மதுரை நகரில் உள்ள மலர் சந்தை (மதுரை மக்களுக்கு "பூக்கடை" என்றால்தான் தெரியும்) எப்போதுமே கசகசவென கூட்டம் நிரம்பி வழியும் ஒரு இடம். கூச்சலும், இரைச்சலும் இங்கு நிரந்தரமாக இருக்கும். ஆனால், உலகப் புகழ் பெற்ற கிறிஸ்டியன் டியோர் (Christian Dior) என்ற நறுமண பொருள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் பிரான்கோய் டிமாகி (Francois Demachy) என்பவருக்கு இது ஒரு நறுமண வங்கி (smell bank). இவர் இங்கு ஒவ்வொரு வருடமும் நேரில் வந்து தன்னுடைய உலகப் புகழ் பெற்ற டியோர் நறுமண பொருட்களுக்கு (fragrance products) தேவையான மல்லிகை பூக்களை தேர்ந்து எடுக்கிறார். ஜாடோர் (J'Adore) என்ற இவர்களின் உலகப் புகழ் பெற்ற வாசனை திரவியம் (perfume). இதன் மூலப்பொருள் நம்முடைய மதுரை மல்லிதான். மதுரை மல்லியுடன், வேறு சில பூக்களின் பங்கும் இதன் நறுமணத்துக்கு காரணம் என்றாலும், டிமாகி மதுரை மல்லியின் நறுமணமும், மதுரை மண்ணின் சிறப்புமே முக்கிய காரணம் என்கிறார். மனிதரை மயங்க வைக்கும் சிறப்பு, மல்லிகைப் பூவுக்கு உள்ளது. அதிலும், மதுரை மல்லிக்கு இத்தகுதி அதிகம். மதுரையில்தான். மதுரை மல்லி, குண்டு,...
காலை Japan இல் காஃபி, மாலை New York இல் காபரே, இரவில் Thailand இல் ஜாலி!, இனிமேல் நமக்கென்ன வேலி? என்றும், என்றும் இன்ப மயம்!