Skip to main content

Posts

Showing posts from December, 2012

சுஜாதாவின் உன்னதமான சிறுகதை: சில வித்தியாசங்கள்

சிறுகதை வெளியான தேதி: - 29-06-1969 வாங்குகிற முந்நூற்றுச் சொச்சம் 25 தேதிக்குள் செலவழிந்துவிடுவது சத்தியம். இன்றைய தேதிக்கு என் சொத்து – ஒரு டெரிலின் சட்டை, பெட்டி நிறையப் பிரமாதமான புத்தகங்கள், ராஜேஸ்வரி. கடைசியில் குறிப்பிட்டவள் என் மனைவி. இவளைப் பற்றிக் கம்பராமாயண அளவில் புகழ் பாடலாம். அதிகம் பேசாதவள். என் வக்கிரங்களையும், பணமில்லாததால் வரும் அர்த்தமற்ற ஆத்திரத்தையும், என் புத்தக ஆசையையும், வீட்டின் ‘பட்ஜெட்’டையும், சித்தார்த்தனின் அழுகையையும் சமாளிக்கும் சாமர்த்தியம் படைத்த இவள், என் வாழ்வின் ஒரே அதிர்ஷ்டம்! ஜாய்ஸின் ‘யூலிஸிஸ்’ வாங்க விரும்புகிறான் கணவன் என்று தன் மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்த மனைவியை நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா? இவள் மற்ற நகைகளையும் விற்றாகிவிட்டது. எல்லாம் என் ஆர்வத்தில் ஓர் இலக்கியப் பத்திரிகை தொடங்கி இரண்டு மாதம் நடத்தினதில் போய்விட்டது. அதற்காக நான் அவமானப்படுகிறேன். இலக்கியப் பத்திரிகை நடத்தினதற்காக அல்ல; மனைவியின் சொற்ப நகைகளை விற்றதற்காக! இன்று தேதி 29. என் கையில் இருப்பது மூன்று ரூபாய். எனக்குத் தேவை 325 ரூபாய். எதற்கு? சென்னைக்க...

அழிவின் விளிம்பில் பாடல் பெற்ற திருத்தலங்கள்

தமிழ் நூலான தேவாரத்தில் குறிப்பிடப்பட்டு, பாடல் பெற்ற தலங்களாக விளங்கும் 275-க்கும் மேற்பட்ட கோவில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இவை 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தவை. ஆனால் இவற்றில் பெரும்பாலான கோவில்கள் இப்போது அழிவின் விளிம்பில் உள்ளன. வருமானத்தை அடிப்படையாக கொண்டு, கோவில்களின் நிர்வாகம் பிரிக்கப் படுவதால், வருமானம் அதிகமில்லாத, பாடல் பெற்ற திருத்தலங்களும், வரலாற்று சிறப்பு வாய்ந்த கோவில்களும், பாழடையும் அபாயத்தில் உள்ளன.இதன் மூலம் உருவாகும் நிர்வாக சீர்கேட்டால், வரலாற்று சின்னங்கள் கொள்ளை போகும் அபாயம் ஏற்பட்டு உள்ளதோடு, கோவில்சொத்துக்களும் வேகமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. வருமான அடிப்படையில்... இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில்;மாத வருமானம், 10 ஆயிரம் ரூபாயிலிருந்து, இரண்டு லட்சம் ரூபாய் வரை இரண்டு லட்சம் ரூபாயிலிருந்து, 10 லட்சம் ரூபாய்வரை, 10 லட்சம் ரூபய்க்குமேல்... கோவில்கள் இவ்வாறு வகைப்படுத்தப் படுகின்றன. இதன்படி, இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல், வருமானம் வரும் கோவில்கள், இந்து சமய அறநிலைய துறையின், நேரடி கட்டுப்பாட்டி...

சிறப்புக்கட்டுரை: DTH: கமலின் விஸ்வரூபத் திட்டம் - யுவகிருஷ்ணா

   கமல் எப்போதுமே மந்தையிலிருந்து பிரிந்து தனியே செல்லும் ஆடுதான். இந்த தோற்றத்தை அவர் வலிந்து உருவாக்குகிறார் என்றொரு விமர்சனம் உண்டு. எனக்கென்னவோ அவரது இயல்பே இதுதானென்று தோன்றுகிறது. சாரு சொல்வதைப் போல ஒருவகையில் கமல் ‘நிகழ மறுத்த அற்புதம்’தான். அவருக்கு பலவருடம் பின்னால் வந்தவர்களெல்லாம் அவரை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அதேநேரம் தமிழ் சினிமாவுக்கு புது இரத்தம் பாய்ச்சும் பணியை அவர் தவம் போல மேற்கொண்டு வருவதை மறுக்க முடியாது. குறிப்பாக அதிசமீபத்திய தொழில்நுட்பங்களை தமிழில் அறிமுகப்படுத்திப் பார்த்துவிட வேண்டும் என்கிற அவரது வெறி முக்கியமானது. இதனால் கமலுக்கு தனிப்பட்ட முறையில் ஏராளமான பொருளிழப்பு என்றாலும், சினிமாவுக்கு லாபம்தான்.  திருட்டு வீடியோ கேசட் காலத்திலிருந்தே தொழில்நுட்பங்களை மிகச்சரியாக புரிந்துகொண்டு, அதற்கேற்ப சினிமாவில் மாற்றங்கள் தேவை என்று வலியுறுத்தி வருகிறார். தொழில்நுட்பத்தை சபிக்கக்கூடாது. அதை நமக்கு வாகாக எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென சிந்திக்க வேண்டும் என்பது அவரது கட்சி.  லேட்டஸ்ட்டாக விஸ்வரூபம் பி...

மரங்களின் மரணம்

நடக்க நடக்க விரியும் பாதை... இருபுறமும் செழித்து தழைக்கும் மரங்கள்... மரங்களில் பூத்துக்குலுங்கும் மலர்கள்.. பழங்கள்.. மரங்களில் எட்டிப்பார்த்து கீச்சிடும் பறவைகள்... கொஞ்சும் மாலை வெயில்... மென்நடை... இத்தனை இனிமையாக ஒரு நடைபயணம் இருக்க முடியுமா? எங்கோ ஒரு கிராமத்தில் இந்த காட்சிகள் கை கூடக்கூடும்....ஆனால்... அன்பாலும்... காதலாலும் பொங்கி பெருகும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும்... மனதிற்குள்ளும் கவித்துவமாக ஒரு காட்சி விரியும் என்றால் அதில் மரங்களுக்கு கண்டிப்பாக ஒரு இடம் உண்டு.. அந்த மரங்களைப்பற்றி கொஞ்சம் பகிர்ந்து கொள்வோமா? மரங்களின் மீதான அன்பும், அவற்றுடனான நட்பும் இன்று நேற்றில்லை... நினைவு தெரிந்த நாள் முதல் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. எனக்கும் இருக்கிறது... இளநிலை படித்த கல்லூரியில் நிறைய பெரிய மரங்கள்... வயதான மரங்கள் இருந்தன.. இன்னமும் இருக்கின்றன. அவற்றை இரு கைகளால் கண்டிப்பாக பிடிக்க முடியாது.. அத்தனை பெரிது... பெயர் தெரியா மரங்கள்... புங்கை... கொன்றை.. சரக்கொன்றை... எத்தனை எத்தனையோ மரங்கள்.. முதுநிலை இதழியல் படித்த கல்லூரியிலோ பெரிய வனமே ஒளிந...
அணுசக்தி: சரியான பயன்பாடு நிச்சயம் நன்மை தரும் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் (முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர்) ஜப்பானில் 2011ஆம் ஆண்டில் ஃபுகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்தை அடுத்து, சீனாவில் அணு உலைகள் கட்டுமானப் பணிக்குத் தடை விதிக்கப்பட்டது. இத்தடையை சமீபத்தில் அந்நாட்டு அரசு விலக்கிக் கொண்டது. சீனாவில் ஏற்கெனவே 13 அணு மின்நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. 40 அணு மின் நிலையங்களின் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. “அணு சக்தி மூலம் பெறப்படும் மின்சாரம் சுத்தமானது. சுற்றுச்சூழல் மாசு அற்றது. அனல் மின் நிலையத்துக்கு டன் கணக்கில் நிலக்கரி தேவை. சுற்றுச்சூழல் மாசு ஏற்படும். ஆனால், குறைந்த அளவிலான யுரேனியம் தாதுவைக் கொண்டு அணுமின் நிலையங்களை செயல்படுத்த முடியும். அணுமின் நிலையங்களை அமைத்து 20000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் தோரியம் தாது அதிகளவில் உள்ளது. எனினும், அதை பயன்படுத்தும் வகையிலான அணு உலைகளை அமைக்க இன்னும் 10 ஆண்டுகள் ஆகும். இப்போது யுரேனியம் தாதுவை பயன்படுத்தக்கூடிய அணு உலைகள்தான் அமைக்கப்படுகின்றன. “இந்...
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப...