இந்த படத்தின் மேல் எனக்கு எந்த ஸ்பெஷல் காதலும் இல்லை. ஜேம்ஸ் வசந்தன் முதன் முறையாக இசை அமைத்திருக்கும் இந்த படத்தின் ஆல்பம் ரிலீஸ் சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியின் ஈவண்ட் மேனேஜர் என்ற முறையில் கலந்துகொண்டேன். சுப்ரமணியபுரம் என்பது மதுரையில் நான் வாழ்ந்த பகுதி. என் கல்லூரி காலம் கழிந்த பகுதி என்பதால் ஒரு ஆர்வம். படத்தின் கதைக் களமும் அதே மதுரையைச் சேர்ந்த சுப்ரமணியபுரம் என்பதால் இன்னும் ஈடுபாடு அதிகரித்தது. படத்தில் தெரிந்த ஒரே முகம் கஞ்சா கருப்பு ஒருவர்தான். '80 களில் நடந்த கதை என்பதால் படத்தில் வரும் ஆண்கள் எல்லோரும் bell bottoms அணிந்து கொண்டு, நிறைய முடியுடன் ஓரளவுக்கு ரியலாக இருக்க முயன்று இருந்தார்கள். படத்தின் இயக்குனர் பாலா மற்றும் அமீர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்ததால் நிறையவே எதிர்பார்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள். பாடல்கள் பற்றி சொல்கிறேன். ஏ ஆர் ரஹ்மானின் தயவால் ஆரம்பித்த ஒரு குளறுபடி யார் வேண்டுமானாலும் பாடலாம் என்ற ஒரு நிலை. ஒரு பக்கம் நிறைய பேருக்கு வாய்ப்பு கிடைப்பது நல்ல விஷயம் என்றாலும், தமிழே கொஞ்சம் கூட தெரியாத, அல்லது இன்னும் அவலமான விஷயமாக தமிழே உச்ச...
காலை Japan இல் காஃபி, மாலை New York இல் காபரே, இரவில் Thailand இல் ஜாலி!, இனிமேல் நமக்கென்ன வேலி? என்றும், என்றும் இன்ப மயம்!