பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு இந்த செய்தியே உதாரணம்: நியூ யார்க் நகரில் உள்ள "செரண்டிபிட்டி (Serendipity)" என்ற ரெஸ்டாரண்டில் அதனுடைய 50 வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் ஒரு மிக விலையுயர்ந்த Grand Opulence Sundae என்ற ஐஸ்க்ரீம் ஒன்றை 1000 அமெரிக்கன் டாலருக்கு (சுமார் ரூ.50,000/-) அறிமுகம் செய்துள்ளனர். இதன் சிறப்புகள்: தஹிதி மற்றும் மடகாஸ்கர் போன்ற நாடுகளில் விளையும் மிக உயர்ந்த வகை வனிலா பருப்பிலிருந்து இதன் வனிலா க்ரீம் எடுக்கப்படுகிறது. உலகிலேயே விலை உயர்ந்த "அமேடி போர்சிலானா (Amedei Porceleana) என்ற சாக்லேட் இதில் சேர்க்கப்படுகிறது. மேலும் விலையுயர்ந்த வெனிசுலா (Venezuela) நாட்டைச் சேர்ந்த சாக்லேட்டும் சேர்க்கப்படுகிறது. பாரிஸ் நகரிலிருந்து வரவழைக்கப்படும் செர்ரி பழங்கள், மார்ஸிபான், மற்ற விலையுயர்ந்த பழங்களும் சேர்க்கப்படுகின்றன. பிரான்ஸ் நாட்டில் அர்மனாக் பகுதியிலிருந்து வரவழைக்கப்படும் மிக உயர்ந்த வகை பிராந்தி சேர்க்கபடுகிறது. தங்கத்தை மிக லேசாகத் தட்டி அதில் கிடைக்கும் தங்க இலை (gold foil) சேர்க்கபடுகிறது (நம் நாட்டில...
காலை Japan இல் காஃபி, மாலை New York இல் காபரே, இரவில் Thailand இல் ஜாலி!, இனிமேல் நமக்கென்ன வேலி? என்றும், என்றும் இன்ப மயம்!