T20 என்று சொல்லப்படும் IPL கிரிக்கெட் போட்டியின் ஜுரம் நாளுக்கு நாள் எகிறிக் கொண்டிருக்கிறது. சச்சின் வெற்றிகரமாக நேற்றைய போட்டியில் கலந்து கொண்டு நம் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை சுளுக்கு எடுத்திருக்கிறார். சச்சின் அடிச்சது 12 ரன்தான் , அப்புறம் என்னடா இது என்று கேட்பவர்களுக்கு; ஸ்ரீகாந்த் நேற்று சொன்னது போல, சச்சின் அணிக்கு திரும்பியதே பெரிய டானிக் என்பது போல மும்பை இண்டியன்ஸ் அணி நேற்று சும்மா களை கட்டியது. இதுவரை எந்த போட்டிகளிலும் அதிக ரன் எடுக்காத ஜெயசூர்யா நேற்று பொளந்து கட்டியது நினைவிருக்கலாம். தன் கூட சச்சின் இருப்பதால் தைரியமாக அடிக்கலாம் என முடிவெடுத்த மாதிரி இருந்தது ஜெயசூர்யாவின் ஆட்டம்.
இரண்டாவதாக, சென்னை அணியின் சொதப்பல் ஆட்டம். தோனி, பத்ரிநாத் தவிர மீதி எல்லோரும் எதோ ஒப்புக்கு ஆடிய மாதிரிதான் தோன்றியது. ஸ்டீபன் பிளெமிங் ஏன் இப்படி விளையாடுகிறார் என்று தோனி அவரைக் கண்டித்தால் பரவாயில்லை.
_______________________________________________________________________________
ஆரம்பத்தில் ஷேன் வார்ன் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாட வந்தபோது ஏளனத்துடன் பார்த்த எல்லோரும் இப்போது கன்னத்தில் தப்பு போட்டுக் கொள்ளவேண்டும். வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்று எம்ஜிஆர் பாணியில் ஷேன் வார்ன் சும்மா கலக்குகிறார்.
நன்றாக விளையாடி முதல் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஷேன் வார்ன், நேற்று ஜெய்ப்பூரில் நடந்த குண்டு வெடிப்புக்குப் பின் அணியில் விளையாடாமல் பேசாமல் ஆஸ்திரேலியாவுக்கு திரும்பி விடலாமா என தீவிரமாக யோசிக்கிறாராம். ஐய்யோ பாவம்.
__________________________________________________________________________________
ஐய்யோ பாவம், டிராவிட்! சும்மா போட்டு எல்லா அணிகளும் அவருடைய அணியை மிதி மிதி என்று மிதித்து விட்டன. என்னதான் நடக்கிறது அந்த அணிக்குள்? ஏன், சொல்லிவைத்த மாதிரி எல்லோரும் எல்லோருமே சொதப்ப வேண்டும்? போதாக் குறையாக இப்போது விஜய் மல்லயா வேறு டிராவிடை வசை பாட ஆரம்பித்து விட்டார். டிராவிட், பேசாமல் ஒரு கிரிக்கெட் கோச்சிங் ஸ்கூல் ஆரம்பிக்க வேண்டியதுதானே? நல்ல சில்லறை பார்க்கலாம். எப்படி பேட்டிங் செய்யக்கூடாது என்று டிராவிடும், எப்படி பௌலிங் செய்யக்கூடாது என்று கும்ப்ளேயும் வகுப்பு எடுத்தால் எதிர்கால கிரிக்கெட் பிழைக்கும்.
_____________________________________________________________________________________
யுவராஜ் அணி கிடுகிடுவென முன்னேறி வருகிறது. ஆரம்ப தோல்விகளைக் கண்டு தளராமல் இப்போது அணியை நன்றாகக் கையாளும் யுவராஜ் வாழ்க! வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற தீர்மானத்தில் அவர் இருப்பதாகத் தெரிகிறது. பின்னே, ஒவ்வொரு முறை அணி வெற்றி பெற்றவுடன் ப்ரீத்தி ஜிந்தா ஓடி வந்து, யுவாரஜை (மட்டும்) க்க்கட்டிப் பிடித்து முத்தமிடும் போது ஏன் தோன்றாது? ஸ்ரீசாந்த் இப்போது அழுது புரள்வதை எல்லாம் விட்டுவிட்டு சமர்த்தாக ஆடுகிறார்.

டெல்லி அணி ஷேவாக்கை மட்டுமே நம்பாமல் மற்றவர்களையும் பெண்டு எடுப்பது நல்லது. ஷேவாக் அவுட் ஆனால் அணி திணற ஆரம்பித்து விடுகிறது. சமீபத்தில் கொல்கத்தாவின் நைட் ரைடர்ஸ் அணியில் ஷோயப் அக்தர் புயல் மாதிரி நுழைந்து, அடுத்தடுத்து நான்கு விக்கெட்களை வீழ்த்தியதும் வெலவெலத்துப் போய்விட்டது டெல்லி டீம். சென்னை அணியிடம் கடைசி பந்தில் தோற்றதும் நினைவிருக்கலாம்.
____________________________________________________________________________________
டெக்கான் சார்ஜர்ஸ் என்றெல்லாம் பேர் வைத்துக்கொண்டு சார்ஜே இல்லாமல் சொதப்பிக் கொண்டிருக்கிறது ஹைதரபாத் அணி. விவிஎஸ் லக்ஷ்மண் பாவம், தடுமாறுகிறார். ஸ்டைரிஸ் என்னோமோ நன்றாகத் தான் பௌலிங் செய்கிறார். வேணுகோபால் ராவ், ரோஹித ஷர்மா ஆகியோர் நன்றாக பேட்டிங் செய்தாலும், கன்சிஸ்டன்சி இல்லை. ஷாயித் அபிரிதி படு மோசம். சமிந்தா வாஸ்???
கடைசி அணியாக வர, இந்த அணிக்கும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் நல்ல போட்டி இருக்கும்

கங்குலியின் நைட் ரைடர்ஸ் அணி சமாளித்துக்கொண்டு மேலே வந்திருக்கிறது. ஷருக்கான் என்ன சீன் போட்டாலும், கங்குலி இதுவரை முக்கி முனகி டீமை ஒப்பேற்றி கொண்டுவந்திருக்கிறார்.
தற்போது ஷோயப் அக்தரின் வருகை அணியை பலப்படுத்தி இருக்கிறதா அல்லது அவர் ஒன் மேட்ச் வொண்டரா என்று அடுத்த மேட்ச்சில்தான் தெரியும்.

Comments