Skip to main content

Posts

Showing posts from May, 2011

ஏர்டெல் நிறுவனத்தின் அலட்சியம்: கோடிகளில் பணம் வீண்!!

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் நிலையில், ஏர்டெல் நிறுவனத்தின் அலட்சிய போக்கால் நாள்தோறும் ஏராளமான டீஸல் வீணாகிறது. விஷம் போல ஏறிக்கொண்டிருக்கும் எரிபொருள் விலையினால் நாம் வாங்கும் ஒவ்வொரு அத்தியாவசியப் பொருளின் விலையும் தாறுமாறாக ஏறிக்கொண்டிருக்கிறது என்பது ஊரறிந்த சேதி. ஏர்டெல்  மற்றும் பல தொலைபேசி/அலைபேசி நிறுவனங்களால் அரசுக்கு ஆண்டுதோறும் ஏற்படும் இழப்பு கிட்டத்தட்ட ரூ.2600 கோடியாகும். இதில் முதலிடத்தில் இருக்கும் ஏர்டெல் மட்டுமே நாடெங்கிலும் உள்ள பெரும்பாலான அலைபேசி கோபுரங்களை (mobile towers) ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. இந்த கோபுரங்களை இயக்க எரிபொருள் தேவை. இதற்குதான் ஏராளமான டீசலை ஏர்டெல் நிறுவனம் தேவையில்லாமல் செலவு செய்து வருகிறது. டீசலுக்கு பதிலாக சுற்றுசூழலுக்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மாற்று எரிபொருளை (renewable energy)-உதாரணம் சூரியசக்தி -பயன்படுத்துமாறு சுற்றுசூழல் ஆர்வலர்களும், பொதுமக்களும் கேட்டுக்கொண்ட பிறகும் ஏர் டெல் மற்றும் பல பெரிய தொலை/அலைபேசி நிறுவனங்கள் அதை காதில் போட்டுக் கொண்டதாக தெரியவில்லை. நம் மத்...

உலகநாயகன் கமல் ஹாசனின் விஸ்வரூபம்: இயக்குனர் மாற்றம்

இத்தனை நாளும் செல்வராகவன் இயக்கி கமல் நடிப்பதாக இருந்த விஸ்வரூபம் படம், திடீரென கமலே இயக்குவதாக செய்தி வெளியாகி உள்ளது. இந்தப் படத்தின் கதை, வசனம், பாடல்கள் மற்றும் இயக்கம் அனைத்துமே கமல் செய்யப்போவதாக ஒரு செய்தி.  இசை மட்டும் போனால் போகிறது என்று ஷங்கர் மகாதேவன்-ஈஷான்-லாய் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இந்த மூவர் இசை அமைத்த படம் ஆளவந்தான். அதில் எந்தப் பாடலுமே ஹிட் ஆகவில்லை என்பது தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்தது. முதலில் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பார் என செய்தி வந்தது. பிறகு கமலின் தலையீட்டால் இந்த மாற்றம். இது வரை இல்லாத அளவு இந்தப் படத்திற்கு ரூ.150 கோடி பட்ஜெட் என தகவல். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வரும் நவம்பர் 7 தேதி (கமலின் பிறந்த நாள்) வெளியாகும் எனத் தெரிகிறது. இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி அடைய கமலின் தீவிர ரசிகன் என்ற முறையில் மனமார்ந்த வாழ்த்துக்கள். அதே தீவிர ரசிகன் என்ற முறையில் சில சந்தேகங்கள்: செல்வராகவன் இயக்காவிட்டால் வேறு யாரும் இயக்கக்கூடாதா? ஏன் கமலே இயக்க வேண்டும்? நடிப்பில் கமலை வெல்ல வேறு யாருமில்லை என்பது...

ஆடம்பரம் வேண்டாம் : எளிமை வேண்டும் : முதல்வர் ஜெ., வேண்டுகோள்- 9 கோடி புத்தகங்களை மாற்ற ஆகும் செலவு? அது தண்ட செலவு இல்லையா?

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில சட்டசபை பொதுத்தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் அவரவர் தொகுதிகளுக்கு நன்றி தெரிவிக்க செல்லும் போது எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாமல், எளிமையாக, அநாவசியமாக செலவு செய்யாமல் செல்ல வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். அம்மா, ரொம்பவும் மகிழ்ச்சியான செய்தி. ஆனால், முன்னாள் முதல்வரின் படைப்புகள் சில குழந்தைகளின் பாடப் புத்தகங்களில் இருக்கும் ஒரே காரணத்திற்காக, அவற்றை நீக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஏற்கனவே அச்சிடப்பட்டுள்ள 9 கோடி பாடப் புத்தங்களை என்ன செய்யப் போகிறார் என்பது ஒரு முக்கியமான கேள்வி. அத்தனைப் புத்தகங்களை மீண்டும் புதிதாக அச்சிட எவ்வளவு செலவு என்பது ஒருபுறமிருக்க, அத்தனை புத்தகங்களுக்கான காகிதம் கிடைக்க இன்னும் எத்தனை கோடி மரங்களை அழிக்க வேண்டும்? அம்மா யோசிப்பாரா? புதிய சட்டசபை கட்டிட பணிகள் முடிந்தபின் அதை என்ன செய்யப்போகிறார் என்பதோடு, ஏற்கனவே அச்சிடப்பட்டுள்ள புத்தகங்களில் வேண்டாத பக்கங்களை அந்தந்த பள்ளிகளில் சொல்லி ஸ்டேப்ளர் போட்டுவிடலாமே? இதற்காக மறுபடியும் தண்ட செலவு தேவையா? எம்.எல்.ஏக்களுக்கு எளிமை...

துபாய்! துபாய்!! துபாய்!!!

பல நாடுகளை ஏற்கனவே பார்த்து விட்டாலும், இதோ வெகு அருகிலேயே இருக்கும் துபாய் மற்றும் இலங்கையை இன்னும் பார்க்கவில்லை என்ற குறை எனக்குள் ரொம்ப நாட்களாக இருந்து வந்தது. நெருங்கிய நண்பர் ஒருவர் இலங்கைக்கு சென்றுவிட்டு வந்து, "என்னடா, அப்பிடியே கேரளாவுக்கு போயிட்டு வந்த மாதிரி இருக்கு," என்று சொல்லவே, இலங்கை செல்லும் ஆசை குறைந்துவிட்டது. துபாய் செல்லும் சந்தர்ப்பம் கடந்த 30 ம் தேதி கிட்டியது. என்னுடைய அலுவலக வேலை நிர்பந்தத்தின் காரணமாக என்னுடைய பெரும்பாலான பயணங்கள் தனியாகவே அமைந்துவிடும். ஒரு சில பயணங்கள் என் நெருங்கிய நண்பர்களுடன். ஒரே ஒரு முறை குடும்பத்துடன் சிங்கப்பூர், மலேசியா மற்றும் தாய்லாந்து சென்று வந்தேன். துபாயில் காலை ஆறு மணிக்கு விமான நிலையத்திலிருந்து வெளிவந்தபோது ஏதோ அடுப்புக்குள் வந்த மாதிரி ஒரு சூடு. உடனடியாக காத்திருந்த காரில் ஏறி ஹோட்டலுக்கு சென்றுவிட்டோம். என் மனைவி தீவிர சைவம் என்பதால், ஒரு வேளை சாப்பிட சரியாக கிடைக்காவிட்டால் எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு சர்விஸ் அப்பார்ட்மென்ட்டை புக் செய்து வைத்திருந்தேன். நல்ல காற்றோட்டமாக, வாஷிங் மெஷின், பிரிட்ஜ், மைக்ர...