Skip to main content

Posts

Showing posts from April, 2010

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

"Forex ஆன்லைன் டிரேடிங்" மோசடி-

கோவையில் 'ஆன்லைன் டிரேடிங்' நிறுவனங்கள், முதலீட்டாளர்களிடம் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சுருட்டியதில், தனியார் வங்கிகளும் சம்மந்தப்பட்டிருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மோசடி நிறுவனத்துடன் தொடர்புடைய வங்கி அதிகாரி, தலைமறைவானார். தனியார் வங்கிகளின் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ள குற்றப்பிரிவு போலீசார், முதலீட்டாளர்களை உஷார்படுத்தியுள்ளனர். சர்வதேச மதிப்பு குறையும் போது வெளிநாட்டு கரன்சிகளை வாங்கி, மதிப்பு உயரும் போது விற்று, முதலீட்டாளர்களுக்கு லாபம் ஈட்டித்தருவதாக கூறும் "Forex ஆன்லைன் டிரேடிங்" நிறுவனங்கள், தமிழகத்தில் புற்றீசல் போல தோன்றியுள்ளன. இதுவும் ஒரு வகையான சூதாட்டம் என்பதை அறியாமலும், வர்த்தக எதிர்விளைவுகளை உணராமலும், பலரும் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்து, பணத்தை இழந்து வருகின்றனர். இவ்வாறு, கடந்த ஓராண்டில் கோவை நகரில் துவக்கப்பட்ட 'யூரோ பே' 'கேவல்' 'கிரீன் லைப்' 'கே.எஸ்.,மென்கன்டைல்' உள்ளிட்ட ஏழு நிறுவனங்கள் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான பொதுமக்களின் முதலீடுகளை சுருட்டிய பின் மூடுவிழா கண்டுவிட்டன. ...

கருப்பு பணம் இந்தியா வந்தால் 30 ஆண்டுகளுக்கு வரியில்லாத பட்ஜெட்!

"இந்தியர்கள், சுவிஸ் வங்கியில் மறைத்து வைத்துள்ள பணத்தை இந்தியா கொண்டு வர வேண்டும். அப்படி கொண்டு வரப்பட்டால், அடுத்த 30 ஆண்டுகளுக்கு வரியில்லா பட்ஜெட் போடலாம்," என ராஜ்யசபா உறுப்பினர் ராம் ஜெத்மலானி நேற்று தெரிவித்தார். நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: "இந்தியா பணக்கார நாடு. ஆனால், அதன் ஊழல் தலைவர்களால், இந்தியா ஏழையாக மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்தவர்கள், நாட்டின் ஏழை மக்களிடம் இருந்து எடுத்து, சுவிஸ் வங்கியில், 67.50 லட்சம் கோடி ரூபாய் வரை பதுக்கி வைத்துள்ளனர். அரசு இந்த பணத்தை மீண்டும் இந்தியா கொண்டு வந்தால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2.5 லட்சம் ரூபாய் கிடைப்பதோடு, அடுத்த 30 ஆண்டுகளுக்கு வரியில்லாத பட்ஜெட் போடலாம். புனேயைச் சேர்ந்த தொழிலதிபர் ஹசன் அலி, சுவிஸ் வங்கிக் கணக்கில், 36 ஆயிரத்து 900 கோடி ரூபாய் பதுக்கி வைத்திருந்தார். அவரிடம் இருந்து அரசு, 37 கோடி ரூபாயை வரியாக வசூலித்தது. 2002ம் ஆண்டு, அரசு வரி ஏய்ப்பு செய்து பணத்தை வெளிநாடுகளில் சேமிக்கும் செயலைத் தடுக்க சட்டத்தை உருவாக்கியது. ஆனால், அதில் உள்ள விதிமுறைகள் எதையும், 2005ம் ஆண்டு வரை அரசு செயல்படு...

பீர் பானம்-சுவையான செய்திகள்

தற்போது ஆண்கள் ஏகபோக உரிமை கொண்டாடி வரும் பீர் பானம் ஒரு காலத்தில் பெரும்பாலும் பெண்களால் தயாரிக்கப்பட்டது என்றால் நம்ப முடியுமா? நம்பித்தான் ஆகவேண்டும், ஏனென்றால் ஜேன் பேடன் (Jane Peyton) என்ற மது சுவைப்பாளரின் (Wine, Beer Taster) School of booze என்ற வலைப்பதிவில் நிறைய சுவாரசியமான விஷயங்கள் உள்ளன: பீர் பானம் பல ஆயிரம் ஆண்டுகளாக பருகப்பட்டு வருகிறது என்பதற்கு சரித்திர பூர்வமான ஆதாரங்கள் ஏற்கனவே உள்ளன. புதிதாக, ஜேன் மேலும் சில உண்மைகளை குறிப்பிடுகிறார். கிட்டத்தட்ட 9000 ஆண்டுகளுக்கு (7000 BC) முன்னரே பெண்கள் அரிசி, பழம், தேன் போன்ற பொருட்கள் மூலம் தயாரித்த பீர் போன்ற ஒரு பானத்தை சாப்பாட்டு வேளையில் பரிமாறியதாக குறிப்பிடுகிறார். அப்போதெல்லாம் பீர் சாப்பாட்டின் ஒரு அங்கமாக விளங்கியதாக சொல்லும் ஜேன், மெதுவாக ஆண்களின் விருப்பதால் உரு மாறி பொழுதுபோக்கு பானமாக (social drink ) மாறிவிட்டதாக கூறுகிறார். விஞ்ஞான ரீதியில் சொன்னால், பார்லி, அரிசி போன்ற தானியங்களில் (cereal) இருக்கும் என்சைம்கள் (enzymes) அதில் உள்ள ஸ்டார்ச்சை (starch) சக்கரையாக மாற்றும்போது, காற்றில் உள்ள ஈஸ்டுகள் (wild yea...

அரபிக்கடலுக்கு காத்திருக்கும் அபாயம்

இந்தியாவின் மேற்கு கடற்பகுதியில் சதுப்புநிலக்காடுகள் குறைந்து வருவதால் அப்பகுதி அபாயத்தில் சிக்கும் நிலை உள்ளது. நிலப்பரப்புக்கும், கடலுக்கும் இடையேயுள்ள வனப்பகுதியே சதுப்புநிலக்காடுகள் ஆகும். இவை உலக அளவில் வளம் மிகுந்த இயற்கை நிலைகளில் ஒன்றாகும். கடலோர வளத்தை அதிகரிக்க செய்வதோடு, வனப்பொருட்களை கொடுப்பதிலும், கடலோரத்தை பாதுகாக்கவும் உதவுகின்றன. குறிப்பாக கடலோர மீன்வள ஆதாரத்துக்கு சதுப்புநிலக்காடுகள் அவசியமாகிறது. இதன் உயரிய உப்புத்தன்மை, வெப்பநிலை, கடல் ஏற்றம், இறக்கம், பலத்த காற்று , சகதியான மற்றும் பிராண வாயுவற்ற மணலமைப்பு, வேறு வனப்பகுதியில் இல்லாத சிறப்பு அம்சமாகும். இந்தியாவில் சதுப்பு நிலக்காடுகள் 4461 ச.கி.மீ., வரை பரவியுள்ளது. இவற்றில் பெரும்பாலும் கிழக்கு கடற்கரை பகுதியில் தான் அதிகமாக உள்ளது. கிழக்கு கடற்பகுதி (வங்காள விரிகுடா) 59சதவீதமும், மேற்கு கடற்கரை(அரபிக்கடல்) 23சதவீதமும் உள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 18 சதவீதமும் சதுப்பு நிலக்காடுகள் பரவியுள்ளன. மண் அரிப்பை தடுக்கவும், காற்றின் வேகத்தை குறைக்கவும் உதவும் சதுப்புநிலக்காடுகள் குறைவு காரணமாகவே, அந்தமான் தீவு அட...