புத்தாண்டு வாழ்த்து சொன்னதோடு அதற்கு பிறகு எந்த பதிவையும் உருப்படியாக
பதிய முடியவில்லை. இதற்கு ஒரே காரணம் ஓயாத வேலைப் பளு என்று சொல்லி ஜல்லியடிக்க விரும்பவில்லை. சோம்பேறித்தனமும், facebook கும் முக்கிய காரணங்கள். சரி, இனிமேல்
அதையெல்லாம் மூட்டை கட்டிவைத்துவிட்டு மறுபடியும் முழுமூச்சாக இதோ........
எண் 9 -ன் சிறப்பு அம்சங்கள்:
எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படுவது ஒன்பது. அந்த எண்ணில் நீண்ட
வாழ்வு எனும் அர்த்தம் பொதிந்திருப்பதாகச் சொல்கின்றனர்,
சீனர்களின்
சொர்க்க கோபுரம், ஒன்பது வளையங்களால் சூழப்பட்டுள்ளது. எகிப்து, ஐரோப்பா,
கிரீக் முதலான நாடுகளும் 9-ஆம் எண்ணை விசேஷமாகப் பயன்படுத்திப்
போற்றுகின்றன. புத்த மதத்தில், மிக முக்கியமான சடங்குகள் யாவும் ஒன்பது
துறவிகளைக் கொண்டே நடைபெறும்.
தங்கள், வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின்
சுத்தத்தை 999 என்று மதிப்பிடுவார்கள்.
பெண்களின் கர்ப்பம், பூரணமாவது
ஒன்பதாம் மாத நிறைவில்தான்! பரத கண்டத்தில்,
நம் இந்தியாவில் ஒன்பது எனும்
எண் இன்னும் மகத்துவங்கள் கொண்டது. ஒன்பது என்ற எண்ணுக்கு வடமொழியில் நவம்
என்று பெயர். நவ என்ற சொல் புதிய, புதுமை எனும் பொருள் உடையது.
நவ தீர்த்தங்கள்: கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, சரயு, நர்மதை, காவிரி, பாலாறு, குமரி
நவ வீரர்கள் - வீரவாகுதேவர், வீரகேசரி, வீரமகேந்திரன், வீரமகேசன்,
வீரபுரந்திரன், வீரராக்ஷசன், வீரமார்த்தாண்டன், வீரராந்தகன், வீரதீரன்
நவ அபிஷேகங்கள்: மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், நெய், தேன், தயிர், சர்க்கரை, சந்தனம், விபூதி.
நவ ரசம்: இன்பம், நகை, கருணை, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அற்புதம், சாந்தம் ஆகியன நவரசங்கள் ஆகும்.
நவக்கிரகங்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது
நவமணிகள் - கோமேதகம், நீலம், வைரம், பவளம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம்
நவலோகம் (தாது): பொன், வெள்ளி, செம்பு, பித்தளை, ஈயம், வெண்கலம், இரும்பு, தரா, துத்தநாகம்
நவ தானியங்கள் - நெல், கோதுமை, பாசிப்பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, வேர்க்கடலை
அடியார்களின் நவபண்புகள்: எதிர்கொள்ளல், பணிதல், ஆசனம் (இருக்கை) தருதல்,
கால் கழுவுதல், அருச்சித்தல், தூபம் இடல், தீபம் சாட்டல், புகழ்தல், அமுது
அளித்தல்-இவை எல்லாம் ஒரிஜினல் அடியார்களின் அம்சங்கள்; காதில் headphone-ஐ மாட்டிக் கொண்டு, பெண்களுடன் பகிரங்கமாக ஆட்டம் போட்டுக் கொண்டு, இந்து மதத் தலைவர் என்று சொல்லிக் கொண்டு திரியும் போலி ஆசாமிகளின் பண்புகள் அல்ல.
அடியார்களின் நவகுணங்கள்: அன்பு, இனிமை, உண்மை, நன்மை, மென்மை, சிந்தனை, காலம், சபை, மவுனம்.
உடலின் நவ துவாரங்கள் : இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்குத் துவாரங்கள், ஒரு வாய், இரண்டு மலஜல துவாரங்கள்.
18 புராணங்கள், 18 படிகள் என அனைத்தும் 9-ன் மூலமாக தான் உள்ளன. காயத்ரி
மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும். எல்லா தெய்வத்தின் நாமாவளியும் ஜப
மாலையின் எண்ணிக்கையும் இதை அடிப்படையாகக் கொண்டதுதான்!
புத்த மதத்தினர்
108 முறை மணியடித்து, புது வருடத்தை வரவேற்றுக் கொண்டாடுகின்றனர்.
சீனாவில், 36 மணிகளை மூன்று பிரிவாகக் கொண்டு, சு ஸூ எனப்படும் மாலையைக்
கொண்டு ஜபம் செய்வார்கள்.
ஸ்ரீகிருஷ்ணருக்குப் பிரியமான மாதம்... மார்கழி.
இது வருடத்தின் 9-வது மாதம்! மனிதராகப் பிறந்தவன் எப்படி வாழ வேண்டும் என
வாழ்ந்து காட்டிய ஸ்ரீராமபிரான் பிறந்தது, 9-ஆம் திதியான நவமி நாளில்தான்.
9
என்ற எண்ணை கேலிக்கையாக எண்ணாமல் புராணங்களிலும், நடைமுறையிலும்
சிறப்பிடம் பெற்றுள்ளது என்பதை போற்றுவோம்.
-நன்றி: தினமலர் இணைய தளம்
Comments