மணிச்சித்திரதாழு எனும் மலையாளப் படம் ரஜினி, பிரபு மற்றும் ஜோதிகா நடித்து சந்திரமுகி என்ற பெயரில் தமிழி வெளிவந்தது இன்னும் வருட கணக்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதை பூல் புலையா என்ற பெயரில் ஹிந்தியில் எடுத்து சுமாராக ஓடியது. இப்போது சந்திரமுகியை ஹிந்தியில் அதே பெயரில் டப் செய்து, சுமார் 150 பிரிண்டுகள் (இது மொழி மாற்ற படத்துக்கு ஒரு சாதனை என்கிறார்கள்) வெளியிட்டு மகாராஷ்டிர மாநிலமெங்கும் படம் பட்டையை கிளப்புகிறதாம்.
பாவம் கமல், பத்து வேடம் போட்டு இதோ, அதோ என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்களே தவிர படத்தின் ஒலி நாடா கூட இன்னும் வெளியிட முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறார்கள்.
அட சிவாஜி படத்தோட இதுவும் வரும் சொன்னங்கப்பா, ஆனா, ரஜினி அரசியலுக்கு கூட வந்துடுவாரு போல இருக்கு, இந்த தசாவதாரம் எங்கேயப்பா?
(மிகவும் ஆற்றாமையுடன் ஒரு கமல் ரசிகன்). ஹ்ம்ம்... என்னைக்கோ?
Comments