எண்பதுகளில் [ 1980s ] திரைக்கதிர் என்றொரு பத்திரிக்கை வந்து கொண்டிருந்தது. அப்பத்திரிக்கைக்காக பெங்களூரிலிருந்து வந்த சுஜாதாவும்... ‘வறுமையின் நிறம் சிவப்பு ’ பட சூட்டிங் முடித்து வந்த கமலும் சந்தித்து உரையாடி இருக்கிறார்கள். அன்று அவர்கள் நடத்திய விவாதம் இன்றும் பொருந்தி வருகிறது. அதிலிருந்து சில தேன் துளிகள்... சுஜாதா : நான் 'இஸட்'ன்னு ஒரு பிரெஞ்ச் பிலிம் சமீபத்தில் பார்த்தேன். [ Z \ 1969 \ French \ Directed by : Costa - Gavras ] அரசியலை மையமா வைச்சிகிட்டு ரொம்ப பிரமாதமா எடுத்திருக்காங்க. தமிழ்ல ஏன் அரசியலை சம்பந்தப்படுத்தி படம் பண்ண மாட்டேங்கறீங்க ? கமல் : உங்களுடைய ‘24 ரூபாய் தீவை’ ‘யாரோ பார்க்கிறார்கள்’ என்கிற பெயரில் படமா எடுக்க நினைச்சோம். முடியல. பண்ண முடியாத சூழ்நிலை இருக்கு. யெஸ்....இட் வாஸ் டினைட் [ Yes..It was denied ]. தீடிர்னு அந்தப்படத்தை தடை பண்ணிட்டாங்கன்னா... டிஸ்டிரிபியூட்டர் மாட்டிக்குவாங்க. வட்டிக்கு வாங்கி படமெடுக்குற புரொடியூசர் காலி. அரசியலை மையமா வைச்சு இங்கே படமெடுக்குறது கஷ்டம். சுஜாதா : ரொம்ப பேர்...
காலை Japan இல் காஃபி, மாலை New York இல் காபரே, இரவில் Thailand இல் ஜாலி!, இனிமேல் நமக்கென்ன வேலி? என்றும், என்றும் இன்ப மயம்!