Skip to main content

Posts

Showing posts from February, 2013

வனப்பு மிகு வால்பாறை - சிக்கன சுற்றுலா

தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் மிக அருமையான சுற்றுலா தலமான வால்பாறை அமைந்துள்ளது. வால்பாறையில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலைச் செடிகள் பயிரிடப்பட்டுள்ளன.  வால்பாறைக்குச் செல்லும் வழியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேலெனக் காட்சி தருவது தேயிலைத் தோட்டங்கள்தான். பொள்ளாச்சியில் இருந்து சுமார் 63 கி.மீ. தொலைவில் உள்ள வால்பாறைக்கு வனப்பகுதிக்குள்தான் சென்றாக வேண்டும். வால்பாறை துவங்கும் இடத்தில் ரம்மியமாகக் காட்சி தரும் ஆழியாறு அணை. அதற்கு அடுத்துக் குரங்கு அருவி. மொத்தம் 40 கொண்டை ஊசி வளைவுகள். செல்லும் வழியில பல்வேறு ஆழியாறு அணையின் காட்சி முனை, தமிழ்நாட்டின் விலங்கு என கூறப்படும் வரையாடு, சிங்கவால் குரங்கு, யானை, மலை அணில், சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளைப் பார்க்க முடியும். வால்பாறையில் மிக அதிக அளவில் சுற்றுலாத் தலங்கள் இருந்தாலும் அதிகமாக இவை வெளியில் தெரியவில்லை. அதனால் இங்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகத்தான் உள்ளது.  வால்பாறைக்கு ஏழாவது சொர்க்கம் (மிக அதிக மகிழ்ச்சி அளிக்கக் கூடிய இடத்தை இப்படித்...

கோடை சுற்றுலா - செலவு அதிகமில்லாத பிச்சாவரம்

கோடை விடுமுறைக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளன. இந்த கோடை விடுமுறையை எவ்வாறு செலவழிக்கப் போகிறோம் என்று திட்டமிடும் நேரம் இது. எனவே, தமிழகத்தில் உள்ள நல்ல சுற்றுலாத் தலங்களைப் பற்றி அறிந்து கொள்வது நல்லது. சுரபுன்னைக் காடுகள் இடையே நீண்ட நெடிய நீர்வழிப் பாதைகள்; அதில் படகுச் சவாரி; கண்ணைக் கவரும் தென்னை மரச் சோலைகள், பஞ்சு பஞ்சாய் வானில் மிதக்கும் மேகங்கள்... கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவாரத்தின் எழில் தோற்றம்தான் இவை. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கடலோரத்தில் பிச்சாவரம் என்னும் சுற்றுலா தலம் உள்ளது. கடலோரத்துக்கு அருகே அமைந்த வனப் பகுதியில் உள்ள எழில்மிகு மாங்குரோவ் (சுரபுன்னை) காடுகளை படகில் சுற்றிப் பார்த்து மகிழும் வகையில் இந்த சுற்றுலா தலம் அமைந்துள்ளது. இந்தியாவில் இரு இடங்களில்தான் தில்லைவனக் காடுகள் எனப்படும் மாங்குரோவ் காடுகள் உள்ளன. ஒன்று கொல்கத்தாவை ஒட்டிய கடலோர சதுப்பு நிலப் பகுதியில் இந்த மாங்குரோவ் காடுகள் அதிகப் பரப்பில் உள்ளன. அதற்குப்பிறகு தமிழகத்தில் பிச்சாவரத்தில்தான் தில்லைவனக் காடுகள் உள்ளன. இங்கு சதுப்பு நிலம் - கடலோடு இணைந்த நூற்றுக்கணக்கான ...

2010ல் இந்தியா / உலகம் எப்படி இருக்கும்?? - சுஜாதா

2005ல் அமரர் சுஜாதா கற்றதும் பெற்றதும் பகுதியில் 2010ல் இந்தியா / உலகம் எப்படி இருக்கும் என்பது பற்றி எழுதியுள்ளார். சில விஷயங்கள் அவர் நையாண்டியாக சொன்னாலும் இன்றைய நிலையும் அதுவே. 2010 என்பது அருகிலும் இல்லாத, தூரத்திலும் இல்லாத ஒரு ரெண்டுங்கெட்டான் எதிர்காலம். அதைப் பற்றி எழுதுவது ‘நிஜமாவதற்கும் பொய்த்துப் போவதற்கும் சம சாத்தியங்கள் உள்ளன. புள்ளி விவரங்களை மட்டும் கவனித்து எதிர் நீட்டினால் 2010ல் - செல் போன்கள் இரட்டிப்பாகும் - மக்கள் தொகை 118 கோடியாகும் - போக்குவரத்து அதிகரித்து நகரங்களில் அனைவரும் மாஸ்க் அணிவோம் - பெண்கள் வருஷம் மூன்று தினம் புடவை கட்டுவார்கள் - ஆண்கள் அதிக அளவில் தலை முடியை இழப்பார்கள் - ஒரு பெரிய மதக் கலவரம் இந்தியாவில் வரும் - ராகுல் பிரதமர் ஆவார் - தமிழ்நாட்டில் அ.தி.மு.க அல்லது தி.மு.க கூட்டணி ஆட்சி நடக்கும். - தயாரிப்பாளர்கள் பலரின் பிள்ளைகள் படம் எடுப்பார்கள் - அலுவலகத்தில் செய்வது அத்தனையும் செல்போனில் செய்ய முடியும். - கவிதைத் தொகுப்புகளில் காதல் குறையும் - வாரப் பத்திரிகைகளில் தொடர்கதைகளும் சிறுகதைகளும் அறவே நீக்கப்பட்டு, ம...

எப்படியும் வாழலாம் - - சுஜாதா

"உ ங்களுக்கு வயசு எத்தனை?" "செரியாச் சொல்ல முடியாதுய்யா!" "உங்க அப்பாஅம்மா?" "அவங்கதான் இல்லியே பூட்டாங்களே இருந்தாங்கன்னா விசாரிச்சு எத்தனை வயசுன்னு சொல்லலாம்." "உங்க சொந்த ஊரு?" "கோலாருக்குப் பக்கத்துல கொடுமூர்னு ஒரு கிராமம்." தொழில்?" " ' .'ன்னு சொன்னா பத்திரிகைல போடுவாங்களா, போட மாட்டாங்களா?" "போட மாட்டாங்க!" "அப்ப இரவு ராணின்னு வெச்சுக்க. என்னைப்  பொறுத்தவரையிலும் பகல்லயும் நான் ராணிதான்." "அப்படியா?" "என் பேரே ராணிதானே!" "எழுதப் படிக்கத் தெரியுமா உங்களுக்கு?" "அதெல்லாம் நல்லா வராதும்மா எனக்கு வந்த ஒரே கலை அதைப்பத்திதான் கொஞ்ச நேரம் களிச்சுச் சொல்லப் போறேனே, இருட்டினதும்! என்ன சிரிக்கிறே?" "உங்களுக்கு வேற எதுவுமே தெரியாதா? யோசிச்சுப்பாருங்க." "இதப் பாரு, உங்களுக்கு கிங்களுக்கு எல்லாம் வேணாம். ஒனக்குன்னு சொல்லேன். இன்னிக்கிருந்தா உனக்கென்ன வயசிருக்கும்? நீ, நான்னு கூப்பிடு, பரவாயில்ல...

ஒரு இலட்சம் புத்தகங்கள் - சுஜாதா

மே மாதம் 31ம் தேதி 1981ம் வருடம் யாழ்ப்பாணத்தில் இருந்த யாழ் பொது நூலகம் சிங்கள ராணுவத்தினரால் எரிக்கப்பட்டது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அரிய பல தமிழ் நூல்கள், பழங்காலத்து ஓலை சுவடிகள் ஆகிய எண்ணற்ற பொக்கிஷங்கள் எரிந்து சாம்பலாயின. இந்த சம்பவத்தில் நான்கு தமிழர்கள் உயிரிழந்தனர். நூலகத்துக்கு அருகில் இருந்த ஒரு இந்து கோவிலும் சிதைக்கப்பட்டது. சுஜாதாவின் இந்த அருமையான கதையில் நம் இனத்தை நாமே எப்படி மாற்றாந்தாய் போல நடத்துகிறோம் என்பதை சுஜாதா அவருக்கே உரித்த பாணியில் சொல்லியிருக்கிறார்.                                                              ************************ சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International ...

சுஜாதா & கமல் இணைந்து கலக்கிய விக்ரம் திரைப்படம்-ஒரு அலசல்

நன்றி: giriblog.com  ஒ ரு சில படங்கள் மற்றவர்களை விட நமக்கு ரொம்பப் பிடித்து விடும் அதற்கு பல காரணங்களை நம்மால் கூற முடியும் ஆனால் அதே மற்றவர்களுக்கு நகைச்சுவையாகவோ அல்லது அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவோ இருக்கும். அதைப்போல படங்களில் ஒன்று தான் எனக்கு ரொம்பப் பிடித்த “விக்ரம்”. இந்தப்படம் எப்போது பார்த்தாலும் எனக்கு சலிக்காது. அதற்குக் காரணம் படத்தில் உள்ள புதுமை யாரும் (தமிழில்) முயற்சி செய்யாத கதை மற்றும் படத்தில் வரும் வித்யாசமான காட்சி அமைப்புகள், இடங்கள். அக்னிபுத்திரன் என்ற ஏவுகணையை கடத்தி விடும் கும்பலில் இருந்து எப்படி நாட்டைக் காக்கிறார்கள் என்பதே கதை. இந்தப்படத்தில் பெரிய குற்றச்சாட்டாக படம் வந்த போது கூறப்பட்ட விஷயம் அவ்வளவு முக்கியமான ஏவுகணையை Just like that மூன்று பேர் கடத்தி விடுவதாக காட்டி இருந்தது கடைசியில் விமானத்தில் இருந்து விழும் போது வரும் கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் சில லாஜிக் இடறல்கள். இவை தவிர படத்தில் ரசிக்க எவ்வளவோ காட்சிகள் இருக்க நம்ம மக்கள் அதை மட்டுமே பிடித்துக்கொண்டு விட்டார்கள். கமலிடம் ஒரு பிரச்சனை ரொம்ப காலம் கழ...

சுஜாதா சாரோட நாற்காலி !!

என் பிராப்பர்டி டெவலெப்மென்ட் பிஸினஸின் ஆரம்ப காலம். அப்போதுதான் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவருடைய பிராப்பர்டியை டெவலெப் பண்ணிக்கொண்டிருந்தேன். பிரபல எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கு ஒரு அபார்ட்மென்டை விற்பதற்காக அவரையும் திருமதி சுஜாதா அவர்களையும் சந்திக்க நேர்ந்தது. கம்பெனியில் இன்னார் என்று முதலில் அறிமுகப்படுத்திக் கொண்டேன். அபார்ட்மென்ட் பற்றி, அதன் விலை மற்ற டீடெல்ய்ஸ் எல்லாவற்றையும் சொன்னேன்! திருமதி சுஜாதா அவர்கள் காட்டிய கொஞ்ச நஞ்ச விருப்பத்தைக்கூட, சுஜாதா அவர்கள் தன் முகத்தில் காட்டிக்கொள்ளவில்லை. சற்று நேரத்திற்குப் பிறகு, சுஜாதா பக்கம் திரும்பி, "சார், நான் உங்களுடைய பரம விசிறி. உங்க கதையெல்லாம் செண்பகப்பூ, கணேஷ்-வஸந்த் போன்ற நாவல்களை ரொம்ப விரும்பிப் படிச்சிருக்கேன்'' என்றேன். "அப்படியா? வெரிகுட்! வெரிகுட்! ஆங், அப்புறம் சொல்லுங்க. நான் என்ன பண்ணணும்?'' என்றார். ஆனால் நான், "சார், உங்களுக்கு எழுத்தாளர் ஆர்வியைத் தெரியுமா?'' என்று கேட்டேன். "ஆர் வியா என்னப்பா இப்படிக் கேட்டுட்டே? அவர் பெரிய எழுத்தாளர்...

சுஜாதாவின் பத்து கட்டளைகள்!!!

இந்த மாதம் 27-ம் தேதியோடு தலைவர் சுஜாதா மறைந்து 5 வருடங்களாகின்றன. நம்மைப் பொறுத்தவரை அவர் எழுத்துக்கள் மூலம் அவர் நம்முடன்தான் இருக்கிறார்.  சற்று தாமதமாக (இன்று தேதி பிப்ரவரி 10) ஆரம்பித்தாலும் இந்த மாதம் முழுவதும் என்னுடைய பெரும்பாலான பதிவுகள் அவரைப் பற்றியே இருக்கும். சுஜாதா-என்றும் நம்முடன்  சுஜாதாவின் பத்து கட்டளைகள். 1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது. 2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும். 3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்னி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி ...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...