மே மாதம் 3-ம் தேதி மறைந்த மாபெரும் எழுத்தாளார் சுஜாதாவின் 78-ம் பிறந்த நாள். சென்னை : "புதிதாக எழுத துவங்கிய பெரும்பாலான இளம் எழுத்தாளர்களுக்கு, எழுத்தாளர், சுஜாதா முன்னோடியாக விளங்கினார். அவர்களை ஊக்கப்படுத்தி, மேலும் எழுதுவதற்கு தூண்டுகோலாக அமைந்தார்,'' என, "உயிர்மை' இதழின் ஆசிரியர், மனுஷ்யபுத்திரன் கூறினார். உயிர்மை பதிப்பகமும், சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து வழங்கும், "சுஜாதா விருதுகள்' வழங்கும் விழா, அண்ணா சாலையில் உள்ள, "புக் பாயின்ட்' அரங்கத்தில் நடந்தது. "உயிர்மை' இதழின் ஆசிரியர், மனுஷ்ய புத்திரன் வரவேற்புரை ஆற்றினார். சுஜாதா விருதுகள் 2013 நிகழ்ச்சி பாரதி கிருஷ்ணகுமார், பாரதிமணி, கலாப்ரியா, அழகிய பெரியவன், அ.முத்துகிருஷ்ணன், ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில், அஜயன் பாலா எழுதிய, "அஜயன்பாலா சிறுகதைகள்' புத்தகத்துக்கு, சிறுகதை விருது; தமிழ்மகன் எழுதிய, "வனசாட்சி'க்கு, நாவல் விருது; மனோ.மோகன் எழுதிய, "பைத்தியக்காரியின் பட்டாம்பூச்சி'க்கு, கவிதை விருது; பிரபாகரன் எழ...