பிசினஸ் நிமித்தமும், F1 ரேஸ் பார்க்கும் எண்ணத்திலும் மலேசிய தலைநகரான கோலாலம்பூர் வந்த போது, சென்னையைப் போலவே இங்கும் அதிசயமாக மார்ச் மாதத்தில் கனமழை சும்மா பின்னிப் பெடல் எடுத்துக் கொண்டிருந்தது. நல்ல வேளையாக ரேஸ் அன்று மழை இல்லாமல் நிறைய பேர் வயிற்றில் பீர் வார்த்தது.
இந்த முறை கோலாலம்பூரில் கிடைத்த ஹோட்டல் ரூம் உண்மையிலேயே " a room with a view ( Petronas Towers)." மழை கொட்டிக்கொண்டிருந்த போது, அறைக்குள் இருந்து எடுத்த சில புகைப் படங்கள் உங்கள் பார்வைக்கு:
வெகு நீலமாக, நிர்மலமாக இருந்த வானம், படிப்படியாக கருமேகங்கள் சூழ, மழை சட்டென ஆரம்பித்து, அரைமணி ஊற்றி விட்டு, பின் சடுதியில் காணமல் போனது. மொத்தம், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம்.
இந்த புகைப் படங்களை எடுத்த போது,உடன் துணையாக இருந்த நண்பர் ரவி
மற்றும் Jack Daniels ஆகிய இருவருக்கும் என் நன்றி. ஜாக் டானியல்ஸ் யார் என்று கேட்பவர்கள், தயவு செய்து வேகமாக செல்லும் தண்ணி லாரி முன் விழவும்.
Comments