அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் போல ஒரு கிறுக்குக்.... எங்கும் பார்க்க முடியாது. ஜனாதிபதி ஆன நாள் முதல் அமெரிக்க மக்களையும், உலக மக்கள் யாரையும் நிம்மதியாக வாழ விடுவதில்லை.
ஈரான், இராக் மீது போர், ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் என்று எதாவது ஒரு குளறுபடி செய்துகொண்டிருக்கும் இந்த கேனக் கபோதி, சமீபத்தில் திருவாய் மலர்ந்து, " உலகெங்கிலும் உணவு பற்றக்குறை வர இந்தியா மற்றும் சைனா தான் காரணம். ஏனென்றால், இங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து கொண்டிருப்பதால் அவர்கள் எல்லோரும் நல்ல, தரமான உணவுகளை சாப்பிட ஆரம்பித்தால் உணவுத் தட்டுப்பாடு வந்துவிட்டது," என்று உளறி இருக்கிறது.
இந்தியாவில் மத்திய தட்டு (middle class) மக்களின் எண்ணிக்கை சுமார் 350 மில்லியன், இது அமெரிக்க ஜனத் தொகையை விட அதிகம். தற்போது, இதில் பெரும்பாலானோர் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விட்டதால் அவர்கள் சாப்பிடும் உணவு அளவு அதிகமாகி விட்டது என்று அமெரிக்காவின் செக்ரடரி ஆப் ஸ்டேட் காண்டலீசா ரைஸ் கருத்து தெரிவித்துள்ளது மிகப் பெரிய முட்டாள்தனம்.
இந்தியாவில் எந்த மட்டும் வறுமை ஒழிந்திருக்கிறது, எந்த மட்டும் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது என்று நம் எல்லோருக்கும் தெரியும். நம்மை நம் அரசியல்வாதிகள் கொடுமைப் படுத்துவது பத்தாது என்று இந்த மாதிரி வெளிநாட்டு பன்னிகள் வேறு உள்ளே புகுந்து குட்டையை குழப்புகிறார்கள்.
சொல்லமுடியாது. அமெரிக்க அரசாங்கத்தைக் கண்டாலே பேதி போகும் நம் அரசு, திடீரென்று, இந்தியர்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளைக்கு மேல் சாப்பிடக்கூடாது என்று சட்டம் கூட கொண்டு வரலாம்.
Comments