Skip to main content

தொடரும் ஆஸ்கர் அவார்ட் படங்கள்...




There Will be Blood நான் ரசித்த மற்றொரு படம். My Left Foot, In the Name of the Father, The Last of the Mohicans போன்ற நல்ல படங்களில் மிக நன்றாக நடித்த டேனியல் டே லூயிஸ் என்ற நடிகர் மிக, மிக சிறப்பாக நடித்திருக்கும் ஒரு நல்ல படம்.

1890 களில் அமெரிக்காவெங்கும் எண்ணெய் (பெட்ரோல்) மோகம் பிடித்து தோண்டிய இடம் எல்லாம் எண்ணெய் வளம் பொங்க, ஏகப்பட்ட கோடீஸ்வரர்கள் உருவானார்கள். அப்படிப்பட்ட ஒருவரின் கதைதான் இது.

நாயகன் டேனியல் ப்ளைன்வ்யூ பணம் சம்பாதிப்பதையே குறியாக கொன்டவன். ஊர் ஊராகச் சென்று நிலங்களை கையகப்படுத்தி பின்னர், அவற்றில் எண்ணெய் கிணறுகள் தோண்டி கோடி, கோடியாகச் சம்பாதிக்கிறான். அவனுடைய ஒரே மகன், கிணறு தோண்டும் வெடி வெடித்து காது கேட்கும் திறனை இழக்க, அவனை கவனிக்க நேரம் இல்லாததால் வெளியூருக்கு அனுப்பிவிடுகிறான்.

டேனியல் பணபலத்திற்கும், முரட்டுத்தனத்திற்கும் எல்லோரும் பயந்து நடுங்கும் போது, எலை சண்டே என்பவன் அவனை அடிக்கடி உரசுகிறான். சண்டே ஒரு போலி மத போதகன். நம் ஊர் போலி சாமியார் ரேஞ்சுக்கு மக்களை ஏமாற்றி பெரியாளாக முயலும் அவனைப் பார்த்தாலே டேனியலுக்கு எரிகிறது.

சண்டேயின் அப்பாவை ஏமாற்றி அவர் நிலத்தையும் வாங்கிவிடுகிறான் டேனியல். இந்நிலையில் அவனுடன் இருந்துகொண்டு அவன் தம்பி என்று சொல்பவன், உண்மையில் தம்பி அல்ல என்று தெரிந்தவுடன் டேனியல் ஈவு இறக்கம் இல்லாமல் அவனைக் கொல்கிறான்.

இதைப் பார்த்துவிடும் சிலர் எலை சண்டேயிடம் போட்டுக் கொடுக்க, அவன் டேனியலை சர்ச்சுக்கு வரச் செய்து ஊரார் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வைக்கிறான். அதோடு நில்லாமல் தன்னுடைய சர்ச்சுக்கு பெரும் தொகை ஒன்றும் கேட்கிறான்.

அது வரை யாருக்கும் அடிபணியாத டேனியல் தன்னுடைய எண்ணெய் வியாபாரம் பறிபோய் விடக் கூடாது என்ற ஒரே காரணத்தினால் இதற்கு ஒப்புக் கொள்கிறான். இப்போது சில வருடங்களாக வெளியூரில் இருக்கும் டேனியலின் மகன் ஊர் திரும்புகிறான். அவனுக்கு நிரந்தரமாக காது கேட்கும் திறனுடன், பேசும் திறனும் போய்விட, தன்னுடைய நிர்வாகத்தை பார்த்துக்கொள்ள கையாலாகாத மகனை நினைத்து, நினைத்து டேனியலின் கோபம் வெடிக்கிறது. பிறகு மளமளவென அந்த பெருங்கோபத்தில் அவன் என்னவெல்லாம் செய்கிறான் என்பது டேனியல் டே லூயிஸின் அற்புதமான நடிப்பிற்கு ஒரு உதாரணம்.

மூட மத நம்பிக்கையை ஊதி வளர்க்கும் போலி சாமியார், பண வெறியில் எல்லாவற்றையும் இழக்க துணியும் பேராசைக்காரன், தன்னுடைய தந்தையே தன்னுடைய ஊனத்தைப் பார்த்து கேலி செய்வதைக் கண்டு மறுகும் மகன், இப்படி வித்தியாசமான பாத்திரங்கள் சிறப்பாக வந்தாலும் டேனியல் டே லூயிஸ் தூள் கிளப்புகிறார். சென்ற வருடத்தின் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை அவர் தட்டி சென்றதில் வியப்பில்லை.




அடுத்த படம் The RainMaker. என்னுடைய மனம் கவர்ந்த John Grisham எழுதிய நாவல், அதே பெயரில் 1997 ம் வருடம் வந்த படம். The Godfather படத்தை இயக்கிய Francis Ford Coppola தான் இந்த படத்தையும் இயக்கினார்.

நாயகன் ரூடி பேலர் (Matt Damon) ஒரு வளர்ந்து வரும் லாயர். அதிர்ஷடவசமாக லட்டு மாதிரி ஒரு கேஸ் கிடைக்கிறது. கூட இன்னொரு லாயரான டெக் (எனக்கு பிடித்த இன்னொரு அற்புதமான நடிகர், Danny De Vito) துணையுடன் ஒரு மிகப்பெரிய இன்ஷுரன்ஸ் நிறுவனத்தை எதிர்த்து போராட முற்படும்போது ஏகப்பட்ட பிரச்சினைகள்.

ஒரு மிகப்பெரிய சிகரட் நிறுவனம் தயாரிக்கும் சிகரட்டை புகைப்பதால் ஒரு இளைஞன் மிகச் சிறிய வயதில் புற்று நோய் வந்து அநியாயமாக இறக்கிறான். அவனுக்கு கிடைக்க வேண்டிய இன்ஷுரன்ஸ் பணம் கிடைக்காதபோது, ரூடி அந்த நிறுவனத்துடன் மோதி நியாயம் கிடைக்க பாடுபடுகிறான்.

அந்த இன்ஷுரன்ஸ் நிறுவனத்திற்கோ காம்பன்செஷன் குடுப்பதில் உடன்பாடில்லை. மிகப் பிரபலமான வக்கீல்களின் துணையுடன் நாயகனை அடக்கப் பார்க்க, அவன் டெக் துணையுடன் அந்த நிறுவனத்தை மண்டியிட வைக்கிறான்.

Matt Damon ஒரு bankable நடிகர். Danny De Vito ஒரு உன்னத நடிகர், Jon Voight (உலகமே கொண்டாடும் Angelina Jollie யை பெற்றெடுத்த மகானுபாவன்) ஒரு சிறந்த வில்லன்/குணசித்திர நடிகர். இவர்கள் எல்லோருமே போட்டி போட்டுக்கொண்டு நடிக்கிறார்கள்.

படங்களின் பட்டியல் தொடரும் மக்களே...

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்