Skip to main content

Posts

Showing posts from October, 2013

மாற்றம் மட்டுமே நிரந்தரம்

'வெள்ளத்தனைய மலர் நீட்டம்' என்ற குறளை நம்மில் பலர் கேட்டிருப்போம். தாமரைக்கு தனியாக எந்த உயரமும் இல்லை. தண்ணீரின் உயரம்தான் தாமரையின் உயரம். அதாவது தண்ணீரின் அளவுக்கு ஏற்ப தாமரை தன்னை மாற்றிக்கொள்ளும். மாற முடியாவிட்டால் அழிந்துவிடும் என்பதுதான் உண்மை. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல பிஸினஸ்களுக்கும் பொருந்தும். சில பிஸினஸ்கள் தாமரையைப் போல தன்னை மாற்றி அமைத்துக்கொண்டு நீண்ட காலம் வாழுகிறது. சில பிராண்ட்கள் வெற்றி இறுமாப்பில் தான் மாறத்தேவையில்லை என்று எண்ணி சவால் வெள்ளத்தில் மூழ்கி மறைந்துவிடுகிறது. கைக்கடிக்காரத்தை குவார்ட்ஸ் நிறுவனம்தான், முதலில் தயாரித்திருந்தபோதும், சாவி கொடுக்கும் கைக்கடிக்காரத்தையே விற்பேன் என அடம்பிடித்து தோற்றதைப்பற்றி நமக்குத் தெரியும். தான் உலகுக்கு அறிமுகப்படுத்திய டிஜிட்டல் கேமராவை அதிகம் விற்கத் தொடங்கினால், தன் ஃபிலிம் ரோல் விற்பனை பாதிக்கும் என்று எண்ணி பழைய கேமராவையே விற்று, கடைசியில் மொத்தமாக மறைந்த பிராண்டைப் பற்றியும் நமக்குத் தெரியும். இவ்வாறு தோல்வியடைந்த பிராண்டுகளைப் பற்றி அதிகம் அறிந்து கொள்வது நம்மை சோர்வடையச் செய்யும். மாறாக...

'கிராவிட்டி' (Gravity) -ஹாலிவுட் திரைப்பட விமர்சனம்

Cast Away, 127 hours, Life of Pi போல, சர்வைவல் (உயிர்வாழ வேண்டும் என்ற உந்துதல்) என்பதை அடிப்படையாகக் கொண்ட பல படங்கள் ஹாலிவுட்டிலிருந்து இறக்குமதி ஆகியிருக்கின்றன (தமிழில் மரியானைத் தவிர எதுவும் தோன்றவில்லை). ஒரு சாதாரண மனிதன், விதி வசத்தால் தனியாளாக எங்கேயாவது மாட்டிக்கொண்டு, அங்கிருந்து வீடு திரும்பப் படும் பாடுகளே, இவ்வகைக் கதைகளின் அடிப்படை. இந்த வகையான படங்கள், பத்தில் ஒன்பது, கண்டிப்பாக பாக்ஸ் ஆஃபிஸில் உயிர் பிழைத்துவிடும் என்பது வரலாறு. அப்படி சமீபத்தில் வந்து ஹிட்டடித்திருக்கும் படம்தான் 'கிராவிட்டி'. (  - - தேதி சங்கதி தெரியாதவர்களுக்கு : 10.4.13 என்பது அக்டோபர் மாதம் 4ம்  தேதியைக் குறிக்கும். அமெரிக்காவில், முதலில் மாதம், பின்னர் தேதி என்ற நடைமுறை இருக்கிறது.) ஒரு விண்கலத்தைப் பழுதுபார்க்கும் போது ஏற்படும் விபத்தால், அந்த விண்வெளி வீரர்களின் குழுவில் அனைவரும் இறந்து போக, புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் சாண்ட்ரா புல்லக் (Sandra Bullock-SPEED பட நாயகி) மட்டும் உயிர் பிழைக்கிறார். தான் வந்த விண்கலமும், பூமியைத் தொடர்பு கொள்ளத் தேவையான தொலைத்தொடர்பு ...

மனித உடல் உறுப்புகளின் சந்தை!

மனித உறுப்புகளின் களவு, விற்பனை, மோசடி, ஏழை நாடுகளின் மக்களை ஏமாற்றி அவர்களுடைய உடல் பாகங்களைத் திருடும் பன்னாட்டு நிறுவன வியாபாரிகளைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது The Red Market. நல்ல உடல் வளத்துடன் இருக்கும் நான் ஒரு கோடி ரூபாய்க்கு விலை போவேன் என்கிறார்  “The Red Market”    புத்தகத்தின் ஆசிரியர்  ஸ்கார்ட் கார்னி .  அவர் அமெரிக்கக் குடிமகனாக இருப்பதால் தன் உடல் பாகங்களுக்கான உண்மையான சந்தை விலையைச் சொல்கிறார் போலும். ஒருவேளை அவரே இந்தியா மாதிரியான ஏழை நாடுகளில் வாழ்ந்தால் இதில் 100ல் ஒரு பங்கு விலைக்குக் கூட அவரது உடல் பாகங்கள் விற்காது என்ற உண்மையை அவர் எழுதியுள்ள புத்தகமான “The Red Market”  ஐ படித்தால் எவராலும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். உலக அளவில் இன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடக்குமளவு மருத்துவத் துறை முன்னேறி இருக்கின்றது. ஆனால் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய மாற்று உறுப்புகள் வேண்டுமே? அது தான் இன்றைய விற்பனைப் பொருள். சந்தையில் பல பில்லியன்கள் இலாபம் தரும் நல்ல சரக்கு. உலகம் முழுவதும் மனித உறு...

எங்கே போகிறது தமிழ் சினிமா?

அண்மைக்காலமாக வெளிவருகிற திரைப்படங்களில் கதாநாயகனாகத் தோன்றும் இளைஞன் எப்படிச் சித்தரிக்கப்படுகிறான்? பொழுது விடிந்ததுமே குடிப்பவனாக (சூது கவ்வும்) கும்பலாக உட்கார்ந்து குடிப்பவனாக (மூடர் கூடம்) வேலை வெட்டி இல்லாமல், அதைத் தேடும் முயற்சி கூட இல்லாமல், பெண்களைத் துரத்திக்கொண்டு அலைபவனாக (கேடி ரங்கா கில்லாடி பில்லா, வருத்தப்படாத வாலிபர் சங்கம்) சாஃப்ட்வேர் வேலையை விட்டுவிட்டு ஆள் கடத்துபவனாக (மங்காத்தா, ‘சூது கவ்வும்) தன் தீய வழக்கங்களைத் திருத்த முயலும் பெற்றோர்களை ஒருமையில் பேசி அவமதிப்பவனாக (தீயா வேலை செய்யணும் குமாரு) இப்படித்தான் நம் தமிழக இளைஞர்கள் குடிகாரர்களாக, பொறுக்கிகளாக, பொறுப்பில்லாதவர்களாக, பெண்கள் பின்னால் அலைபவர்களாக, அதற்காக எந்த அவமானத்தையும் பொறுத்துக் கொள்ளும் சோரணையற்றவர்களாக இருக்கிறார்களா? உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்? பாத்திரங்கள் மட்டுமல்ல, அண்மைக்கால சினிமாக்களின் கதைக் கருக்கள் என்ன? விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு முன்பாக திரைக்கு வந்தது, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. தமிழகத்தின் சமகால தீவிரப் பிரச்சினை ஒன்றை நகைச்சுவை என்கிற பெயரில் நீர்த்துச்செய்யு...

நமக்குத் தேவை டான் பிரவுன்கள் - ஜெயமோகன்

ஜெமோ வின் அனைத்து படைப்புகளிலும் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், அவருடைய சில கட்டுரைகளை நல்ல சிந்தனையைத் தூண்டும் விதத்தில் அமைந்திருக்கும் என்பதை மறுக்க முடியாது. அவருடைய கட்டுரை ஒன்று (தமிழ் இந்து நாளிதழில் வெளியானது) என்னுடைய கவனத்தை ஈர்த்தது. தமிழில் வணிக ரீதியாக சிறப்பாக எழுதும் எழுத்தாளர்கள் (அமரர்  சுஜாதா போட்ட பாதையில்) யாரும் இல்லை என்று ஆதங்கப்படிருந்தார். முற்றிலும் உண்மை. தமிழில் படிப்பது அரிதாகி வரும் இந்த நேரத்தில் நல்ல கதையம்சத்துடன், விறுவிறுப்பான சிந்தனையுடன், வணிக ரீதியாக வெற்றி பெரும் விதத்தில்  எழுத  யாரேனும் வந்தே ஆக வேண்டும் என்பது நல்ல ரசிகன் என்ற முறையில் என்னுடைய எண்ணமும் கூட.  இதோ, ஜெமோவின் அந்த கட்டுரை: சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே: சில குறிப்புகள்' 1981-ல் வெளிவந்தது. அதில் ஒரு வரி அக்காலத்தில் மிகவும் பிரபலம். வணிகக் கேளிக்கை எழுத்துகளை அவை தமிழில் இருப்பதனாலேயே பாராட்டுவதைப் பற்றி நாவலுக்குள் வந்து சுந்தர ராமசாமியே சொல்வதுபோல அவ்வரி வரும்: ‘வாந்திபேதியில் தமிழ் வாந்திபேதி என்றும் வேசைத்தனத்தில் தமிழ் வேசைத்தனம் என்றும் உண்டோ?’ ...

பைத்தியக்காரர்களிடம் செல்லுபடியாவாரா காந்தி?

- ஜார்ஜ்  ஆர்வெல் 1949-ல் எழுதிய கட்டுரையின் சுருக்கமான மொழிபெயப்பு ( காந்தி ஜெயந்தி முடிந்து ஒரு நாள் ஆனாலும் இந்த அரிய  கட்டுரையைப் படிக்கலாம்) காந்தியின் சுயசரிதை முதன்முதலில் வெளியானபோது அதன் ஆரம்ப அத்தியாயங்களை மட்ட ரகக் காகிதத்தில் அச்சான ஓர் இந்திய நாளிதழில் படித்தேன். அவை எனக்குள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தின, அப்படிப்பட்ட தாக்கத்தை காந்தி என்னுள் அப்போது ஏற்படுத்தியிருக்காவிட்டாலும்கூட. காந்தி என்றால் ஒருவருக்கு என்ன தோன்றும்? சுதேசி கதர் துணி, ஆன்ம பலம், சைவ உணவு - இவை எதுவும் அப்போது என்னைக் கவரவில்லை. பின்தங்கிய, பசியோடு இருக்கும், அதிக அளவு மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டுக்குச் சரிப்பட்டு வராதவையாகத்தான் காட்சியளித்தன, மத்திய காலத்துக்குரியவையான அவரது திட்டங்கள். அவரை ஆங்கிலேயர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது அல்லது அவரைத் தாங்கள் பயன்படுத்திக்கொள்வதாக அவர்கள் நினைத்துக்கொண்டது வெளிப்படையே. அவர் என்றாவது நமக்குப் பயன்படுவார் என்ற நினைப்பில்தான் காந்தியிடம் எல்லாரும் கனிவாக நடந்துகொண்டார்கள். இங்கிலாந்தின் கன்சர்வேட்டிவ்கள் எல்லாம்...