மதுரை நகரில் உள்ள மலர் சந்தை (மதுரை மக்களுக்கு "பூக்கடை" என்றால்தான் தெரியும்) எப்போதுமே கசகசவென கூட்டம் நிரம்பி வழியும் ஒரு இடம். கூச்சலும், இரைச்சலும் இங்கு நிரந்தரமாக இருக்கும். ஆனால், உலகப் புகழ் பெற்ற கிறிஸ்டியன் டியோர் (Christian Dior) என்ற நறுமண பொருள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் பிரான்கோய் டிமாகி (Francois Demachy) என்பவருக்கு இது ஒரு நறுமண வங்கி (smell bank). இவர் இங்கு ஒவ்வொரு வருடமும் நேரில் வந்து தன்னுடைய உலகப் புகழ் பெற்ற டியோர் நறுமண பொருட்களுக்கு (fragrance products) தேவையான மல்லிகை பூக்களை தேர்ந்து எடுக்கிறார்.
ஜாடோர் (J'Adore) என்ற இவர்களின் உலகப் புகழ் பெற்ற வாசனை திரவியம் (perfume). இதன் மூலப்பொருள் நம்முடைய மதுரை மல்லிதான். மதுரை மல்லியுடன், வேறு சில பூக்களின் பங்கும் இதன் நறுமணத்துக்கு காரணம் என்றாலும், டிமாகி மதுரை மல்லியின் நறுமணமும், மதுரை மண்ணின் சிறப்புமே முக்கிய காரணம் என்கிறார்.
மனிதரை மயங்க வைக்கும் சிறப்பு, மல்லிகைப் பூவுக்கு உள்ளது. அதிலும், மதுரை மல்லிக்கு இத்தகுதி அதிகம். மதுரையில்தான். மதுரை மல்லி, குண்டு, குண்டாய், கொள்ளை வெள்ளையாய், இதழ்
தடிமனாய், எளிதில் உதிராமல், இரண்டு நாட்கள் இருந்தாலும் வாடி வதங்காமல்,
மருத்துவ குணம் கொண்டது.இந்த மல்லிகைப் பூக்கள், மதுரையில் பல ஆயிரம்
குடும்பங்களை வாழ வைக்கின்றன. மல்லிகையின், தாய்ச்செடி ராமேஸ்வரம்
தங்கச்சிமடத்தில் இருந்து பதியன்களாக பல்வேறு இடங்களுக்கும் செல்கிறது.
திண்டிவனம், சேலம், கோவை, சத்தியமங்கலம், மதுரை, நெல்லை என எந்தப்
பகுதிக்குச் சென்றாலும், மதுரை பகுதியில் விளையும் மல்லிகைக்குத்தான்
மணக்கும் குணம் அதிகம்.
மதுரை மார்க்கெட்டுக்கு, தினமும் 10 டன் உட்பட, 6 மார்க்கெட்டுகளிலும் 50 டன்னுக்கும் மேலாக மல்லிகைப்பூ விற்பனைக்கு வருகிறது. ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், இவற்றின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு லட்சம் பேராவது இத்தொழிலில் இருப்பர்.ஜனவரி முதல் ஏப்ரல் வரை மல்லிகைப்பூ உற்பத்தி அதிகமாக இருக்கும்.
ஒவ்வொரு வருடமும் மதுரை வரும் டிமாகி, நேரடியாக மல்லி விளையும் இடங்களுக்கு சென்று அங்குள்ள தொழிலாளிகளுடன் பேசுகிறார். மல்லி விளைவதில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி அவர்களுடன் ஆராய்கிறார். பின்னர், மல்லிகை மலர்களிலிருந்து இவருடைய டியோர் நிறுவனத்திற்கு தேவையான extracts எனப்படும் பூக்களின் சாறு கொண்ட மூலப் பொருளை எந்தெந்த முறையில், அதன் குணமும் மணமும் மாறாமல் தயாரிக்க வேண்டும் என்பது பற்றி விளக்குகிறார்.
எங்கேயோ இருக்கும் ஒரு உலகப் புகழ் நிறுவனம் அதனுடைய perfume தயார் செய்ய நம்முடைய மல்லிகையை பயன்படுத்துகிறது. நம்மூர் பெண்கள் பூக்களை தலையில் சூடினால் அது பட்டிகாட்டுத்தனம் என்று மல்லி போன்ற மலர்களை புறக்கணித்து விட்டனர். ஹ்ம்ம்ம்ம்....எதுக்கோ தெரியாதாம் மல்லிகையின் வாசனை...

Comments
வாழ்த்துக்கள்...