Skip to main content

எச்சரிக்கை: Facebook இல் பரவும் மோசடி


   அவர்களின் பிளாக்கர் நண்பன் வலைப்பூவுக்கு 

சமூக வலையமைப்பு தளங்களில் Facebook தளம் தனி இடத்தைப் பிடித்துள்ளது. அது மற்றவர்களுக்கு பயனாக இருக்கிறதோ இல்லையோ, ஆனால் குற்றம் செய்பவர்களுக்கு வசதியான கருவியாக திகழ்கிறது. பேஸ்புக் தளத்தில் தொடர்ந்து பல்வேறு மோசடிகள் (Scams) நடந்தேறி வருகிறது. இவற்றிலிருந்து ஒரு சிலர் தப்பித்தாலும், ஆயிரக்கணக்கானோர் தினமும் மாட்டிக் கொள்கின்றனர். தற்போது பேஸ்புக்கில் பரவும் ஒரு மோசடியைப் பற்றி பார்ப்போம்.

Facebook  தளத்தில் ஒரு படம் பரவி வருகிறது. அது கீழே:
 

இந்த போட்டோவில் "பேஸ்புக் சரிபார்ப்பு"க் குழுவிலிருந்து செய்தி எனவும், பேஸ்புக்கில் நடைபெறும் மோசடிகளை தவிர்ப்பதற்கு செப்டம்பர் மாதத்திற்கு முன்பாக கணக்கை உறுதி செய்ய வேண்டும், உறுதி செய்யாத கணக்குகள் நீக்கப்படும்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கணக்கை உறுதி செய்ய போட்டோ Description பகுதியில் உள்ள சுட்டியை கிளிக் செய்ய சொல்கிறது.

அதில் இது போல சுட்டி (link) இருக்கும்: http://bitly.com/OOWFvC?secureid=1407

இதை கிளிக் செய்தால் கூகிள் translate பக்கத்திற்கு சென்று, http://ilovemyiphone.mobi/r/?id=sdnasadasasda என்ற பக்கத்திற்கு சென்று, பிறகு கடைசியாக http://facebook.com.info.tm/ என்ற பக்கத்திற்கு செல்கிறது.

 http://facebook.com.info.tm/ என்பது Facebook தளத்தின் முகவரி அல்ல, இது info.tm என்ற முகவரியின் sub - domain ஆகும்.

இங்கு தான் உங்கள்
Facebook கணக்கை உறுதி செய்யும் வழிமுறையை சொல்கிறது. அப்போது Developer என்ற அப்ளிகேஷனுக்கு நீங்கள் அனுமது கொடுக்க வேண்டும். அதில் சொன்னது போல நீங்கள் செய்தால் அந்த போட்டோ உங்கள் Facebook கணக்கில் வெளிவரும். மேலும் அந்த போட்டோவில் உங்கள் நண்பர்கள் அனைவர் பெயரும் Tag செய்யப்படும்.

பிறகு  மீண்டும் முதலில் இருந்து தொடங்கும், மேலுள்ள படத்துக்கு கீழே உள்ளதில் இருந்து மறுபடியும் படியுங்கள்.

இதிலிருந்து நாம் தப்பிப்பது எப்படி?

மிக சுலபம். அந்த போட்டோவை தவிர்த்துவிடுங்கள். உங்கள் கணக்கில் அது இருந்தால் நீக்கிவிடுங்கள். உங்கள் நண்பர்கள் கணக்கில் இருந்தால் அவர்களை நீக்கச் சொல்லுங்கள்.

நாம் தப்பித்தால் மட்டும் போதுமா?

நாம் தப்பித்தால் மட்டும் போதாது, மற்றவர்களையும் காப்பாற்ற (???) இரண்டு செயல்கள் செய்ய வேண்டும்.

ஒன்று, கணக்கை உறுதி செய்ய ஒரு
அப்ளிகேஷனுக்கு அனுமதி கொடுக்க சொல்கிறது அல்லவா? அந்த அப்ளிகேஷன் பற்றி Facebook -இல் புகார் அளியுங்கள்.

அந்த
அப்ளிகேஷன் முகவரி: http://goo.gl/cB4f6 (முகவரி பெரியது என்பதால் சுருக்கியுள்ளேன்.



அந்த பக்கத்தின் கீழே Report app என்பதை கிளிக் செய்யுங்கள்.


Report to Facebook என்பதில் "I'm reporting the app. for spam" என்பதை கிளிக் செய்யுங்கள்.

விருப்பப்பட்டால் ஸ்க்ரீன்ஷாட் பகுதியில் அந்த படத்தை சேருங்கள்.

பிறகு Submit என்பதை கிளிக் செய்யுங்கள். அவ்வளவு தான்!

மற்றவர்களுக்கு உதவி செய்ய இரண்டாவது வழி, இந்த பதிவை பேஸ்புக்கில் பகிர்ந்துக் கொள்ளுங்கள்!

நீங்கள்  ஏற்கனவே அந்த
அப்ளிகேஷனுக்கு  அனுமதி கொடுத்திருந்தால் அதனை நீக்கிவிடுங்கள்.

கவனிக்க: இது இப்போது வந்துள்ள மோசடி அல்ல! ஏற்கனவே பல முறை வந்துள்ளது.

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...