ஆச்சரியமான ஆரம்ப காட்சியுடன் ஆரம்பம் ஆரம்பிக்கிறது. கம்பீரமான, ஹாண்ட்சம் லுக்குடன் அஜித். தலை நரைத்தாலும், "தல" நரைக்கவில்லை. படம் நெடுக அஜித் கொடிகட்டிப் பறக்கிறார். ஆர்யாவுக்கு பெரிதாக ஸ்கோப் இல்லை, எனவே அவருடைய சுமார் performance பற்றி குறை சொல்லக்கூடாது. நயன்தாரா செம க்யூட். அதிரடியாக சண்டையெல்லாம் போட்டாலும், இவருக்கும், அஜித்துக்கும் நடுவில் கொஞ்சம் கூட ரொமான்ஸ் இல்லை என்பது கொஞ்சம் நெருடல்தான்.
டாப்சி கடுப்படிக்கிறார். முன்னெல்லாம் இந்த மாதிரி கொஞ்சம் "லூஸான " ரோலுக்கு லைலாவை கூப்பிடுவார்கள், இப்போது டாப்சி. வில்லன் என்றாலே வடநாட்டு இறக்குமதிதான் என்று ஆகிவிட்டது.எனவே, அந்த வில்லன்கள் தமிழைக் கொலை செய்யும்போது பாவமாகவே இருக்கிறது. மும்பை என்று காட்டிவிட்டு ஏண்டா தமிழிலேயே உரையாடல் என்று யாரும் கேட்ககூடாது என்று டைட்டில் கார்டிலேயே மன்னிப்பு கேட்டுவிடுகிறார்கள்.
அந்த மத்திய அமைச்சரின் துபாய் மகள் செம டிம்பர் கட்டை. ஒரே ஒரு டான்சுக்கு தள, தளவென வந்து குனித்து, நிமிர்ந்து பாத்துக்கோ என்று ஆடிவிட்டு போய்விடுகிறார்.
கதை கொஞ்சம் வித்தியாசமில்லை என்றாலும் சொல்லும் விதம் வித்தியாசமாக அமைய உழைத்துள்ள விஷ்ணுவர்த்தன், கோர்வையாக காட்சிகளை அமைக்க மெனக்கெடவில்லை என்பது நன்றாக தெரிகிறது. பாடல் ஒன்று கூட மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை நன்றாகவே பொருந்துகிறது.
Nowhere to Hide , Remo : Unarmed & Dangerous , Swordfish என பல ஹாலிவுட் படங்களை நினைவுபடுத்தினாலும், எந்தப் படத்திலிருந்தும் அப்படியே சுடாமல் கொஞ்சம் மெனக்கட்டிருப்பதால் இயக்குனரை பாராட்டலாம்.
ஒளிப்பதிவு அட்டகாசம். குறிப்பாக துபாய் காட்சிகள், அந்த படகு சேஸ்.
அஜித் ரசிகர்களுக்கு "தல" தீபாவளி. மற்றவர்களுக்கு ஒரு நல்ல என்டர்டெய்னர்.
Comments