சிவாஜி படத்தின் பிரமாண்ட (?) வெற்றிக்குபிறகு டைரக்டர் ஷங்கர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த இணையும் படம் ரோபோ.
ஹாலிவுட் தரத்திற்கு இந்த படம் பிரமாண்டமாக இருக்கும் என்று உலக திரையுலகமே எதிர்பார்த்து வருகிறது. சூப்பர் ஸ்டார் பல வெளிநாடுகளுக்கு சென்று பல நடிகைகளுடன் ஆடிப்பாடும் காட்சிகளும் ரோபோ படத்தில் உள்ளது. இதற்காக ஹாலிவுட் மேக்கப் கலைஞர்களை பயன்படுத்தவிருக்கிறார்கள். ரஜினியின் மேக்கப்பிற்கு மட்டும் ரூ.30 கோடி(!) வரை செலவிடவிருக்கிறார்களாம்.
இதுபற்றி படத்தை தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றான ஐங்கரன் நிறுவன அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ரோபோ படத்துக்கு ரூ.100 கோடி செலவழிக்க முதலில் திட்டமிடப்பட்டது. இப்போது மேலும் சில கோடிகள் தேவைப்படும் போலிருக்கிறது. அந்த அளவுக்கு பிரமாண்டம் இந்த படத்தில் இருக்கும், என்றார்.
ஹ்ம்ம்...இங்க நாமெல்லாம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.பத்து ஏறப்போகுதேன்னு கவலையோட இருக்கோம்!
Comments