அணுசக்தி: சரியான பயன்பாடு நிச்சயம் நன்மை தரும்
ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
(முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர்)
(முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர்)
ஜப்பானில் 2011ஆம் ஆண்டில் ஃபுகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்தை அடுத்து,
சீனாவில் அணு உலைகள் கட்டுமானப் பணிக்குத் தடை விதிக்கப்பட்டது. இத்தடையை
சமீபத்தில் அந்நாட்டு அரசு விலக்கிக் கொண்டது. சீனாவில் ஏற்கெனவே 13 அணு
மின்நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. 40 அணு மின் நிலையங்களின்
கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
“அணு சக்தி மூலம் பெறப்படும் மின்சாரம் சுத்தமானது. சுற்றுச்சூழல் மாசு அற்றது. அனல் மின் நிலையத்துக்கு டன் கணக்கில் நிலக்கரி தேவை. சுற்றுச்சூழல் மாசு ஏற்படும். ஆனால், குறைந்த அளவிலான யுரேனியம் தாதுவைக் கொண்டு அணுமின் நிலையங்களை செயல்படுத்த முடியும்.
அணுமின் நிலையங்களை அமைத்து 20000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் தோரியம் தாது அதிகளவில் உள்ளது. எனினும், அதை பயன்படுத்தும் வகையிலான அணு உலைகளை அமைக்க இன்னும் 10 ஆண்டுகள் ஆகும். இப்போது யுரேனியம் தாதுவை பயன்படுத்தக்கூடிய அணு உலைகள்தான் அமைக்கப்படுகின்றன. “இந்தியாவில் அணு உலைகளை நிறுவும் பணிகள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுகின்றன.’
“ஜனநாயக நாட்டில் விவாதம் நடத்தவும், வாதாடவும் மக்களுக்கு முழு உரிமை உள்ளது. நான் கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஆய்வு செய்தேன். அந்த அணுமின் நிலையத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் பாதுகாப்பு தொடர்பாக நானும் சில ஆலோசனைகளை அளித்துள்ளேன்.’
சுற்றுச்சூழல்
மாசுபாடும், சீதோஷ்ண நிலை மாறுபாடும் உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக
உருவெடுத்துள்ளன. எரிபொருள் அச்சுறுத்தலாக உறுவெடுத்துள்ளன. எரிபொருள்
சுதந்திரம் (பிற நாடுகளைச் சார்ந்திருக்காத தன்மை) என்ற லட்சியத்தை அடைய
பிராந்திய அளவிலான ஒத்துழைப்பு என்ற நிலையிலிருந்து எரிபொருள் சுதந்திரம்
என்ற இலக்கை 2030க்குள் உலக நாடுகள் அடைய வேண்டும்.
இதற்கு 100 கோடி அமெரிக்க டாலர்களை அடுத்த 5 ஆண்டுகளுக்கு செலவிட வேண்டியிருக்கிறது. இரண்டாவதாக பொருளாதார தேக்க நிலை மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இது இந்தியாவையும், சீனாவையும் கூட விட்டு வைக்கவில்லை. இதை எதிர்கொள்ள பிராந்திய அளவிலான நாடுகளிடையே எரிபொருள், நீர்வளம், சுகாதாரம், கட்டமைப்பு, வேலைவாயப்பு உருவாக்கம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்த வேண்டும். இதற்காக 75 கோடி அமெரிக்க டாலர்களை அடுத்த ஆண்டுகளுக்கு செலவிட வேண்டும்.
என்னதான் நாம் வளர்ச்சியடைந்து வருவதாகக் கூறப்பட்டாலும், உலகில் 300 கோடி மக்கள் வறுமையின் பிடியில் உள்ளனர். அவர்களுக்கு வேலைவாயப்பை ஏற்படுத்தித்தர வேண்டும். இதற்கு “புரா’ திட்டத்தை (ஊரகப் பகுதிகளில் நகர்ப்புற கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருதல்) செயல்படுத்த வேண்டும். இதற்கென இத்திட்டத்துக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு 100 கோடி அமெரிக்க டாலர்களை ஒதுக்க வேண்டும்.
இப்பணிகளில் கவனம் செலுத்தினால், உலகில் பயங்கரவாதம் ஒழியும்.’
நன்றி: கலைமகள் இதழ்
Comments