டே, அவனா நீ? |
உலகத்தில் வசிக்கும் உயிரினங்களில் (மனிதனைத் தவிர) மிகக் கொடிய விஷம் கொண்ட உயிரினம் ஏது என்றால் பெரும்பாலானோர் பாம்பையோ அல்லது சிலந்தியையோ குறிப்பிடுவார்கள். ஆனால், உண்மையில் அத்தகைய பெருமை வெறும் 5cm அளவிலான ஒரு தவளை!
நீரிலும், நிலத்திலும் வாழும் திறன் பெற்ற தவளைகள் மிகவும் சாதுவானவை, ஆபத்தில்லாதவை என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், பசிபிக் கடலோரங்களில் வசிக்கும் ஒரு வகை தவளை, கொடிய விஷம் கொண்டது. ஒரே கடியில், மனிதனை பரலோகத்திற்கு அனுப்பும் அளவிற்கு இத்தவளையின் விஷம் ஆபத்தானது. பூமியில் உள்ள உயிரினங்களில் அதிக விஷம் கொண்டது இந்த தவளையினம் என்று ஆராய்ச்சியாளர் கள் கூறுகின்றனர். இந்த, "கோல்டன் டார்ட் பிராக்' (Golden Dart Frog) கொலம்பியா கடலோரத்தில் உள்ள அடர்ந்த மழைக் காடுகளில் அதிகமாக வாழ் கின்றன. அக்கால கொலம்பிய மக்கள், இத்தவளையின் விஷத்தை பிரித்தெடுத்து, அதை ஈட்டி, அம்பு முனைகளில் தடவி வேட்டைக்கு பயன்படுத்தி யுள்ளனர்.
எவ்வளவு பெரிய விலங்காக இருந்தாலும், தவளை விஷம் தடவப்பட்ட அம்பு தாக்கியவுடன் மயங்கி விழுந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் விஷத்தன்மை கொண்ட தவளைகள் 100 வகை உள்ளன. இவற்றில், "கோல்டன் டார்ட் பிராக்' வகை தவளைகள் தான் பெரியவை. இந்தத் தவளைகளின் உடலில் இருக்கும் batrachotoxin எனப்படும் கொடிய விஷம் உடனடியாக நம் இதயத் துடிப்பை நிறுத்திவிடும். இந்தத் தவளையின் உடம்பில் இருக்கும் 1 mg (மில்லிகிராம்) விஷம் 10-15 மனிதர்களைக் கொள்ளும் திறன் வாய்ந்தது.
கொலம்பியா காடுகளில் உள்ள குறிப்பிட்ட சில தாவரங்கள், ஈக்கள், வண்டுகள், எறும்புகள், கரையான்கள் ஆகியவையே இவற்றின் முக்கிய உணவு. இத்தவளைகள் வேகமாக அழிந்து வருகின்றன. இதற்கு, மனிதர்களால் தொடர்ந்து மழைக்காடுகள் அழிக்கப்படுவதே காரணம். இன்றைய நிலையில் இந்த தவளை இனம், வேகமாக அழிந்து வரும் விலங்குகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தாவும் தங்கத் தவளைகள் பெரும்பாலும் மஞ்சள் வண்ணத்தில் தோற்றமளிக் கின்றன. இருப்பினும், ஆரஞ்சு, இளம்பச்சை உள்ளிட்ட வண்ணங்களிலும் இவை காணப்படுகின்றன. இந்த தவளைகள் வாழும் இடத்திற்கேற்ப அவற்றின் நிறங்கள் மாறுபடுவதாகவும், இதன் மூலம் இத்தவளைகள் தங்களை எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்கின்றன என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
"தாவும் தங்க தவளை' களின் விஷத் தன்மை குறித்து ஒரு சோதனை மேற் கொள்ளப் பட்டது. அதில், அத்தவளைகளின் இயற்கை யான வசிப்பிடங்களில் இருந்து மாற்றி, வழக்கமான உணவிற்கு பதில் வேறு உணவுகளை கொடுத்தனர். குறிப்பிட்ட சில நாட்களுக்கு பின் சோதனை செய்ததில், அந்த தவளைகள் விஷத்தன்மை மிகவும் குறைந்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. எனவே, அடர்ந்த காடுகளில் காணப்படும் விஷத்தன்மை கொண்ட தாவரங்கள் மற்றும் சிறு பூச்சிகளை உட்கொள்வதால் மட்டுமே இத்தவளைகள் கொடிய விஷத்தை பெறுகின்றன என்று நம்பப்படுகிறது. தற்போது, இத்தவளைகளின் விஷத்தை கொண்டு சக்தி மிக்க வலி நிவாரண மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.
நன்றி: www.fact-o-tron.com இணயதளம்
Comments