(படத்தில் இருப்பது என் அருமை மனைவிதான். ஆனால் அந்த அட்டகாசமான Ferrari கார் சத்தியமாக என்னுடையதில்லை)
நம்முடைய பொன்னான அரசாங்கம் இன்னுமொரு ஜனநாயக விரோத திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது. நீங்கள் சொந்தமாக கார் வைத்திருப்பவரா? அப்படியென்றால் இனி உங்கள் பாடு திண்டாட்டம்தான்.
நம் நாட்டில் பொதுமக்களுக்கு சரியான சாலை வசதிகள் இல்லை; நல்ல போக்குவரத்து வசதிகள் இல்லை, நேரத்திற்கு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று சேர எந்த கியாரண்டியும் இல்லை. ஆனால், நமது அரசுக்கு சுற்றுச் சூழல் மேல் திடீரென பெரும் அக்கறை வந்துவிட்டது.
இந்தியாவில் நிறைய குடியிருப்புகளில் வண்டிகள் நிறுத்த சரியான பார்கிங் வசதிகள் இல்லை. பெருகிவிட்ட டாக்சிகளின் எண்ணிக்கை, அவற்றை சரியாக பார்க் செய்ய வசதிகள் இல்லாமல் அத்தனை சாலைகளையும் இவர்களே ஆக்கிரமித்து விட்டனர். இதை நம் அரசாங்கம் எப்படி சரி செய்யப் போகிறது?
பொதுமக்கள் பப்ளிக் ட்ரான்ஸ்போர்டை குறைந்த அளவில் உபயோகிக்க பெருகி விட்ட ஆட்டோக்களும் ஒரு பெரிய காரணம் இல்லையா? இந்த ஆட்டோக்கள் செய்யும் அட்டகாசங்கள் எல்லோருக்கும் தெரியும். இவற்றை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போனதற்கு முதல் காரணம் பெரும்பான்மையான ஆட்டோக்களுக்கு காவல் துறையின் பெரிய அதிகாரிகளே பினாமி உரிமையாளர்கள் என்பதும் ஊரறிந்த உண்மை.
நம் நாட்டில் அதிகமான எண்ணிக்கையில் கார்கள் பெருகிவிட்டதாலும், பொதுமக்கள் பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டை உபயோக்கிப்பது பெருமளவில் குறைந்துவிட்டதாலும், அதிக எண்ணிக்கையில் தனியார் வண்டிகள் இருப்பதால் சுற்றுச் சூழல் மாசுபட்டுவிட்டதாலும், இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் உபயோகம் அதிகரித்துவிட்டதாலும் நம் அரசின் புத்திசாலிகள் (think tank) உட்கார்ந்து ஆலோசனை செய்து சில பொன்னான முடிவுகளை எடுத்துள்ளனர். அவை வருமாறு;
1. புதிதாக கார் வாங்குபவர்கள் பார்கிங் இடம் இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும்.
2. டீசல் கார்களை கட்டுப்படுத்த வேண்டும்
3. பொது இடங்களில் பார்கிங் செய்வதை தடை செய்ய வேண்டும் மற்றும் முக்கியமான சாலைகளில் பார்கிங் கட்டணத்தை பெருமளவு (?) அதிகப் படுத்த வேண்டும்
4. வண்டிகளின் மேல் "congestion charge" விதிக்க வேண்டும்
5. பஸ் மற்றும் ரயில் கட்டங்களைக் குறைக்க வேண்டும் (ஒரே ஒரு உருப்படியான யோசனை)
நம்முடைய சென்னையைப் பற்றி இப்போது பேசலாம்; ஒரு நாளுக்கு 12 இரண்டு சக்கர வாகனங்கள் பதிவு (registration) செய்யப்படுகின்றன. மாதத்திற்கு 36 கார்கள், 42 ஆட்டோக்கள், 11 லாரிகள் ஆகியவை பதிவு செய்யப் படுகின்றன (இவையெல்லாம் மைலாபூரைச் சேர்ந்த ஒரு RTO சொன்னது).
இதை அரசு எப்படி கட்டுப்படுத்த முடியும்? கண்டிப்பாக முடியும். சிங்கப்பூர் கிட்டத்தட்ட நம் சென்னை அளவுதான். அங்கு மக்கட் தொகையும் கிட்டத்தட்ட சென்னையைப் போலதான். அங்கு சாலை நெரிசல் இல்லையா? இருக்கிறது. கார்களின் எண்ணிக்கையும் அதிகம்தான். இத்தனைக்கும் அந்த ஊர் போல பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் வேறு எங்கும் பார்க்க முடியாது. ஆனால் பார்கிங் வசதிகள் ஏராளம். ஒவ்வொரு கட்டிடமும் திட்டமிடப்பட்டு திறமையாக தேவையான பார்கிங் வசதிகளுடன் கட்டப்படுகின்றன.
பார்கிங் நெரிசலைக் கட்டுபடுத்த சிங்கப்பூர் அரசும் பார்கிங் கட்டணத்தை அதிகமாகவே வைத்துள்ளது. கார்களின் எண்ணிக்கையை குறைக்க இறக்குமதி செய்யப்படும் கார்களின் மேல் விதிக்கப்படும் வரியும் மிக அதிகம்.
ஆனால் சாலைகள்? அதைப் போன்ற சாலைகள் எல்லாம் இங்கு கனவுதான். காரணம் நம் அருமையான அரசியல்வாதிகள் .
அடிப்படை வசதிகளை முன்னேற்றுவதை விட்டு விட்டு நம் அரசாங்கம் தனியார் வாகனங்களின் மேல் தேவையில்லாமல் கண்டிப்பு காட்டுவது முட்டாள்தனம். இதெல்லாம் தெரிந்தும் நம் அரசு மெத்தனமாக இருப்பதின் காரணம் சொந்தமாக கார் வைத்திருப்பதில் 90% பேர் எந்த தேர்தலிலும் ஓட்டு போடப் போவதில்லை. எனவே அதைப் பற்றி புலம்பதான் முடியும்.
Comments