Skip to main content

பீர் பானம்-சுவையான செய்திகள்




தற்போது ஆண்கள் ஏகபோக உரிமை கொண்டாடி வரும் பீர் பானம் ஒரு காலத்தில் பெரும்பாலும் பெண்களால் தயாரிக்கப்பட்டது என்றால் நம்ப முடியுமா? நம்பித்தான் ஆகவேண்டும், ஏனென்றால் ஜேன் பேடன் (Jane Peyton) என்ற மது சுவைப்பாளரின் (Wine, Beer Taster) School of booze என்ற வலைப்பதிவில் நிறைய சுவாரசியமான விஷயங்கள் உள்ளன:

பீர் பானம் பல ஆயிரம் ஆண்டுகளாக பருகப்பட்டு வருகிறது என்பதற்கு சரித்திர பூர்வமான ஆதாரங்கள் ஏற்கனவே உள்ளன. புதிதாக, ஜேன் மேலும் சில உண்மைகளை குறிப்பிடுகிறார்.

கிட்டத்தட்ட 9000 ஆண்டுகளுக்கு (7000 BC) முன்னரே பெண்கள் அரிசி, பழம், தேன் போன்ற பொருட்கள் மூலம் தயாரித்த பீர் போன்ற ஒரு பானத்தை சாப்பாட்டு வேளையில் பரிமாறியதாக குறிப்பிடுகிறார். அப்போதெல்லாம் பீர் சாப்பாட்டின் ஒரு அங்கமாக விளங்கியதாக சொல்லும் ஜேன், மெதுவாக ஆண்களின் விருப்பதால் உரு மாறி பொழுதுபோக்கு பானமாக (social drink ) மாறிவிட்டதாக கூறுகிறார்.

விஞ்ஞான ரீதியில் சொன்னால், பார்லி, அரிசி போன்ற தானியங்களில் (cereal) இருக்கும் என்சைம்கள் (enzymes) அதில் உள்ள ஸ்டார்ச்சை (starch) சக்கரையாக மாற்றும்போது, காற்றில் உள்ள ஈஸ்டுகள் (wild yeast in air) மெதுவாக அதை ஒரு ஆல்கஹால் பானமாக மாற்றி விடுகின்றன. இதை மிகவும் தற்செயலாக கண்டுபிடித்த மனிதன் (ஆணோ/பெண்ணோ) அதன் சுவையில் மயங்கிப் போனதின் பின்னணியே பீர் உருவாகக் காரணமானது.


நம்மூரில் முனியாண்டி, கருப்பசாமி போன்ற காவல் தெய்வங்களுக்கு சாராயம் படைத்து, கிடா வெட்டி பூசை செய்வது போல பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே தெய்வங்களுக்கு பீர் படைத்து மரியாதை செய்த பழக்கம் அப்போதைய சுமர் (தற்போது இராக்) நாட்டில் இருந்ததாக சரித்திரம் சொல்லுகிறது. குறிப்பாக, சுமேரியன் சமூகத்தில் நின்கசி (Ninkasi) என்ற பெண் தெய்வத்திற்கு இது போல பூசைகள் நடந்ததாக குறிப்புகள் உள்ளன.

பீரில் உள்ள பல்வேறு நுண்ணுயிர்கள் (microbes) பல தீங்கு செய்யும் பாக்டீரியாகளை அழிக்கின்றன, அதோடு அதில் ஏராளமான சத்துக்களும் (nutrition) இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆனால், எந்தவிதமான விஞ்ஞான பின்புலமும் (background) இல்லாமல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இதையெல்லாம் தெரிந்து கொண்டு நம் முன்னோர்கள் பீர் பானத்தை பருகி வந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமேரியாவைத் தவிர முன்காலத்தில் பாபிலோன், எகிப்து ஆகிய நாடுகளில் பருகிவந்த பானங்கள் கிட்டத்தட்ட பீர் பானத்தை ஒட்டியே இருந்தாக சான்றுகள் உள்ளன; குறிப்பாக, எகிப்தின் தேசிய பானம் (national drink) கிட்டத்தட்ட பீர் போலவே இருந்தாகக் கருதப்படுகிறது.

கி.பி.எட்டு மற்றும் 10ம் நூற் றாண்டுகளுக்கு இடையில், ஐரோப்பாவில் ஊடுருவிய கடற் கொள்ளைக்காரர்களால், பெண்கள் தயாரிப்பில் உருவான 'ஏல்' என்ற 'பீர்' அறிமுகப்படுத்தப்பட்டது.பின்லாந்தில் முற்காலத்தில் மூன்று பெண்கள் சேர்ந்து, தேன் மற்றும் சில பொருட்கள் சேர்த்து 'பீர்' தயாரிப்பர். பிரிட்டனில், 'பீர்', ஒவ்வொரு குடும்பத்திலும் தயாரிக்கப்பட்டது.அதைத் தயாரித்த பெண் கள், மது வடிப்பவர்கள் அல்லது 'ஏல்' மனைவிகள் (Ale Wives) என்று அழைக்கப் பட்டனர். மேலும் 'பீர்' தயாரிப்பதன் மூலம் குடும்பத்தில் வருமானம் ஈட்டப்பட்டது. பிற்காலத்தில் அது உணவுக் கட்டுப்பாடு பட்டியலில் சேர்ந்து, சுவைக்காக பணக்காரர்கள் மட்டும் அருந்தும் பானமாகக் குறுகிப்போனது.முதலாம் ராணி எலிசபெத், பீரை தினமும் தன் காலை உணவாக அருந்தியவர். அது மட்டுமல்லாமல், நாளின் பிற நேரங்களிலும் மிக விரும்பி அருந்துவார்.கி.பி. 18ம் நூற்றாண்டில், ஐரோப்பாவில் தொழிற் புரட்சி ஏற்பட்ட பின், 'பீர்' தயாரிப்பில் புதிய முறைகள் கண்டறியப்பட்டன. அதன் தயாரிப்பில் பெண்கள் பங்கேற்பதும், படிப்படியாகக் குறைய ஆரம் பித்தது.பெண்களால் தயாரிக்கப்பட்டதுதான் 'பீர்' என்பது ஆண்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும் தான். ஆனால், பீரைத் தயாரித்ததற்காகப் பெண்களுக்கு அவர்கள் நன்றி சொல்வர்

இந்தப் பழக்கம், பின் மெதுவாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தை அடைந்த பின் அதன் அடையாளமே மெதுவாக மாறி, இன்றைய பீர் பானத்தின் முன்னோடிகள் உருவாகின என்று ஜேன் சொல்லுகிறார். மேலும் விவரங்களுக்கு

http://www.school-of-booze.com/booze-news/booze-blog/75-putting-the-female-into-ale

என்ற வலைப் பதிவை சொடுக்குங்கள்.

சரித்திரம் வாழ்க, பீர் வாழ்க, நாம் எல்லோரும் வாழ்க.

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Comments

அருமை :-)

பகிர்வுக்கு நன்றி

வாழ்த்துக்கள்
Anonymous said…
Inia puthandu Vazhthukal....

Good info
As long as the beer is good it doesn't matter whether it is prepared by Male or Female. GC
:-) போதையில எழுதுனீங்களா? இல்லை சாதாரனமாவா?
பகிர்வுக்கு நன்றி...

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்