Skip to main content

Posts

Showing posts from October, 2012

மனதை அள்ளும் அழகுடன் அதிரப்பள்ளி அருவி, கேரளா

சமீபத்து விடுமுறையில் குடும்பத்துடன் சாலக்குடி (கேரளா) சென்ற போது    அங்குள்ள ஆயுர் சௌக்கியம் ரிஸார்ட்டில் தங்கினேன். ரிஸார்ட்  மிக அருமையான இடத்தில் இருக்கிறது. ரிஸார்ட்டை ஒட்டி சாலக்குடி ஆறு கரைபுரண்டு ஓடுகிறது. இரண்டு நாட்களும் ஒரே குளியல்மயமாக, ஜாலியாக  கழிந்தது. ரிஸார்ட் சாப்பாடு ரொம்பவே சுமார் என்றாலும் மற்ற வசதிகள் நன்றாக இருக்கின்றன. ஒரே குறை, சுற்றிலும் தப்பித் தவறி கூட செல்ல கடைகளோ, உணவகமோ, ஏன் ஒரு டீக்கடை கூட இல்லை. ஏர்டெல் சிக்னல் நன்றாக கிடைக்கிறது. சுற்றுலா செல்ல சாலக்குடி ஒரு அருமையான இடம்.

கவனிப்பாரின்றி கிடக்கும் ராஜ ராஜ சோழன் சமாதி!!

மாமன்னன் ராஜ ராஜ சோழன் உலகின் மிக பெரிய யானைப் படையை கட்டி ஆண்ட சோழ மாமன்னன், தெற்கு ஆசியா  முழுவதையும் ஒரு குடைக் கீழ் ஆண்ட சக்கரவர்த்தி, உலகின் முதலாவது கப்பல் படையை அமைத்த பேரரசன், 1000 ஆண்டுகளுக்கு மேலாக கம்பீரமாக எழுந்து நிற்கின்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய இராஜராஜன் .... இப்படி எல்லாம் ஏராளமான பெருமைகளுக்கு உரித்தானவர் இராஜ ராஜ சோழன்.   ஆனால் இவருடைய சமாதி இன்று இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் என்கிற ஊருக்கு அருகில் உள்ள ஓட்டன்தோப்பு கிராமத்தில் இருக்கும் வயலின் ஒரு மூலையில் மணல் மேடாக மிஞ்சி கிடக்கின்றது.   வயதான ஏழை விவசாயி ஒருவர் தினமும் பூ போட்டு வழிபட்டு வருகின்றார். அது சரி, நம் அரசியல்வாதிகள் அதை இன்னும் பிளாட் போட்டு விற்காமல் இருக்கிறார்களே என்று மகிழ்ச்சி அடையலாம். எவ்வளவோ அரசியல் தலைவர்களின் சமாதிகள் ஜொலித்துக் கொண்டு இருக்கும்போது, நம் மாநில அரசு இந்த மாமன்னனின் சமாதியை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையான விஷயம். தகவல் நன்றி: ரிதம் இணைய  தளம் 

ஏழைகளுக்கு ஒரு ரூபாயில் சாப்பாடு போடும் ஒரு புண்ணிய மனிதர்

மதிய உணவு வேளை: ஈரோடு, பவர்ஹவுஸ் ரோடு, அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள ஏவிஎம் உணவு விடுதி அருகில், காலில் செருப்பு கூட இல்லாதவர்கள், உடம்பில் சட்டை போடாமல் துண்டு மட்டும் கொண்டு இருப்பவர்கள், ஒரு காலத்தில் வெள்ளையாக இருந்த வேட்டியை அணிந்தவர்கள், நைந்து போன புடவையுடன் காணப்பட்டவர்கள் என சுமார் இருபது பேர் அந்த உணவு விடுதி அருகே, கண்களில் கவலையையும், கையில் ஒரு பையையும் வைத்துக்கொண்டு நின்றார்கள். சிறிது நேரத்தில் உணவு விடுதியில் இருந்து அழைப்பு வந்ததும் கையில் இருந்த ஒரு டோக்கனையும், ஒரு ரூபாயையும் கொடுத்துவிட்டு ஒரு பார்சல் சாப்பாட்டை வாங்கிக்கொண்டு திரும்பினர். பார்த்த நமக்கு ஆச்சர்யம், இந்த காலத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடா என்று! உள்ளே வாங்க விவரமா சொல்றேன் என்று மெஸ் உரிமையாளர் வெங்கட்ராமன் அழைத்துச் சென்றார், முதல்ல சாப்பிடுங்க என்று சூடான சாப்பாடை சாம்பார், ரசம், மோர் கூட்டு பொரியல், அப்பளத்துடன் வழங்கினார் சுவையாகவும், திருப்தியாகவும் இருந்தது. நீங்க சாப்பிட்ட சாப்பாட்டின் விலை இருபத்தைந்து ரூபாய், இந்த சாப்பாட்டைதான் இப்போது வந்தவர்கள் ஒரு ரூபாய் கொடுத்த...

தாஜ் அரேபியா - துபாயில் ஒரு டூப்ளிகேட் தாஜ் மஹால்

உலகப் புகழ்பெற்ற வெள்ளை மாளிகை ‘தாஜ்மஹால்’ கட்டிடத்தைப் போல் நான்கு மடங்கு பெரிய தாஜ் அரேபியா என்ற ஒரு-டூப்ளிகேட் தாஜ்மஹாலை கட்ட துபாய்கட்டுமானக் கம்பெனி முடிவுசெய்துள்ளது.  அதற்குரிய வரைபடங்கள் வரையும் வேலைகளிலும் அவர்கள் இறங்கியுள்ளனர். துபாய் நாட்டின் எமிரேட்ஸ் சாலையில் உள்ள 4 கோடியே 10 லட்சம் சதுர அடிகொண்ட பால்கன் (Falcon) அதிசய நகரத்தின் மையப்பகுதியில் அது அமையவுள்ளது. இரண்டு வருடங்களில் கட்டி முடிக்க முடிவு செய்துள்ள இந்த தாஜ் அரேபியா கட்டிடத்திற்கு கிட்டத்தட்ட ரூ.5000 கோடி செலவிட திட்டமிட்டிருக்கிறார்கள். தாஜ் அரேபியா என்ற கட்டிடம் காதல் மற்றும் காதல் லீலைகளின் நினைவு அடையாளமாக விளங்கும். மேலும் உலகின் மிகப்பெரிய கல்யாண மண்டபமும் அதில் இடம்பெறும். 7 கட்டிடங்களை எல்லைகளாக கொண்டு கட்டப்படவுள்ள இந்த தாஜ் அரேபியாவில், சேவை ஆட்களுடன் கூடிய 200 குடியிருப்புகளும், 300 அறைகளுடன் கூடிய ஐந்து நட்சத்திர ஓட்டலும் இருக்கும். பெட்ரோல் விற்று வரும் கோடிக்கணக்கான பணத்தை என்னதான் செய்வது?? துபாய்காரர்களுக்கு பொழுது போகவேண்டுமே!! தாஜ் மஹால் மட்டுமல்லாது, ப...

கோடாக் (Kodak) மனிதர்

1888-ஆம் ஆண்டு, ""பட்டனை அழுத்துங்கள். மற்றவைகளை நாங்கள் செய்கிறோம்'' - என்ற வாக்கியத்துடன் 100 எக்ஸ்போஷர் பிலிமுடன் கூடிய காமிரா ஒன்றை 34 வயது வாலிபர் ஒருவர் விளம்பரப்படுத்தினார். பிலிம்கள் அனைத்தும் எடுக்கப்பட்டவுடன் காமிராவை உரிமையாளர் தொழிற்சாலைக்கு அனுப்பி டெவலப்பிங் செய்து படங்களைத் தருவார். பின்னர் மீண்டும் புதிய ரோல் லோடு செய்யப்படும். இதை வடிவமைத்து விற்பனை செய்தவர் தான் ஜார்ஜ் ஈஸ்ட்மன் (George Eastman). இந்த காமிராவின் விலை 25 அமெரிக்க டாலர். மிகவும் மலிவாக கருதப்பட்டாலும் இன்னும் சிறிய அளவில் கையடக்க அமைப்பில் தயாரிக்க வேண்டுமன்ற ஆர்வத்தில் தீவிர முயற்சிக்கும் பின்னர் காமிரா விலை ஒரு டாலர். பிலிம் விலை ஒரு ரோல் 15 சென்ட் என்று அறிமுகப்படுத்தினார். சிறியதாகவும் எங்கு வேண்டுமானாலும் கையில் கொண்டு செல்லும் அமைப்பில் இருந்ததாலும் சுற்றுலா செல்பவர்கள் மட்டுமன்றி அன்றாட வாழ்க்கையில் புகைப்படமெடுப்பது இன்றியமையாததாக கருதப்பட்டது. தன்னுடைய கண்டுபிடிப்பினால் ஒரே ஆண்டில் கோடீஸ்வரரான ஜார்ஜ் ஈஸ்ட்மன் வருமானம் ஆண்டொன்றுக்கு ஒரு மில்லியன் ...
THE EXPENDABLES படத்தில் தமிழ் சூப்பர் ஸ்டார்கள் இணைந்து நடித்தால்??? உலக சினிமாக்கள் தங்கள் எல்லைகளை எல்லை தாண்டி விரித்து விட்டாலும் இன்னும் நமது தமிழ் சினிமாவால் அப்படி விரிக்க முடியாமல் போவதற்கு காரணம் சினிமா வர்த்தகம் இயக்குனர் கைக்கோ கதையின் கைக்கோ வராமல் இன்னும் நடிகர்களின் கைகளிலே அடங்கி இருப்பது தான். ரஜினி, கமல் இணைவது விஜய்-அஜீத் இணைவது எல்லாமே கிட்டத்தட்ட சாத்தியமே இல்லாத விஷயமாகி  போய் விட்டன. கீழே இருப்பது ஒரு பிரபல இணையதளத்துடைய (behindwoods) கற்பனை தான் நான் பார்த்த உடனே கவர்ந்து இழுத்து கொண்டது. அவற்றையே இங்கு பகிர்ந்து கொள்கிறேன். Sylvester Stallone (Barney Ross) - கமல்ஹாசன்  Chuck Norris (Booker) – ரஜினிகாந்த் Jason Statham (Lee Christmas) – விஜய் Arnold Schwarzenegger (Trench) - அஜித் குமார் Van Damme (Jean Vilain) – விக...

எச்சரிக்கை: Facebook இல் பரவும் மோசடி

   நன்றி:: Abdul Basith அவர்களின் பிளாக்கர் நண்பன் வலைப்பூவுக்கு  சமூக வலையமைப்பு தளங்களில் Facebook தளம் தனி இடத்தைப் பிடித்துள்ளது. அது மற்றவர்களுக்கு பயனாக இருக்கிறதோ இல்லையோ, ஆனால் குற்றம் செய்பவர்களுக்கு வசதியான கருவியாக திகழ்கிறது. பேஸ்புக் தளத்தில் தொடர்ந்து பல்வேறு மோசடிகள் ( Scams ) நடந்தேறி வருகிறது. இவற்றிலிருந்து ஒரு சிலர் தப்பித்தாலும், ஆயிரக்கணக்கானோர் தினமும் மாட்டிக் கொள்கின்றனர். தற்போது பேஸ்புக்கில் பரவும் ஒரு மோசடியைப் பற்றி பார்ப்போம். Facebook  தளத்தில் ஒரு படம் பரவி வருகிறது. அது கீழே:   இந்த போட்டோவில் "பேஸ்புக் சரிபார்ப்பு"க் குழுவிலிருந்து செய்தி எனவும், பேஸ்புக்கில் நடைபெறும் மோசடிகளை தவிர்ப்பதற்கு செப்டம்பர் மாதத்திற்கு முன்பாக கணக்கை உறுதி செய்ய வேண்டும், உறுதி செய்யாத கணக்குகள் நீக்கப்படும்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கணக்கை உறுதி செய்ய போட்டோ Description பகுதியில் உள்ள சுட்டியை கிளிக் செய்ய சொல்கிறது. அதில் இது போல சுட்டி (link) இருக்கும்: http://bitly.com/OOWFvC?secureid= 1407 இதை க...