எங்க ஊரு வாசம்: கள்ள வலியைப் போக்கும் விளக்கெண்ணெய்!! -பாரத தேவி அந்தக் காலத்துச் சிறுவர், சிறுமிகளுக்கு நாலு வயசு, மூணு வயசு ஆகும்வரை உடம்பில் துணி என்பது இருக்காது. பள்ளிக்கூடம், படிப்பு என்பதும் கிடையாது. அவர்கள் பாட்டுக்கு தெருவிலும் மந்தையிலும் புழுதியேறிய உடம்போடு எப்போதும் விளையாடிக்கொண்டு இருப்பார்கள். பொங்கல், தீபாவளி வந்தால் மட்டுமே அவர்களின் தாய், தங்கள் கிழிந்த சேலைகளை இன்னும் அதிகமாய்க் கிழித்துப் பெண் பிள்ளைகளுக்கு இடுப்பில் கட்டி அம்மணத்தை மறைப்பார்கள். ஆண் பிள்ளைகளுக்கு அதே கிழிந்த சேலை கோவணமாகப் பயன்படும். வீட்டுப் பெரியவர்கள் தாங்களே திரித்த புளிச்ச நாற்றின் கயிற்றினால் கூரையை வேய்வார்கள். இவ்வளவு நாளும் வேலை செய்து லாடம் தேய்ந்த காளைகளை கயிறு கட்டிச் சாய்த்து அதன் காலில் புது லாடம் அடிப்பார்கள். அப்போதுதானே மாட்டு வண்டிப் பந்தயத்தில் ஓட முடியும்! அதோடு தொலைதூர ஊர்களில் வயதாகி நடக்க முடியாமலும், கண் பார்வை மங்கிப் பார்க்க முடியாமலும் இருக்கும் தங்களின் ‘அம்மி, சீயான்' அவர்களைக் கூட்டிக்கொண்டு வருவதற்காக வண்டிகட்டிக்கொண்டு போனார்கள். பாவம் அவ...
காலை Japan இல் காஃபி, மாலை New York இல் காபரே, இரவில் Thailand இல் ஜாலி!, இனிமேல் நமக்கென்ன வேலி? என்றும், என்றும் இன்ப மயம்!