Skip to main content

Posts

Showing posts from December, 2008

Peaceful & Prosperous New Year 2009

Please click on "Play" to view my greetings. Make a Smilebox greeting

SuperSize Me

சமீபத்தில் நான் பார்த்த ஒரு நல்ல ஆங்கில படத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். என் நண்பர் (ஹிமாலயாஸ்) கிருஷ்ணமூர்த்தி போல என்னால் வரிசையாக இராக், அல்ஜீரியா, ஆப்கானிஸ்தான் நாட்டு இயக்குனர்களின் படங்களை பார்க்க முடியாவிட்டாலும் (அவை என்னதான் உண்மையோடு ஒற்றி எடுக்கப்பட்டாலும் எனக்கு கொஞ்சம் மசாலா தூவி இருந்தால்தான் பிடிக்கும்)நல்ல ஆங்கில படங்களை அடிக்கடி பார்ப்பது என்பது என் பள்ளி நாட்களில் துவங்கிய ஒரு பழக்கம். எனவே இப்போது சூப்பர் சைஸ் மீ: இது திரைப்படமல்ல. இது ஒரு விவரணப் படம் (documentary film). கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன் Fast Food Nation என்ற புத்தகத்தை நான் படிக்க நேர்ந்த போது, அதிலிருந்த நிஜம் என்னை அதிர்ச்சிக்குள்ளாகியது. Fast food என்ற துரித உணவு நம் உடலுக்கு என்னவெல்லாம் தீங்கு விளைவிக்கும் என்பதை மிகவும் graphic ஆக விளக்கிய அந்த bestseller இல் அதிர வைக்கும் உண்மைகள் ஏராளம். தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த 32 வயது மார்கன் ஸ்பெர்லாக்கிற்கு (Morgan Spurlock) திடீரென்று திரைப்படம் இயக்கும் எண்ணம் உதிக்கிறது. உடடினயாக அவர் மது அருந்துவதை நிறுத்துகிறார்....

சொந்தமாக கார் வைத்திருக்கும் இளித்தவாயர்களே, இதோ சாபம்!

(படத்தில் இருப்பது என் அருமை மனைவிதான். ஆனால் அந்த அட்டகாசமான Ferrari கார் சத்தியமாக என்னுடையதில்லை) நம்முடைய பொன்னான அரசாங்கம் இன்னுமொரு ஜனநாயக விரோத திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது. நீங்கள் சொந்தமாக கார் வைத்திருப்பவரா? அப்படியென்றால் இனி உங்கள் பாடு திண்டாட்டம்தான். நம் நாட்டில் பொதுமக்களுக்கு சரியான சாலை வசதிகள் இல்லை; நல்ல போக்குவரத்து வசதிகள் இல்லை, நேரத்திற்கு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று சேர எந்த கியாரண்டியும் இல்லை. ஆனால், நமது அரசுக்கு சுற்றுச் சூழல் மேல் திடீரென பெரும் அக்கறை வந்துவிட்டது. இந்தியாவில் நிறைய குடியிருப்புகளில் வண்டிகள் நிறுத்த சரியான பார்கிங் வசதிகள் இல்லை. பெருகிவிட்ட டாக்சிகளின் எண்ணிக்கை, அவற்றை சரியாக பார்க் செய்ய வசதிகள் இல்லாமல் அத்தனை சாலைகளையும் இவர்களே ஆக்கிரமித்து விட்டனர். இதை நம் அரசாங்கம் எப்படி சரி செய்யப் போகிறது? பொதுமக்கள் பப்ளிக் ட்ரான்ஸ்போர்டை குறைந்த அளவில் உபயோகிக்க பெருகி விட்ட ஆட்டோக்களும் ஒரு பெரிய காரணம் இல்லையா? இந்த ஆட்டோக்கள் செய்யும் அட்டகாசங்கள் எல்லோருக்கும் தெரியும். இவற்றை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போனதற்கு முதல் காரணம் ...

வினோத கடத்தல் நாடகம்

உலகில் பல இடங்களில் நடக்கும் அக்கிரமங்களில் இது புது வகை குற்றம்: மெக்சிகோ மற்றும் அமெரிக்காவின் சில நகரங்களில் கில்லாடித்தனமாக ஒரு கூட்டம் பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்கள் பொழுதுபோக்கும் இடங்களில் அவர்களை அணுகி விலையுயர்ந்த செல் போன், ஐ பாட் ஆகியவற்றை பரிசாகப் பெற வேண்டுமென்றால் ஒரு form இல் அவர்களுடைய பெயர், முகவரி, தொலைபேசி எண், படிக்கும் பள்ளி/கல்லூரியின் விவரம், பெற்றோர் பெயர், அவர்கள் வேலை விவரம், வேலை செய்யும் இடம், மாணவர்களின் பிரியமான நிறம், விளையாட்டு, பிடித்த நடிகர் என அத்தனை புள்ளி விவரங்களையும் பெற்று விடுகிறது. பிறகு இந்த கூட்டம் மிகத் திறமையாக திட்டம் தீட்டி அந்த மாணவர் கும்பலில் பணக்கார மாணவர்களாகத் தேர்வு செய்து, நேரம் பார்த்து அந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு போன் செய்து உங்களயுடைய வாரிசை நாங்கள் கடத்தி விட்டோம், அவர்களை மீட்க வேண்டுமென்றால் உடனடியாக உங்கள் வீட்டுக்கு வெளியே நிற்கும் கருப்பு வேனின் பின்னால் ஒரு பெட்டியில் நகையோ அல்லது பணமோ அல்லது இரண்டுமோ வைத்துவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட வேண்டும் என மிரட்டி அவர்களுடைய வாரிசுகளின் விவரங்களை வரிசையாக சொல்லும் போது பெ...