ஆடம்பரம் வேண்டாம் : எளிமை வேண்டும் : முதல்வர் ஜெ., வேண்டுகோள்- 9 கோடி புத்தகங்களை மாற்ற ஆகும் செலவு? அது தண்ட செலவு இல்லையா?
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில சட்டசபை பொதுத்தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் அவரவர் தொகுதிகளுக்கு நன்றி தெரிவிக்க செல்லும் போது எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாமல், எளிமையாக, அநாவசியமாக செலவு செய்யாமல் செல்ல வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். அம்மா, ரொம்பவும் மகிழ்ச்சியான செய்தி.
ஆனால், முன்னாள் முதல்வரின் படைப்புகள் சில குழந்தைகளின் பாடப் புத்தகங்களில் இருக்கும் ஒரே காரணத்திற்காக, அவற்றை நீக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஏற்கனவே அச்சிடப்பட்டுள்ள 9 கோடி பாடப் புத்தங்களை என்ன செய்யப் போகிறார் என்பது ஒரு முக்கியமான கேள்வி.
அத்தனைப் புத்தகங்களை மீண்டும் புதிதாக அச்சிட எவ்வளவு செலவு என்பது ஒருபுறமிருக்க, அத்தனை புத்தகங்களுக்கான காகிதம் கிடைக்க இன்னும் எத்தனை கோடி மரங்களை அழிக்க வேண்டும்? அம்மா யோசிப்பாரா? புதிய சட்டசபை கட்டிட பணிகள் முடிந்தபின் அதை என்ன செய்யப்போகிறார் என்பதோடு, ஏற்கனவே அச்சிடப்பட்டுள்ள புத்தகங்களில் வேண்டாத பக்கங்களை அந்தந்த பள்ளிகளில் சொல்லி ஸ்டேப்ளர் போட்டுவிடலாமே? இதற்காக மறுபடியும் தண்ட செலவு தேவையா?
எம்.எல்.ஏக்களுக்கு எளிமையை போதிக்கும் முதல்வர் இதைப் பற்றி யோசிக்க வேண்டும்.
Comments