு என அழைக்கப்படுகிறது. இதன் தலைவர், குடியரசு தலைவர் அல்லது ஜனாதிபதி என அழைக்கப்படுகிறார். பதவிக்காலம் 5 ஆண்டுகள். எப்படி வந்தது இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்,பிரிட்டிஷாரிடம் இருந்து "டொமினியன் அந்தஸ்து'பெற்றால் போதும் என பல சுதந்திர போராட்ட தலைவர்கள் எண்ணினர். "டொமினியின் அந்தஸ்து' என்பது, பிரிட்டிஷ் மேலாதிக்கத்துக்கு உட்பட்ட சுய ஆட்சி. இதன்படி நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை ஆகியவற்றை அவர்கள் தான் நிர்வகிப்பர். இதற்கு நேரு, நேதாஜி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின் பூரண சுயராஜ்யம் தான் லட்சியம் என தலைவர்களிடம் மாற்றம் வந்தது. இதன்படி லாகூரில் நடந்த காங்., மாநாட்டில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தால் ஜன., 26 "பூரண சுதந்திர தினமாக' கடைபிடிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1947 ஆக., 15ல் சுதந்திரம் பெற்றாலும், உண்மையான சுதந்திரம் கிடைத்தது 1950, ஜன., 26ல் தான். ஏனெனில் சுதந்திரம் பெற்ற போது, பிரிட்டிஷ் அரசுஇந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து தான் வழங்கியது. அதன்படி பிரிட்டிஷார் சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர்ஜெனரல் தான் நாட்டின் தலைவராக இருந்தார்.சுதந்திரத்துக்குப் பின், ஆட்சியாளர்கள், தங்களது விருப்பத்துக்கு செயல்பட்டு விடக்கூடாது என்பதற்காக அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, 1950, ஜன., 26ல் நடைமுறைக்கு வந்தது. கவர்னர் ஜெனரல் பதவி நீக்கப்பட்டு, புதிதாக ஜனாதிபதி பதவி உருவானது.

செய்தி நன்றி: தினமலர்.காம் 

வரும் காலத்திலாவது இந்தியவில் ஊழல் இல்லாத நல்ல ஆட்சி அமையட்டும். இன்றைய இளைஞர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு நன்றாக இருக்கிறது. தேர்தல்களின் போது ஓட்டுரிமையை முறையாக பயன்படுத்தி நல்ல ஆட்சி அமைய இளைய சமுதாயம் முனைய வேண்டும். எதிர்காலம் சிறப்புடன் விளங்க ஒவ்வொரு இந்தியனின் கடமை இது.




Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி...
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...