Skip to main content

கோடாக் (Kodak) மனிதர்


1888-ஆம் ஆண்டு, ""பட்டனை அழுத்துங்கள். மற்றவைகளை நாங்கள் செய்கிறோம்'' - என்ற வாக்கியத்துடன் 100 எக்ஸ்போஷர் பிலிமுடன் கூடிய காமிரா ஒன்றை 34 வயது வாலிபர் ஒருவர் விளம்பரப்படுத்தினார். பிலிம்கள் அனைத்தும் எடுக்கப்பட்டவுடன் காமிராவை உரிமையாளர் தொழிற்சாலைக்கு அனுப்பி டெவலப்பிங் செய்து படங்களைத் தருவார். பின்னர் மீண்டும் புதிய ரோல் லோடு செய்யப்படும். இதை வடிவமைத்து விற்பனை செய்தவர் தான் ஜார்ஜ் ஈஸ்ட்மன் (George Eastman).


இந்த காமிராவின் விலை 25 அமெரிக்க டாலர். மிகவும் மலிவாக கருதப்பட்டாலும் இன்னும் சிறிய அளவில் கையடக்க அமைப்பில் தயாரிக்க வேண்டுமன்ற ஆர்வத்தில் தீவிர முயற்சிக்கும் பின்னர் காமிரா விலை ஒரு டாலர். பிலிம் விலை ஒரு ரோல் 15 சென்ட் என்று அறிமுகப்படுத்தினார். சிறியதாகவும் எங்கு வேண்டுமானாலும் கையில் கொண்டு செல்லும் அமைப்பில் இருந்ததாலும் சுற்றுலா செல்பவர்கள் மட்டுமன்றி அன்றாட வாழ்க்கையில் புகைப்படமெடுப்பது இன்றியமையாததாக கருதப்பட்டது.

தன்னுடைய கண்டுபிடிப்பினால் ஒரே ஆண்டில் கோடீஸ்வரரான ஜார்ஜ் ஈஸ்ட்மன் வருமானம் ஆண்டொன்றுக்கு ஒரு மில்லியன் டாலராக உயர்ந்தது. அப்போது தினசரி வாழ்க்கைக்கு ஐந்து டாலர் போதுமானதாக இருந்தது. 50 அறைகள் கொண்ட பிரம்மாண்டமான மாளிகையை கட்டி இருபதாண்டுகள் தனிமையில் வாழ்ந்த அவரது நியூயார்க் மாளிகை தற்போது கட்டட அமைப்பில் எவ்வித மாற்றமுமின்றி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புகைப்படக் கலையின் வளர்ச்சியை விளக்கும் வகையில் சர்வதேச புகைப்பட அருங்காட்சியகமாக விளங்குகிறது. அவருக்குப் பின்னரும் தொடர்ந்து செயல்பட்டு வந்த "கோடாக்' நிறுவனம்தான் 1975-ஆம் ஆண்டில் முதன்முதலாக டிஜிட்டல் காமிராவை அறிமுகப்படுத்தியது.

14-வது வயதில் தன் தாயாரையும் இரண்டு சகோதரிகளையும் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக் கொண்டதால் பள்ளிப் படிப்பை விட்டுவிட்டு காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் வாரத்திற்கு 3 டாலர் ஊதியத்தில் பணிக்கு அமர்ந்தார். ஓராண்டிற்குப் பின்னர் வேறொரு காப்பீட்டு நிறுவனத்தில் ஆபீஸ் பையனாகச் சேர்ந்ததோடு மாலை நேரத்தில் அக்கவுன்டன்சி படித்து முடித்தார். 1874-ஆம் ஆண்டு ரோசெஸ்டர் சேமிப்பு வங்கியில் ஜூனியர் கிளார்க்காக சேர்ந்தார். வாரத்திற்கு 15 டாலர் ஊதியமாக பெற்றார்.
 நான்காண்டுகள் கழித்து தன் வாழ்க்கையில் ஒரு மாற்றம் வேண்டுமென்று விரும்பியவர் 1878-ஆம் ஆண்டு தன் தாயாருடன் சான்டா டோமின்கோவுக்கு சுற்றுலா சென்றிருந்துபோது நினைவுக்காக ஒரு போட்டோகிராபி காமிரா ஒன்றை ஜார்ஜ் வாங்கி வந்தார். அந்த காமிரா பெரியதாகவும் மைக்ரோ ஓவன் போன்று கனமானதாகவும் இருந்தது. மேலும் அதை வைப்பதற்கு தனியிடம் தேவைப்பட்டது. காமிராவின் உள்ளேயிருந்த கண்ணாடி பிளேட்டுகளில் எக்ஸ்போஸ் செய்து பின்னர் வேறோரு பிளேட்டில் அதை பதிவு செய்ய வேண்டும். அதன் பளுவை பார்க்கும்போது புகைப்படமெடுக்க இத்தனை சிரமம் தேவையா என்ற எண்ணம் ஜார்ஜ் மனதில் தோன்றியது. சாதாரண மக்கள் பயன்படுத்தும் வகையில் இலகுவாக மாற்றலாமே என்று தோன்றியது.

அடுத்து மூன்றாண்டுகள் வேலையிலிருந்து திரும்பியவுடன் அம்மாவின் சமையலறையே சோதனைக் கூடமாக பயன்படுத்தி பரிசோதனைகளைச் செய்தார். சில சமயங்களில் வேலையிலிருந்து திரும்பியவர் உடைகளை மாற்றக்கூட நேரமின்றி சமையலறையிலேயே உறங்கியதும் உண்டு.

1881-ஆம் ஆண்டு ஹென்றி ஸ்டாரங் என்பவர் பண உதவி செய்ய வங்கி வேலையை ராஜிநாமா செய்துவிட்டு ஈஸ்ட்மன் டிரை பிளேட் கம்பெனியை துவங்கினார். கண்ணாடி பிளேட்டுகளுக்குப் பதிலாக பேப்பர் மீது உருவம் பதியும்படி புதிய முறையைக் கண்டுபிடித்தார். அதற்குத் தகுந்த செல்லுலஸ் சொல்யூஷனுடன் கூடிய பிலிமையும் கண்டுபிடித்தார்.

தொடர்ந்து 1888-ஆம் ஆண்டு கையில் கொண்டு செல்லும் வகையில் பிளெக்ஸிபிள் பிலிமுடன் கூடிய காமிரா உருவாயிற்று. "கோடாக்' என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டபோது ஜார்ஜ் ஈஸ்ட்மன் கூறினார். "" "கே' என்ற எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும். அனைத்து எழுத்துக்களிலும் இது வலிமையாகவும் மனதில் பதியும் படியும் தோன்றியது. இந்த எழுத்தையே பயன்படுத்தி ஏன் புதிய வாழ்க்கையை தொடங்கக்கூடாது என்று மனதில் எழுந்த கேள்விக்குப் பதிலே "கோடாக்' என்ற வார்த்தை.''

திருமணம் செய்து கொள்ளாமல் தாயுடன் வசித்து வந்த அவர், 1907-ஆம் ஆண்டில் தாய் இறந்தவுடன் தனிமையில் வசித்து வந்தார். தினமும் காலையில் தனது தனிமை அறையில் சிற்றுண்டி சாப்பிடும்போது அவரது அந்தரங்க இசைக் கலைஞர் ஹெரால்ட் கிளீசன் இசைக் கருவிகளை வாசிப்பார்.

புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்டிய ஜார்ஜ் தனி நூலகம் ஒன்றை அமைத்து ஆசிரியர்கள் பெயர்களுக்கேற்ப வரிசை கிரமமாக புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தார். சமையல் செய்வதிலும் ஆர்வமுள்ள இவர் தனக்கு தேவையானவற்றை சமைத்துக் கொள்ள டார்க் ரூமை ஒட்டினாற்போல் சமையலறையை அமைத்திருந்தார்.

1924-ஆம் ஆண்டு ராச்செஸ்டர் (Roechester) பல்கலைக்கழகம், ஹாம்ப்டன்  இன்ஸ்டிட்யுட் ஆகிய கல்வி நிறுவனங்களுக்கு ஒரே நாளில் 30 மில்லியன் டாலரை நன்கொடையாக எழுதிக் கொடுத்தார்.

கையெழுத்திட்டுக் கொடுத்தவுடன்,""இப்போதுதான் நான் சுதந்திர மனிதனாக இருக்கிறேன்'' என்று கூறினாராம். உடல் நலக்குறைவால் இயல்பு வாழ்க்கையை நடத்த முடியாமல் நடக்கவும் மிகவும் சிரமப்பட்டார். இந்த வலிகளிலிருந்து விடுதலை பெற தன் 77-ஆம் வயதில் 1932-ஆம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடைசியாக அவர் தன் நண்பர்களுக்கு தெரிவித்திருந்த குறிப்பில், ""என்னுடைய வேலைகளை முடித்துவிட்டேன். எதற்காக காத்திருக்க வேண்டும்'' என்று எழுதியிருந்தார்.

நன்றி: அ குமார் - தினமணி இணைய தளம் 


 

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...