Skip to main content

Posts

Showing posts from March, 2008

Batu Caves முருகன்

இதற்கு முன் பலமுறை மலேசியா வந்திருந்தாலும் பதுகை (Batu Caves) முருகன் கடைக்கண் பார்வை என் மேல் படாததால் அவர் தரிசனம் கிட்டவில்லை. இந்த முறை எப்படியாவது அவரைப் பார்த்து விட வேண்டுமெனத் தீர்மானித்து ரவியுடன் 22 ம் தேதி காலையில் சென்று விட்டோம். கோலாலம்பூரில் இருந்து 10 கீ.மீ தூரம் கூட இல்லை. மலை அடிவாரத்தில் இறங்கும்போதே 140 அடி உயரத்தில் தகதகக்கும் தங்க நிறத்தில் மிக பிரமாண்டமான முருகன், எனக்கு முன்னால் நீங்கள் எல்லாம் தூசுடா என்பது மாதிரி மிக உயர்ந்து நிற்கிறார். கிட்டத்தட்ட 250 டன் இரும்பும், 1500m3 (cubic meter) கான்க்ரீடும், 300 லி தங்க பெயிண்டும் சேர்ந்து சுமார் 2 கோடி (இந்திய மதிப்பில்) செலவில் அமைக்கப்பட்ட இந்த முருகன் உலகிலேயே மிக உயரமான ஹிந்துக் கடவுள் என்ற பெருமை பெறுகிறார். 1890 ம் ஆண்டு தம்புசாமி பிள்ளை என்பவரால் இங்கு முருகன் (மூலவர்) பிரதிஷ்டை செய்யப்பட்டார். பிறகு, 1892 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு தைப் பூசம் அன்றும் இந்த கோயிலில் மிக விசேஷமான பூஜைகள் இன்று வரை தொடர்ந்து நடந்தேறி வருகின்றன. இந்த சுண்ணாம்புக்கல் குகை அமைப்பு கிட்டத்தட்ட 400 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்...

காமிரா கவிதை (?) - கோலாலம்பூரில் ஒரு மழைக் காலம்!

பிசினஸ் நிமித்தமும், F1 ரேஸ் பார்க்கும் எண்ணத்திலும் மலேசிய தலைநகரான கோலாலம்பூர் வந்த போது, சென்னையைப் போலவே இங்கும் அதிசயமாக மார்ச் மாதத்தில் கனமழை சும்மா பின்னிப் பெடல் எடுத்துக் கொண்டிருந்தது. நல்ல வேளையாக ரேஸ் அன்று மழை இல்லாமல் நிறைய பேர் வயிற்றில் பீர் வார்த்தது. இந்த முறை கோலாலம்பூரில் கிடைத்த ஹோட்டல் ரூம் உண்மையிலேயே " a room with a view ( Petronas Towers)." மழை கொட்டிக்கொண்டிருந்த போது, அறைக்குள் இருந்து எடுத்த சில புகைப் படங்கள் உங்கள் பார்வைக்கு: வெகு நீலமாக, நிர்மலமாக இருந்த வானம், படிப்படியாக கருமேகங்கள் சூழ, மழை சட்டென ஆரம்பித்து, அரைமணி ஊற்றி விட்டு, பின் சடுதியில் காணமல் போனது. மொத்தம், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம். இந்த புகைப் படங்களை எடுத்த போது,உடன் துணையாக இருந்த நண்பர் ரவி மற்றும் Jack Daniels ஆகிய இருவருக்கும் என் நன்றி. ஜாக் டானியல்ஸ் யார் என்று கேட்பவர்கள், தயவு செய்து வேகமாக செல்லும் தண்ணி லாரி முன் விழவும்.

Like to taste these new wines?

Snake wine and Scorpion wine are Asian beverages that can be found in some Southeast Asian countries such as Vietnam, Thailand, Laos Cambodia, Korea, and Japan. To prepare this incredible beverage a cobra snake or some scorpions are put into a bottle filled with transparent rice wine liquor and some herbs are added before the drink is left to ferment for months. The venomous cobra snake used to make Snake wine is preserved to have the snake poison dissolved in the rice wine, as snake venom is protein-based its harmful effects are rendered inactive by the denaturing effects of ethanol that makes this wine a healthy liquor with many good(!) benefits. Many types of snake drinks can be found all across Asia, but the most famous one and the only original one is the one (my God, how many one!) found in Vietnam, Thailand, and Laos. This wine is believed to be a natural medecine to treat different health problems such as rheumatism, lumbago, and other health problems or acute pain. Snake wine ...

Sachin is No.1 (again!)

Tendulkar inspires new world order with immaculate innings Peter Roebuck March 5, 2008 -from The Sydney Morning Herald It was a contest full of thrills and spills, first Sachin Tendulkar seemed to have won the series for his team. Then the Indian lower order faltered. Australia collapsed again but as the crowd roared, so James Hopes restored hope for his overheated side. And then, with two cricketing countries agog, a mighty visiting captain tossed the ball to his most vulnerable bowler (Irfan Pathan) and the deed was done. It was enormous. Might have been a changing of the guard. Apart from the frenzied finish and the curious outbreak of tackles on the field, the abiding memory of the match came from Tendulkar's bat. The first final, in Sydney, had produced one of the game's finest chasing innings. Alas, the hullabaloo distracted attention from Tendulkar's hundred. Accordingly, reporters hoped for a second helping from the maestro. Happily he obliged with a superb effort i...

ஒண்ணுமே புரியல உலகத்திலே!

மணிச்சித்திரதாழு எனும் மலையாளப் படம் ரஜினி, பிரபு மற்றும் ஜோதிகா நடித்து சந்திரமுகி என்ற பெயரில் தமிழி வெளிவந்தது இன்னும் வருட கணக்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதை பூல் புலையா என்ற பெயரில் ஹிந்தியில் எடுத்து சுமாராக ஓடியது. இப்போது சந்திரமுகியை ஹிந்தியில் அதே பெயரில் டப் செய்து, சுமார் 150 பிரிண்டுகள் (இது மொழி மாற்ற படத்துக்கு ஒரு சாதனை என்கிறார்கள்) வெளியிட்டு மகாராஷ்டிர மாநிலமெங்கும் படம் பட்டையை கிளப்புகிறதாம். பாவம் கமல், பத்து வேடம் போட்டு இதோ, அதோ என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்களே தவிர படத்தின் ஒலி நாடா கூட இன்னும் வெளியிட முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறார்கள். அட சிவாஜி படத்தோட இதுவும் வரும் சொன்னங்கப்பா, ஆனா, ரஜினி அரசியலுக்கு கூட வந்துடுவாரு போல இருக்கு, இந்த தசாவதாரம் எங்கேயப்பா? (மிகவும் ஆற்றாமையுடன் ஒரு கமல் ரசிகன்). ஹ்ம்ம்... என்னைக்கோ?