Skip to main content

Posts

Showing posts from June, 2012
                                     விஸ்வரூபத்தில் கமலின் சம்பளம் ரூ. 45 கோடி!!! விஸ்வரூபம் படத்தில் கமல் ஹாசனின் சம்பளம் ரூ. 45 கோடி என்று தயாரிப்பு வட்டம் தெரிவித்துள்ளது. தமிழ் மற்றும் இந்தியில் மெகா பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் விஸ்வரூபம். இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கிராபிக்ஸ் உலக அளவில் பேசப்படும் என்று கூறப்படுகிறது. படத்தில் கமல் ஹாசன் கதக் கலைஞர், தீவிரவாதி உள்ளிட்ட பல கெட்டப்களில் வருகிறார். படத்தில் கிராபிக்ஸ் எது, நிஜம் எது என்று தெரியாத அளவுக்கு கிராபிக்ஸ் செய்துள்ளார்களாம். இந்த படத்தின் வியாபாரம் ரூ.120 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் காதல் ரோஜாவே படத்தில் நடித்த பூஜா குமார், ஆன்ட்ரியா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். படத்தின் டிரெய்லர் சிங்கப்பூரில் நடந்த ஐஐஎப்ஏ விழாவில் வெளியிடப்பட்டது. டிரெய்லரைப் பார்த்தே அனைவரும் அசந்துவிட்டார்களாம். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய...
இப்படியும் ஒரு மனிதர் !!
செய்வாரா ஆனந்த்? உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற, விஸ்வநாதன் ஆனந்த், முதல்வர் ஜெயலலிதாவை நேற்று சந்தித்தார். அப்போது, ஆனந்த்திற்கு, தமிழக அரசின் சார்பில் இரண்டு கோடி ரூபாய் ஊக்கத்தொகையை வழங்கி பாராட்டினார். இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை வளர்க்கும் நோக்குடன், கடந்த 1992ம் ஆண்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தை, முதல்வர் ஜெயலலிதா உருவாக்கினார். மேலும், சிறந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதுடன் அவர்கள் உயர்ந்த சாதனை புரியும் வகையில், பன்னாட்டு விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் வகையில், அவர்களுக்கான ஊக்கத்தொகையும் இருமடங்காக்கப்பட்டது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கடந்த மாதம் நடந்த, உலக செஸ் சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்று, உலக செஸ் சாம்பியன் பட்டத்தை ஐந்தாவது முறையாக வென்று, தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த, விஸ்வநாதன் ஆனந்த்தின் சாதனையை பாராட்டி, தமிழக அரசின் சார்பில் 2 கோடி ரூபாய் ஊக்கத்தொகையை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்நிலையில், நேற்று பிற்பகல், விஸ்வநாதன் ஆனந்த், தன் மனைவி அருணாவு...
புத்தாண்டு வாழ்த்து சொன்னதோடு அதற்கு பிறகு எந்த பதிவையும் உருப்படியாக பதிய முடியவில்லை. இதற்கு ஒரே காரணம் ஓயாத வேலைப் பளு என்று சொல்லி ஜல்லியடிக்க விரும்பவில்லை. சோம்பேறித்தனமும், facebook கும் முக்கிய காரணங்கள். சரி, இனிமேல் அதையெல்லாம் மூட்டை கட்டிவைத்துவிட்டு மறுபடியும் முழுமூச்சாக இதோ........ எண் 9 -ன் சிறப்பு அம்சங்கள்: எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படுவது ஒன்பது. அந்த எண்ணில் நீண்ட வாழ்வு எனும் அர்த்தம் பொதிந்திருப்பதாகச் சொல்கின்றனர், சீனர்களின் சொர்க்க கோபுரம், ஒன்பது வளையங்களால் சூழப்பட்டுள்ளது. எகிப்து, ஐரோப்பா, கிரீக் முதலான நாடுகளும் 9-ஆம் எண்ணை விசேஷமாகப் பயன்படுத்திப் போற்றுகின்றன. புத்த மதத்தில், மிக முக்கியமான சடங்குகள் யாவும் ஒன்பது துறவிகளைக் கொண்டே நடைபெறும். தங்கள், வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் சுத்தத்தை 999 என்று மதிப்பிடுவார்கள். பெண்களின் கர்ப்பம், பூரணமாவது ஒன்பதாம் மாத நிறைவில்தான்! பரத கண்டத்தில், நம் இந்தியாவில் ஒன்பது எனும் எண் இன்னும் மகத்துவங்கள் கொண்டது. ஒன்பது என்ற எண்ணுக்கு வடமொழியில் நவம் என்று பெயர். நவ என்ற சொ...