மாமன்னன் ராஜ ராஜ சோழன் |
உலகின் மிக பெரிய யானைப் படையை கட்டி ஆண்ட சோழ மாமன்னன், தெற்கு ஆசியா முழுவதையும் ஒரு குடைக் கீழ் ஆண்ட சக்கரவர்த்தி, உலகின் முதலாவது கப்பல் படையை அமைத்த பேரரசன், 1000 ஆண்டுகளுக்கு மேலாக கம்பீரமாக எழுந்து நிற்கின்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய இராஜராஜன் .... இப்படி எல்லாம் ஏராளமான பெருமைகளுக்கு உரித்தானவர் இராஜ ராஜ சோழன்.
ஆனால் இவருடைய சமாதி இன்று இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் என்கிற ஊருக்கு அருகில் உள்ள ஓட்டன்தோப்பு கிராமத்தில் இருக்கும் வயலின் ஒரு மூலையில் மணல் மேடாக மிஞ்சி கிடக்கின்றது.
வயதான ஏழை விவசாயி ஒருவர் தினமும் பூ போட்டு வழிபட்டு வருகின்றார். அது சரி, நம் அரசியல்வாதிகள் அதை இன்னும் பிளாட் போட்டு விற்காமல் இருக்கிறார்களே என்று மகிழ்ச்சி அடையலாம். எவ்வளவோ அரசியல் தலைவர்களின் சமாதிகள் ஜொலித்துக் கொண்டு இருக்கும்போது, நம் மாநில அரசு இந்த மாமன்னனின் சமாதியை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையான விஷயம்.
தகவல் நன்றி: ரிதம் இணைய தளம்
Comments