ஆங்கிலம் ஒரு வினோதமான மொழி. ஒரே மாதிரியான வார்த்தைகளே உபயோகிக்கும் விதத்தில் பொருள் மாறும். நமது தமிழ் நடிக, நடிகையர் பெரும்பாலான சமயங்களில் பேசும் போது ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள். அவர்களில் பெரும்பாலானோர் 10 வது கூட படித்திருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் பிடிவாதமாக ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள். அதில் எவ்வளவு தவறு இருந்தாலும் பரவாயில்லை. ஏனென்றால் தான் பேசுவது தவறு என்று தெரியாமலேயே அவர்கள் பேசுவதுதான் காரணம். சில நாட்களுக்கு முன் நடிகர் விவேக்கை ஒரு FM ரேடியோ சேனல் பேட்டி கண்டது. அதில் விவேக் வழக்கம் போல பெரிய பந்தாவுடன் பேசினார். பேட்டி கண்டவர் விவேக்கிடம் அவருடைய சிவாஜி பட அனுபவத்தைக் கேட்டவுடன் மிக உற்சாகமாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தான் ரசித்து நடித்த காட்சிகளைக் கூறினார். அதோடு நில்லாமல் ரஜினி ரசிகர்களை இம்ப்ரெஸ் செய்யும் விதமாக இன்னொன்று கூறியதுதான் அந்த பேட்டியின் விசேஷம்; "சிவாஜி படத்துல ஒரு சீன்ல நானும் சூப்பர் ஸ்டாரும் நடந்து வருவோம், கேமரா என் பக்கத்துல இருக்கும், அப்போ, நான் என்னோட கூலிங் கிளாசை தலைக்கு மேல மாட்டியிருப்பேன், அதை அப்படியே சரிஞ்சு வந்து என...
காலை Japan இல் காஃபி, மாலை New York இல் காபரே, இரவில் Thailand இல் ஜாலி!, இனிமேல் நமக்கென்ன வேலி? என்றும், என்றும் இன்ப மயம்!