Skip to main content

Posts

Showing posts from July, 2013
பொன்னியின் செல்வன்: கமல்ஹாசன் இயக்க ரசிகர்கள் விருப்பம் பொன்னியின் செல்வன் சரித்திர நாவல் மறைந்த மாபெரும் எழுத்தாளர் கல்கி அவர்கள் எழுதிய அழியாப் புகழ் பெற்ற காவியம். கல்கி அவர்கள் சிவகாமியின் சபதம், அலை ஓசை போன்ற புகழ்பெற்ற சரித்திர நாவல்களை எழுதியிருந்தாலும், அவருடைய பொன்னியின் செல்வன் புதினம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளது. இந்த சரித்திர நாவலை திரைப் படமாக்க மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் முதல் நேற்றைய செல்வராகவன் வரை நிறைய நடிகர்கள்/இயக்குனர்கள் முயற்சி செய்து முடியாமல் போய் விட்டது.  புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்தபோது, இந்தப் படத்தை இயக்குனர்  பாரதிராஜா கமல்ஹாசனை வைத்து இயக்க வேண்டுமென விருப்பம் தெரிவித்தார். அது நடக்கவில்லை. சில வருடங்களுக்கு முன்னர் இயக்குனர் மணிரத்தினம் விஜய், விக்ரம், மகேஷ் பாபு போன்ற முன்னணி நடிகர்களை வைத்து இயக்கப்போவதாக செய்தி வந்தது. கடைசியில் அதுவும் புஸ்வாணமாக ஆனது. இந்நிலையில், சமீபத்தில் ரசிகர்களுக்கான கருத்து கணிப்பு ஒன்றை சினிமா லீட் என்ற இணைய தளம் நடத்தியது. இதில் எந்த இயக்குனர் பொன்னியின...
காவியக் கவிஞர் வாலி (1931-2013) -உன் வார்த்தைகளுக்கு என்றும் மரணம் இல்லை  நேற்று இரவு செய்தி கிடைத்தபோது மிகவும் வருத்தமாக இருந்தது. இப்போதெல்லாம் எந்த பாட்டை எந்த கவிஞர் எழுதுகிறார் என்று தெரிவதில்லை. காரணம், பாடல்களில் ரசிக்கும்படியான வார்த்தைகள் எதுவும் இருப்பதில்லை. ஆனால், வாலி, கண்ணதாசன் பாடல்கள் அவ்வாறு இருந்ததில்லை. வாலியின் பாடல்களைப் பற்றியும் அவருடைய வாழ்க்கையைப் பற்றியும் தினமலர் ஒரு நல்ல கட்டுரை வெளியிட்டுள்ளதை கீழே கொடுத்துள்ளேன். அதற்கு முன், வாலியைப் பற்றி நான் படித்த ஒரு மிகச் சுவையான சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்: உலகம் சுற்றும் வாலிபன் எம்.ஜி.ஆரின் ஒரு மிகப் பெரிய வெற்றிப் படம். இந்த படம் வெளிவர அப்போது ஏகப்பட்ட சிக்கல்கள். இந்த படத்தில் நிறைய பாடல்களை வாலி எழுதியுள்ளார். இதில் ஒரு குறிப்பிட பாடலின் (எந்தப் பாடல் என்பது தெரியவில்லை) வரிகள் எம்.ஜி.ஆருக்கு திருப்தி அளிக்கவில்லை என்று வாலியிடம் சொல்லி வரிகளை மாற்றுமாறு எம்.ஜி.ஆர். சார்பில் செய்தி சென்றது. வாலி அந்த வரிகளை மாற்ற முடியாது என்று மறுத்துவிட, எம்.ஜி.ஆர் கோபத்...
ஓம் பர்வத மலை (Om Parbat) இமயமலையில் அமைந்துள்ள ஓம் பர்வத மலை (Om Parbat) என்பது ஆதி கைலாஷ் என்று பலரால் அறியப்படுகிறது. இதற்கு சிறிய கைலாஷ், ஜாங்லிங்காங் பீக் ( Jonglingkong Peak) , பாபா கைலாஷ் என்றும் பல பெயர்கள் உண்டு. இமயமலையின் ஒரு பகுதியில் கருத்த மலையின் பின்னணியில், படர்ந்திருக்கும் வெண்மை நிற பனியானது, இந்துக்கள் வழிபடும் ஓம்காரத்தின் (ஹிந்தி ஓம் [ ॐ}  எழுத்து) வடிவில் அமைந்திருப்பதே இந்த கைலாச மலையின் சிறப்பம்சமாகும். இது கூர்ந்து கவனித்தால் தெரிவதாகவோ, அவ்வாறு தோன்றுவதாகவோ இல்லாமல், மிகத் தெளிவாக ஓம் காரத்தைப் பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. மேலும், இங்கு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதத்தில்       ஓம்காரத்தில் அந்த புள்ளியும் தென்படுவது விசேஷமாகும். இந்து பெரியவர்களின் கூற்றுப்படி, இமயமலைப் பகுதியில் இதுபோன்ற ஓம்காரம் எட்டு இடங்களில் இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால், அதில் இதுவரை உலகம் பார்த்து அறிந்த ஒரே ஓம்காரம் இந்த ஓம் பர்வத மலையில் மட்டும்தான். ஓம் பர்வத மலைக்கு அருகே பர்வத ஏரி மற்றும் ஜாங்லிங்காங் ஏரி அமைந்துள்ளன. ஜாங்லிங் ஏரிய...
ப்ரியா பற்றி சுஜாதா கூறுகிறார்….. 1975 –ல்  நான் லண்டன், ஜெர்மனி இரண்டு தேசங்களுக்குப் போய் இரண்டு மாதம் கழித்துத் திரும்பி வந்ததும் லண்டனில் நடப்பது போல் ஒரு தொடர்கதை எழுதட்டுமா ? என்று எஸ்.ஏ.பியைக் கேட்டபோது அவர் உடனே சம்மதித்தார்.  அந்தக் கதை ‘ ப்ரியா ’. ஒரு சினிமா நடிகை படப்பிடிப்புக்காக லண்டன் போகிறாள்.  அவளுடன் அவள் காதலனும் போகிறான் என்று தெரிந்து கொண்ட, அவளது கண்டிப்பான கார்டியன், லாயர்  கணேஷையும் அவளைக் கண்காணிக்க உடன் அனுப்புகிறார். ‘ ‘குமுதம் ’ வார இதழில் வெளியான ஒரு பரபரப்பான தொடர். சுவாரஸ்யமான இந்தக் கதையின் பாதியில் கதாநாயகி இறந்துவிடுகிறாள். சற்று அவசரமாக கொன்றுவிட்டேனோ என்று தோன்றியது.   குமுதம் ஆசிரியர் திரு.எஸ்.ஏ. பி. போன் செய்து அவளுக்கு எப்படியாவது மறுஜன்மம் கொடுத்துவிடுங்கள் என்றும், குமுதம் ஆசிரியர் குழுவுடன் ஆலோசித்து அதற்கு ஒரு வழியும் சொன்னார். ப்ரியா புத்தகமாக வந்தபோது முதல் பதிப்பில்,  ‘ இந்தக் கதையை ஒரு முக்கியமான கட்டத்தில் திசை திருப்பிய ஆசிரியர் எஸ்.ஏ. பி.  அவர்களுக்கு ’ என்று சமர்ப்பணம் செ...