தமிழ் நூலான தேவாரத்தில் குறிப்பிடப்பட்டு, பாடல் பெற்ற தலங்களாக விளங்கும் 275-க்கும் மேற்பட்ட கோவில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இவை 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தவை. ஆனால் இவற்றில் பெரும்பாலான கோவில்கள் இப்போது அழிவின் விளிம்பில் உள்ளன.
வருமானத்தை அடிப்படையாக கொண்டு, கோவில்களின் நிர்வாகம் பிரிக்கப் படுவதால்,
வருமானம் அதிகமில்லாத, பாடல் பெற்ற திருத்தலங்களும், வரலாற்று சிறப்பு
வாய்ந்த கோவில்களும், பாழடையும் அபாயத்தில் உள்ளன.இதன் மூலம் உருவாகும்
நிர்வாக சீர்கேட்டால், வரலாற்று சின்னங்கள் கொள்ளை போகும் அபாயம் ஏற்பட்டு
உள்ளதோடு, கோவில்சொத்துக்களும் வேகமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.
வருமான அடிப்படையில்...
இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில்;மாத வருமானம், 10 ஆயிரம் ரூபாயிலிருந்து, இரண்டு லட்சம் ரூபாய் வரை
இரண்டு லட்சம் ரூபாயிலிருந்து, 10 லட்சம் ரூபாய்வரை, 10 லட்சம் ரூபய்க்குமேல்... கோவில்கள் இவ்வாறு வகைப்படுத்தப் படுகின்றன. இதன்படி, இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல், வருமானம் வரும் கோவில்கள், இந்து சமய அறநிலைய துறையின், நேரடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும். வருமானத்தை அடிப்படையாக கொண்டு கோவில்கள் பிரிக்கப்படுவதால், 274 பாடல் பெற்ற சைவ திருத்தலங்களில் பெரும்பாலானவை அழியும் நிலையில் உள்ளன.
அர்ச்சகர் எங்கே?
உதாரணத்திற்கு: திருஞானசம்பந்தர் பாடிய, திருத்தலமான திருவையாறு நெய்யாடியப்பர் கோவில், காலை, 10:00 மணி வரை திறக்கப்படுவதில்லை.சுந்தரரும், அப்பரும் பாடிய, திருப்பெரும்புலியூர் வியக்ரபுரீஸ்வரர் கோவிலில், மூலவருக்கு விளக்கு ஏற்றுவதற்கு கூட வசதியின்றி உள்ளது.திருவெண்காடு, வேதாரண்யேசுவர சுவாமி திருக்கோவில், பள்ளி மாணவர்கள் கிரிக்கெட் விளையாடும் மைதானமாக பயன்படுகிறது. இங்குள்ள யாகசாலையின் அருகில், மதுபாட்டில்களும், சிகரெட் துண்டுகளும் குவிந்து இருக்கின்றன.
திருமங்கலக்குடி பிரணாநாதசுவாமி கோவிலில், அலங்கார மண்டபம் பாழடைந்துள்ளது. அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க முதுமக்கள் தாழி, கவனிப்பாரற்று உள்ளது.சிதிலமடைந்த கட்டுமானங்கள், பாதுகாப்பின்மை தவிர, பெரும்பான்மையான பாடல் பெற்ற திருத்தலங்களில் அர்ச்சகர்கள் இருப்பதில்லை.
ஒரே அர்ச்சகர், மூன்றுக்கும் மேற்பட்ட கோவில்களுக்கு பொறுப்பாக இருப்பதால், குறிப்பிட்ட கோவில்களில் கவனம் செலுத்த முடிவதில்லை.இதனால், தினமும், காலை 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியோடு திறக்கப்படவேண்டிய கோவில்கள் தாமதமாக திறக்கப்படுகின்றன. சில கோவில்கள், பிற்பகல் 3:00 மணிக்கு மேல் தான் திறக்கப்படுகின்றன.நிலை இப்படி இருக்க, ஆறு கால பூஜை, நித்ய அபிஷேகம், பிரசாதம் அனைத்தும்கேள்விக்குறி தான்.
கீழ் நிலை அதிகாரிகளே...
இதுகுறித்து,
இந்து சமய அறநிலைய துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,""வருமானத்தின்
அடிப்படையில் கோவில்களை பிரிப்பதில்லை. கோவில்களில் எந்த அளவிற்கு வருமானம்
வருகிறது என்பதை அறியவே, பிரிவுகளை ஏற்படுத்தி இருக்கிறோம். மற்றபடி
அனைத்து கோவில்களையும் ஒரே மாதிரி நிர்வகித்து வருகிறோம்,'' என்றார்.
மேலும், ""நால்வர் பாடல் பெற்ற திருத்தலங்கள் அனைத்திலும், ஆறு கால பூஜை நடத்துவதற்கு, அறநிலைய துறை நிதி உதவி வழங்கி வருகிறது. கோவில்களில் பூஜைகள் நடக்கிறதா என, இணை ஆணையர் மற்றும் அவருக்கு கீழ் உள்ள அதிகாரிகளே, கண்காணிக்க வேண்டும். அவ்வாறு கண்காணிக்காததால், பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. அவற்றில், இதுவும் ஒன்று,'' என்றார்.
ஆறு கால பூஜைக்கும் நிதி ஒதுக்கப்படுகிறது என்றால், திருப்பெரும்புலியூர் கோவிலில் விளக்கு ஏற்ற கூட நிதி இல்லாத நிலை எப்படி உருவானது? பூஜைக்கு ஒதுக்கப்படும் பணம் கையாடல் செய்யப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.கீழ் நிலை அதிகாரிகளின் பணியை, கள ஆய்வு செய்து கண்காணிக்கவேண்டியது உயர் அதிகாரிகளின் பொறுப்பு. தற்போது உள்ள நிலையில், அவ்வாறு நடப்பதாக தெரியவில்லை. அறநிலைய துறையின் செயல்பாடுகள் குறித்து, விசாரணை நடத்த அரசு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை, பக்தர்களிடையே எழுந்து உள்ளது.
இந்த கோவில்களில், கல்வெட்டுக்கள், பழங்கால ஓவியங்கள், சிற்பங்கள் என, ஏராளமான
வரலாற்று சின்னங்கள் உள்ளன. இவை அழியும் பட்சத்தில், வருங்கால தலைமுறைகள்
இவற்றை பற்றி அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்படும். மயிலாடுதுறை அருகே உள்ள,
பொன்னூர் சிவன் கோவில் பாடல் பெற்ற தலம். இது, பெரும்பாலானநேரம் பூட்டியே
கிடக்கிறது. "வெளியூரில் இருந்து அவ்வப்போது, இந்த கோவிலை தேடி பக்தர்கள்
வருகின்றனர்.
அவர்கள், பூட்டி கிடக்கும்கோவிலில், தரிசனத்திற்காக அர்ச்சகரை அணுகும்போது, இது பெருமாள் கோவில், சிவன்கோவில் அல்ல என, கூறி அர்ச்சகர் திருப்பி அனுப்பி விடுகிறார்' என, ஊர் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.கண்காணிப்பு இல்லாமல், இப்படியும்கோவில்கள் நிர்வகிக்கப் படும்போது, அவற்றில் உள்ள வரலாற்று சின்னங்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிறது.
மேலும், ""நால்வர் பாடல் பெற்ற திருத்தலங்கள் அனைத்திலும், ஆறு கால பூஜை நடத்துவதற்கு, அறநிலைய துறை நிதி உதவி வழங்கி வருகிறது. கோவில்களில் பூஜைகள் நடக்கிறதா என, இணை ஆணையர் மற்றும் அவருக்கு கீழ் உள்ள அதிகாரிகளே, கண்காணிக்க வேண்டும். அவ்வாறு கண்காணிக்காததால், பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. அவற்றில், இதுவும் ஒன்று,'' என்றார்.
ஆறு கால பூஜைக்கும் நிதி ஒதுக்கப்படுகிறது என்றால், திருப்பெரும்புலியூர் கோவிலில் விளக்கு ஏற்ற கூட நிதி இல்லாத நிலை எப்படி உருவானது? பூஜைக்கு ஒதுக்கப்படும் பணம் கையாடல் செய்யப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.கீழ் நிலை அதிகாரிகளின் பணியை, கள ஆய்வு செய்து கண்காணிக்கவேண்டியது உயர் அதிகாரிகளின் பொறுப்பு. தற்போது உள்ள நிலையில், அவ்வாறு நடப்பதாக தெரியவில்லை. அறநிலைய துறையின் செயல்பாடுகள் குறித்து, விசாரணை நடத்த அரசு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை, பக்தர்களிடையே எழுந்து உள்ளது.
வரலாற்று சின்னங்கள்:
அவர்கள், பூட்டி கிடக்கும்கோவிலில், தரிசனத்திற்காக அர்ச்சகரை அணுகும்போது, இது பெருமாள் கோவில், சிவன்கோவில் அல்ல என, கூறி அர்ச்சகர் திருப்பி அனுப்பி விடுகிறார்' என, ஊர் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.கண்காணிப்பு இல்லாமல், இப்படியும்கோவில்கள் நிர்வகிக்கப் படும்போது, அவற்றில் உள்ள வரலாற்று சின்னங்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிறது.
பூஜைகள் நடக்காத கோவில்களில், உற்சவங்களும்சரிவர நடத்தப்படுவதில்லை. இதனால், பழமை வாய்ந்த உற்சவ மூர்த்திகள், உற்சசவ வாகனங்கள், பல்லக்குகள் கடத்தப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
பாதுகாப்பு கேள்விக்குறி:
கோவில்களில் இருந்துகொள்ளை போகும், வரலாற்று சின்னங்களுக்கு, இந்த ஆண்டு கைதான சிலை கொள்ளையன் சுபாஷ்சந்திர கபூர் சிறந்த உதாரணம். அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்ட இவர், அரியலூர் மாவட்ட கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகளை, கூலி திருடர்கள் மூலம் பெற்று, மற்ற நாட்டு திருட்டு, வரலாற்று பொருட்களோடு சேர்த்து, நியூயார்க் நகரத்தில் விற்பனை செய்து வந்தார். இவரை போல் மேலும் பலர் செயல்படு வதாக, கூறப்படுகிறது.
அரியலூர் மாவட்டத்தில், அறநிலைய துறை கட்டுப்பாட்டில், 906 கோவில்கள் உள்ளன. ஆனால், அவற்றை நிர்வகிக்க, ஒரு துணை ஆணையர், ஆறு செயல் அலுவலர்கள் மற்றும் நான்கு ஆய்வளர்கள் மட்டுமே உள்ளனர். மற்ற மாவட்டங்களில், இத்தகைய ஆள் பற்றாக் குறை நிலையில் தான் அறநிலையதுறை செயல்பட்டு வருகிறது. பற்றாக்குறை இல்லாத இடங்களில், அறநிலையதுறை செயல்பாடுகள் மீது புகார்கள் உள்ளன.
தொடர வேண்டுமா?
மேலும், ""கோவில் பூஜைக்கென்று, ஐந்து சதவீத பணத்தை கூட செலவழிப்பதில்லை. உச்சபட்ச வருமானம் வரும் கோவில்கள் மட்டுமே கவனிக்கப்படுகின்றன. குறிப்பாக, அறுபடை வீடுகளையும், நவகிரக கோவில்களை மட்டுமே அதிக கவனம் செலுத்தி பராமரிக்கின்றனர். அதிலும், பல்வேறு பிரச்னைகள் உள்ளன. "அறநிலைய துறை அதிகாரிகளுக்கு வருமானம் மட்டுமே குறிக்கோளாக உள்ளது. காசு இல்லை என்றால், அவர்கள் கடவுளை கூட கவனிப்பதில்லை. இதற்கு சான்றாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் நூற்றுக்கணக்கான கோவில்கள் உள்ளன,'' என்றார்.அதாவது, அறநிலைய துறையால் நிர்வாகத்தையும் சரியாக நடத்த முடியவில்லை, வரலாற்று சின்னங்களுக்கான பாதுகாப்பையும் கொடுக்க முடியவில்லை. இதனால், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில், பழமை வாய்ந்தகோவில்கள் இருக்க வேண்டும் என்பது, ஒரு தரப்பு பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.
நடைமுறை சிக்கல்!
இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத
தொல்லியல் துறை அதிகாரி கூறுகையில்,""பாடல் பெற்ற திருத்தலங்களை தொல்லியல்
துறை, தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொள்வதற்கு நிறைய நடைமுறை
சிக்கல்கள் உள்ளன. குறிப்பிட்ட கோவில், இந்து சமய அறநிலைய துறையின்
கட்டுப்பாட்டிற்குள் இருந்தால், அதை எங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர
அனுமதியில்லை,'' என்றார்.
மேலும், ""கடந்த, 2010ம் ஆண்டு, கோவில்களை தொல்லியல் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு கடுமையான சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இதை விரும்பாதவர்களிடம் இருந்து, "மக்கள் எதிர்ப்பு' என்றபோர்வையில், எதிர்ப்பு கிளம்பியது. அதற்கு எடுத்துக்காட்டு, மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோவில் விவகாரம்,'' என்றார்.
அரசு துறைகளுக்கு இடை@யயான நடைமுறை சிக்கல்களால், பழமையான கோவில்களின் பராமரிப்பு கேட்பாரற்று கிடக்கிறது. இதனால், வரலாற்று சின்னங்கள் காணாமல்போவதோடு, @காவில்சொத்துக்களும் வேகமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.இந்த பிரச்னைகளை களைய, முதல்வர் ஜெயலலிதா தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பக்தர்களிடையே எழுந்து உள்ளது.

அரசு என்ன செய்ய வேண்டும்?
அறநிலைய துறையில் நிர்வாக ஊழியர்கள் மற்றும் செயல் அலுவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும்.
அறநிலைய துறையில், மாவட்ட வாரியாக தொல்லியல் பிரிவுகளை உருவாக்கி, அதில் தொல்லியல் நிபுணர்களை நியமிக்கவேண்டும்.
அல்லது, தொல்லியல் துறையுடன், அறநிலைய துறை இசைந்து பணியாற்ற நடைமுறைகளை உருவாக்க வேண்டும்.
வரலாற்று சிறப்புமிக்க கோவில்களின் நிர்வாகத்தை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கோவில்களில், வரலாற்று சின்னங்கள் பட்டியலிடப் பட்டு, அவற்றை பாதுகாக்க ஏற்பாடு செய்யப் பட வேண்டும்.
கோவில்களின் காவலுக்கும் ஏற்பாடுகள் தேவை. இதற்கு, அந்தந்த ஊர் மக்களை குழுக்களாக அமைத்து, அவர்களுக்கு கவுரவ ஊதியம் ஏற்பாடு செய்யலாம்.
கோவில்களின் சொத்துக்கள் பட்டியலிடப்பட்டு, பொது பார்வைக்கு கிடைக்கும் படி, அறநிலைய துறை இணையதளத்தில் வெளியிடப்படவேண்டும்.
சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பு செயல் அலுவலர்களிடம் இருந்து பறிக்கப்பட்டால், அன்றாட நிர்வாகம் முன்னேற வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த சொத்துக்களை ஒட்டுமொத்தமாக நிர்வகிக்க, அறநிலைய துறையில் உட்பிரிவு உருவாக்கப் படவேண்டும்.
இதன் மூலம், குறிப்பிட்ட கால இடைவேளையில், பொது ஏல அடிப்படையில், சொத்துக்கள் குத்தகைக்கு விடப்பட வேண்டும்.
சிவாலயங்களில் ஆறு கால பூஜை நடத்துவதற்கு தேவையானநிதியும், அதன் பயன்பாட்டை கண்காணிக்க நடைமுறைகளும் உருவாக்கப்பட வேண்டும்.
கோவில் பூஜைக்கென்று, 5 சதவீத பணத்தை கூடசெலவழிப்பதில்லை. உச்சபட்ச வருமானம் வரும் கோவில்கள் மட்டுமே கவனிக்கப்படுகின்றன. அறநிலைய துறை அதிகாரிகளுக்கு வருமானம் மட்டுமே குறிக்கோளாக உள்ளது. காசு இல்லை என்றால், அவர்கள் கடவுளை கூட கவனிப்பதில்லை. இதற்கு சான்றாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் நூற்றுக்கணக்கான கோவில்கள் உள்ளன.
என் கருத்து:
இந்த கோவில்கள் இந்து சமய சின்னங்கள் மட்டுமல்ல. இவை நம் பெருமை மிகுந்த வரலாறின் அடையாளங்கள். ஒவ்வொரு கோவிலும் ஒரு கலைப் பொக்கிஷம். மைனாரிட்டி மக்களின் ஜெருசேலம் யாத்திரைக்கும், ஹஜ் பயணத்திற்கும் நிதி தந்து உதவும் நம் தமிழ்நாடு அரசு, பெருபான்மை இந்து சமய கோவில்களை சரிவர பராமரிக்காமல் இருப்பது ஏன் என்பது 10 மில்லியன் டாலர் கேள்வி.
நன்றி: தினமலர் இணைய தளம்
செய்தி: ரமேஷ் ,தலைவர், ஆலய வழிபடுவோர் சங்கம்
Comments