பொன்னியின் செல்வன்: கமல்ஹாசன் இயக்க ரசிகர்கள் விருப்பம்
பொன்னியின் செல்வன் சரித்திர நாவல் மறைந்த மாபெரும் எழுத்தாளர் கல்கி அவர்கள் எழுதிய அழியாப் புகழ் பெற்ற காவியம். கல்கி அவர்கள் சிவகாமியின் சபதம், அலை ஓசை போன்ற புகழ்பெற்ற சரித்திர நாவல்களை எழுதியிருந்தாலும், அவருடைய பொன்னியின் செல்வன் புதினம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளது.
இந்த சரித்திர நாவலை திரைப் படமாக்க மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் முதல் நேற்றைய செல்வராகவன் வரை நிறைய நடிகர்கள்/இயக்குனர்கள் முயற்சி செய்து முடியாமல் போய் விட்டது.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்தபோது, இந்தப் படத்தை இயக்குனர் பாரதிராஜா கமல்ஹாசனை வைத்து இயக்க வேண்டுமென விருப்பம் தெரிவித்தார். அது நடக்கவில்லை.
சில வருடங்களுக்கு முன்னர் இயக்குனர் மணிரத்தினம் விஜய், விக்ரம், மகேஷ் பாபு போன்ற முன்னணி நடிகர்களை வைத்து இயக்கப்போவதாக செய்தி வந்தது. கடைசியில் அதுவும் புஸ்வாணமாக ஆனது.
இந்நிலையில், சமீபத்தில் ரசிகர்களுக்கான கருத்து கணிப்பு ஒன்றை சினிமா லீட் என்ற இணைய தளம் நடத்தியது. இதில் எந்த இயக்குனர் பொன்னியின் செல்வனை இயக்கினால் நன்றாக இருக்கும் என்று நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பெரும்பாலான ரசிகர்கள் கமல்ஹாசன் இயக்கினால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
அந்த கருத்துக்கணிப்பின்படி கமலுக்கு முதல் இடமும், இயக்குனர் ஷங்கருக்கு இரண்டாவது இடமும் கிடைத்துள்ளன.
கருத்துக்கணிப்பு விவரம்:
- கமல்ஹாசன் - 42%
- ஷங்கர் - 24.4%
- மணி ரத்னம் - 19%
- செல்வராகவன் - 8%
- கே.எஸ்.ரவிக்குமார் -2%
- ஏ.ஆர். முருகதாஸ் - 3%
- சுந்தர சோழன் - அர்விந்த் ஸ்வாமி - கதை முழுவதும் வரும் இந்த கதாபாத்திரம் (சுந்தர சோழன்) மிக அழகானவர். கரிகாலன், அருண்மொழி வர்மன் மற்றும் குந்தவையின் தந்தை.
- ஆழ்வார்கடியான் நம்பி - சந்தானம் - இவர் நகைச்சுவை நிரம்பிய ஒற்றர் பாத்திரத்தில் வருபவர்.
- சின்ன பழுவேட்டரயர் - ராஜ்கிரண் - ஒரு கம்பீரமான கதாபாத்திரம். கதைப்படி பெரிய பழுவேட்டரயரின் தம்பி
- பெரிய பழுவேட்டரயர் - சத்யராஜ் - மற்றுமொரு கம்பீரமான, நக்கலும், நையாண்டியும் கலந்து பேசும் ஒரு பாத்திரம்.
- பூங்குழலி - ப்ரியாமணி -கிராமத்து மீனவ பெண். மிகவும், துடுக்கான, தைரியசாலியான ஒரு கதாபாத்திரம்.
- வானதி - சமந்தா- அருண்மொழி வர்மனின் ஜோடி. அழகான ஒரு கதாபாத்திரம். குந்தவையின் நெருங்கிய தோழியும் கூட.
- குந்தவை தேவி - காஜல் அகர்வால் -அழகும், துடுக்குத்தனமும், தைரியமும் ஒருங்கே பெற்று, வந்தியத் தேவனின் ஜோடியான ஒரு சிறப்பான கதாபாத்திரம்.
- நந்தினி - அனுஷ்கா -கதைப்படி பெரிய பழுவேட்டரயரின் அழகு மனைவி. கல்கியின் வர்ணனையில் ஒரு மிகப் பெரும் அழகியான இவள் மேல் வந்தியத் தேவன் ஒருவனைத் தவிர பெரும்பாலான கதாபாத்திரங்கள் மோகம் கொள்கின்றனர். வாள் வீச்சிலும், அகம்பாவத்திலும் மிகத் தேர்ந்த ஒரு கதாபாத்திரம் என்பதால் அனுஷ்கா கச்சிதமாகவே பொருந்துவார்.
- கரிகாற் சோழன் - சீயான் விக்ரம்-முறுக்கேறிய உடல், தீர்க்கமான பார்வை, என எல்லாவற்றுக்குமே விக்ரம் மிகப் பொருத்தம்.
- அருண்மொழி வர்மன் - தல அஜித் - ஆணழகன். பெண்களைச் சுண்டி இழுக்கும் வல்லவன். நண்பன் வந்தியத் தேவன் மேல் உயிரையே வைத்திருப்பவன்.
- வல்லவராயன் வந்தியத் தேவன் - தளபதி விஜய்-கதைப்படி அருண்மொழி வர்மன் கதாநாயகன் என்றாலும், கதையின் நாயகன் வந்தியத் தேவன்தான். இன்றளவும் வாசர்கள் மனதில் நீங்காத ஒரு கதாபாத்திரம். வீரமும், விவேகமும், நகைச்சுவை உணர்வும் கலந்த ஒரு மிகச் சிறப்பான பாத்திரம்.
ஹ்ம்ம்...இதெல்லாம் சாத்தியமா?? நடந்தால், மிக நன்றாகவே இருக்கும்.
Comments