நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் நிலையில், ஏர்டெல் நிறுவனத்தின் அலட்சிய போக்கால் நாள்தோறும் ஏராளமான டீஸல் வீணாகிறது. விஷம் போல ஏறிக்கொண்டிருக்கும் எரிபொருள் விலையினால் நாம் வாங்கும் ஒவ்வொரு அத்தியாவசியப் பொருளின் விலையும் தாறுமாறாக ஏறிக்கொண்டிருக்கிறது என்பது ஊரறிந்த சேதி.
ஏர்டெல் மற்றும் பல தொலைபேசி/அலைபேசி நிறுவனங்களால் அரசுக்கு ஆண்டுதோறும் ஏற்படும் இழப்பு கிட்டத்தட்ட ரூ.2600 கோடியாகும். இதில் முதலிடத்தில் இருக்கும் ஏர்டெல் மட்டுமே நாடெங்கிலும் உள்ள பெரும்பாலான அலைபேசி கோபுரங்களை (mobile towers) ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. இந்த கோபுரங்களை இயக்க எரிபொருள் தேவை. இதற்குதான் ஏராளமான டீசலை ஏர்டெல் நிறுவனம் தேவையில்லாமல் செலவு செய்து வருகிறது.
டீசலுக்கு பதிலாக சுற்றுசூழலுக்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மாற்று எரிபொருளை (renewable energy)-உதாரணம் சூரியசக்தி -பயன்படுத்துமாறு சுற்றுசூழல் ஆர்வலர்களும், பொதுமக்களும் கேட்டுக்கொண்ட பிறகும் ஏர் டெல் மற்றும் பல பெரிய தொலை/அலைபேசி நிறுவனங்கள் அதை காதில் போட்டுக் கொண்டதாக தெரியவில்லை. நம் மத்திய/மாநில அரசுகள் அவரவர் வசதிக்கேற்ப பொது மக்களை கொள்ளை அடித்து வரும்போது இதையெல்லாம் கவனிக்க அவர்களுக்கு ஏது நேரம்?

Comments