பிப்ரவரி 2008 ம் ஆண்டில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.49.61 அப்போதைய கச்சா (crude) விலை ஒரு பேரலுக்கு $92 (அமெரிக்க டாலர்கள்). உலகச் சந்தையில் நேற்றைய கச்சா ஒரு பேரலுக்கு $93. ஆனால் நேற்றைய பெட்ரோல் விலை சென்னையில் ரூ.63.36!!! ஏன் இப்படி என்றால், 2008 ம் ஆண்டில் பெட்ரோல் விலை நம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது அது பெட்ரோலிய நிறுவனங்கள் வசம் உள்ளது. கடந்த வருடம் ஜூன் மாதம் மத்திய அரசு பெட்ரோல் விலைகளை ஏற்றவும், இறக்கவும் (?) முழு அனுமதியை பெட்ரோலிய நிறுவனங்களிடம் தாரை வார்த்துவிட்டது. எப்போதெல்லாம் கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் விலை ஏறுகிறதோ, அப்போதெல்லாம் இங்கே பெட்ரோலின் விலையை ஏற்ற அந்த நிறுவனங்களுக்கு முழு அதிகாரமும் தந்தது. கடந்த ஆறு மாதங்களில் ஆறு முறை பெட்ரோல் விலை உயர்ந்துவிட்டது என்பது என் வீட்டு நாய்க்குக்கூட தெரியும். முன்பு பெட்ரோல் விலை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோது APM (Administered Pricing Mechanism) என்று ஒரு வரைமுறை இருந்தது. இதன்படி பெட்ரோல் விலையை ஏற்றியும் (பெரும்பாலான சமயம்), இறக்கியும் (ஒரு சில சமயம்) வந்தது. பெ...
காலை Japan இல் காஃபி, மாலை New York இல் காபரே, இரவில் Thailand இல் ஜாலி!, இனிமேல் நமக்கென்ன வேலி? என்றும், என்றும் இன்ப மயம்!