உலகப் புகழ்பெற்ற வெள்ளை மாளிகை ‘தாஜ்மஹால்’
கட்டிடத்தைப் போல் நான்கு மடங்கு பெரிய தாஜ் அரேபியா என்ற ஒரு-டூப்ளிகேட்
தாஜ்மஹாலை கட்ட துபாய்கட்டுமானக் கம்பெனி முடிவுசெய்துள்ளது.
அதற்குரிய வரைபடங்கள் வரையும் வேலைகளிலும் அவர்கள் இறங்கியுள்ளனர். துபாய்
நாட்டின் எமிரேட்ஸ் சாலையில் உள்ள 4 கோடியே 10 லட்சம் சதுர அடிகொண்ட
பால்கன் (Falcon) அதிசய நகரத்தின் மையப்பகுதியில் அது அமையவுள்ளது.
இரண்டு வருடங்களில் கட்டி முடிக்க முடிவு செய்துள்ள இந்த தாஜ் அரேபியா கட்டிடத்திற்கு கிட்டத்தட்ட ரூ.5000 கோடி செலவிட திட்டமிட்டிருக்கிறார்கள். தாஜ் அரேபியா என்ற கட்டிடம் காதல் மற்றும் காதல் லீலைகளின் நினைவு அடையாளமாக விளங்கும்.
மேலும் உலகின் மிகப்பெரிய கல்யாண மண்டபமும் அதில் இடம்பெறும். 7 கட்டிடங்களை எல்லைகளாக கொண்டு கட்டப்படவுள்ள இந்த தாஜ் அரேபியாவில், சேவை ஆட்களுடன் கூடிய 200 குடியிருப்புகளும், 300 அறைகளுடன் கூடிய ஐந்து நட்சத்திர ஓட்டலும் இருக்கும்.

பெட்ரோல் விற்று வரும் கோடிக்கணக்கான பணத்தை என்னதான் செய்வது?? துபாய்காரர்களுக்கு பொழுது போகவேண்டுமே!! தாஜ் மஹால் மட்டுமல்லாது, பாரிஸ் நகரில் உள்ள Eiffel டவர், எகிப்தில் உள்ள பிரமிட் போன்ற உலகப் புகழ் பெற்ற சின்னங்களையும் காப்பி அடித்து அதே போல ஹோட்டல்கள் கட்ட துபாய் திட்டமிட்டுள்ளது. ஒரிஜினலாக செய்ய முடியவில்லை என்றால் காப்பிதானே அடிக்க முடியும்.
Comments