சமீபத்து விடுமுறையில் குடும்பத்துடன் சாலக்குடி (கேரளா) சென்ற போது அங்குள்ள ஆயுர் சௌக்கியம் ரிஸார்ட்டில் தங்கினேன். ரிஸார்ட் மிக அருமையான இடத்தில் இருக்கிறது. ரிஸார்ட்டை ஒட்டி சாலக்குடி ஆறு கரைபுரண்டு ஓடுகிறது. இரண்டு நாட்களும் ஒரே குளியல்மயமாக, ஜாலியாக கழிந்தது. ரிஸார்ட் சாப்பாடு ரொம்பவே சுமார் என்றாலும் மற்ற வசதிகள் நன்றாக இருக்கின்றன. ஒரே குறை, சுற்றிலும் தப்பித் தவறி கூட செல்ல கடைகளோ, உணவகமோ, ஏன் ஒரு டீக்கடை கூட இல்லை. ஏர்டெல் சிக்னல் நன்றாக கிடைக்கிறது. சுற்றுலா செல்ல சாலக்குடி ஒரு அருமையான இடம்.
நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம் தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி...
Comments