Skip to main content

Posts

Showing posts from July, 2012

தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம்!!

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது முன்னோர் வாக்கு. கோடி கோடியாய் பணம் வைத்திருந்தாலும் அவற்றை அனுபவிக்க நோயில்லாத உடல் வேண்டும். எனவேதான் நோய்கள் வராமல் உடலை காத்துக்கொள்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். நடைபயிற்சி மேற்கொள்பவர்களை நோய்கள் எளிதில் தாக்குவதில்லை என்றும் கூறுகின்றனர். தினமும் தவறாமல் நடை பயிற்சி மேற்கொண்டால் எடை குறையும், தசை வலுவடையும், இதயநோய்கள் எட்டிப்பார்க்காது, நீரிழிவு நோய் கட்டுப்படும். ரத்த அழுத்தம் சீராகும், முதுகுவலி ஏற்படாது என்கின்றனர் மருத்துவர்கள். சரியான முறையில் நடைப் பயிற்சி கைகளை வீசி நடங்கள் காலை 6 மணிக்கு முன் நடப்பது மிகவும் நல்லது. முடியாதவர்கள் மாலையில் நடக்கலாம். நடக்கும் போது கைகளை வீசி நடக்கவேண்டும். குறைந்த பட்சம் இரண்டு கிலோமீட்டராவது நடந்த பின்னர் 5 நிமிடம் ஓய்வெடுக்க வேண்டும். பிறகு கைகளை பத்துமுறை நீட்டி மடக்க வேண்டும். பின்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு காலை வேலைகளை பார்க்கலாம். உடல் எடை குறையும் உடல் எடை அதிகரிப்பு என்பது இன்றைய கால கட்டத்தில் சாதரண ஒன்றாகிவிட்டது. சரியான உ...

"ஷார்ட் டவர் (The Shard Tower)" லண்டன்

பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு பெருமை சேர்ப்பது, தேம்ஸ் நதி. சல சலத்து ஓடும் தேம்ஸ் நதியையும், எழில் மிகுந்த கட்டடங்களுடன் காட்சி அளிக்கும் லண்டன் நகரையும், இரவு நேரத்தில், மின் விளக்குகளின் வெளிச்சத்தில் பார்ப்பது, பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை தரும். தற்போது லண்டன் நகரின் அழகுக்கு, மேலும் அழகு சேர்க்கும் வகையில், ஐரோப்பாவிலேயே மிக உயரமான கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது. "ஷார்ட் டவர் (The Shard Tower)" என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த கட்டடம், 1,016 அடி உயரமுள்ளது. 72 தளங்கள் இதில் உள்ளன. இதன் புறத்தோற்றம் முழுவதும், ஆறு லட்சம் சதுர அடி பரப்பிலான, கண்ணாடிகளால் மூடப்பட்டுள்ளது. இவை, எட்டு கால்பந்து மைதானங்களுக்கு சமமான பரப்பளவு. The Shard Tower, London   கோபுரத்தின் அடித்தளத்தில் இருந்து, உச்சிக்கு செல்வதற்காக, 44 லிப்ட்கள் உள்ளன. இதன் அடித்தளம், "பப்ளிக் ஏரியா' என, பெயரிடப்பட்டு, பொதுமக்கள் பார்வையிடுவதற்காக, பிரத்யேக வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தளத்தில் ஷாப்பிங் மால்கள் உள்ளன. நான்காவது தளத்தில் இரு...

மருந்து பிரசாதம் தரும் நெல்லிகட்டு பகவதி அம்மன் கோவில்!

கோவிலுக்கு சென்றால் விபூதி, குங்குமம், சந்தனம் பிரசாதமாக வாங்குவோம். கேரளாவில் உள்ள ஒரு கிராமத்தில், பழமையான நம்பூதிரி குடும்பத்து கோவிலில், மருந்தையே பிரசாதமாக தருகின்றனர். "குழந்தைகளுக்கு படிப்பு நன்றாக அமைகிறது, ஞாபக சக்தி கூடுகிறது, நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது, மன அமைதி ஏற்படுகிறது' என்ற நம்பிக்கையோடு, இங்கு அம்மனை கும்பிட்டு, மருந்து பிரசாதம் வாங்கிச் செல்பவர்கள் ஏராளம். எர்ணாகுளம் மாவட்டம், கூத்தாட்டுக்குளத்தில் உள்ளது நெல்லிக்காட்டு பகவதி கோவில். எர்ணாகுளத்தில் இருந்து, 48 கி.மீ., தூரத்தில் உள்ள, கோட்டயத்தில் இருந்து அங்கமாலி செல்லும் பாதையில், 37வது கி.மீ.,தொலைவில் இக்கோவில் உள்ளது. கல்விக்கு சரஸ்வதி போன்று, (திரு மந்தம்குன்னு)"மருத்துவத்திற்கான தெய்வம்' என வணங்கப்படும் தன்வந்திரிமூர்த்திக்கும், பகவதி அம்மனுக்கும் தனித்தனி கோவில்கள் இங்கு உள்ளன.  ஆடி மாதத்தில், இக்கோவிலில் வலம் வந்து, நேர்ச்சைகள் நடத்தி, மனமுருக பிரார்த்தனை செய்து அம்மனை வழிபட்டால், முன்ஜென்ம பாவம் போய், நம் நோய்கள் எல்லாம் தீரும் என்பது ஐதீகம். "...