நிஷ்களங் மகாதேவ் கோயில்-கடற்கரையில் இருந்து |
கடல் உள்வாங்கிய பிறகு -கோயிலின் தோற்றம் |
கடல் நடுவே இருக்கும் சிவனுக்கு ஆராதனை |
சமீபத்தில் சன் டி.வியில் ஒளிபரப்பட்டு மிகப் பிரபலமடைந்த கடல் கோயில் நிகழ்ச்சியை பார்க்கவில்லையா என என் நண்பர் ஒருவர் கேட்டபோது, இன்டர்நெட் துணை இருக்கும்போது என்ன கவலை என்று நினைத்துக் கொண்டு இந்த நிகழ்ச்சியையும், அதன் பின்புல தகவல்களையும் தேடிய போது பல ஆச்சரியமான விஷயங்களை சந்திக்க முடிந்தது.
குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் கொலியாக் என்ற இடத்தில் இருக்கும் இந்த அற்புதமான கோயிலைப் பற்றி:
கொலியாக் பாவ்நகரில் இருந்து 23 கி.மீ. கிழக்கில் இருக்கிறது. அரபிக் கடலின் ஓரத்தில் இருக்கும் இந்த சின்ன கிராமத்தில் மாதம் ஒருமுறை இந்த அற்புதம் நிகழ்கிறது.
இங்கு கடல் நடுவே ஒரு கொடிக் கம்பமும், ஒரு கல் தூணும் மிகத் தொலைவிலிருந்தே தெரிகின்றன. ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு அடுத்த நாள் காலை கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் கூடுகிறது. காலை சுமார் 9 மணிக்கு மேல் மெதுவாக கடல் உள்வாங்குகிறது. கொஞ்சம், கொஞ்சமாக கல் தூண் மற்றும் கொடிக்கம்பம் தெளிவாகத் தெரிவதுடன், ஒரு பெரிய சமவெளியில் சிறிய இடைவெளியில் 5 சிவலிங்கங்களும் காட்சி தருகின்றன. பக்தர்கள் நிதானமாக கடல் உள்வாங்கிவிட்ட மணல் பரப்பில் நடந்து சென்று கோயிலை அடைகிறார்கள். கையில் கொண்டுவந்துள்ள பூ மற்றும் பால் ஆகிவற்றை அங்குள்ள லிங்கம் ஒவ்வொன்றின் மேலும் படைக்கிறார்கள். பஜனை செய்கிறார்கள். கடற்கரையில் இருந்து கிட்டத்தட்ட
1.5 கி.மீ. தொலைவில் இருக்கிறது இந்த கடல் கோயில். நிஷ்களங் மகாதேவ் என்றால் பாவத்தைப் போக்குகிறவர், எந்தவித களங்கமும் இல்லாதவர் என்று பொருள் சொல்கிறார்கள்.
1.5 கி.மீ. தொலைவில் இருக்கிறது இந்த கடல் கோயில். நிஷ்களங் மகாதேவ் என்றால் பாவத்தைப் போக்குகிறவர், எந்தவித களங்கமும் இல்லாதவர் என்று பொருள் சொல்கிறார்கள்.
மாலை நெருங்குகிறது. ஒவ்வொருவராக கடற்கரைக்கு திரும்பி வர ஆரம்பிக்கும்போது கடல் மீண்டும் அந்தக் கோயிலை முழுதாக ஆக்கிரமிக்கிறது. மீண்டும் கொடிக் கம்பமும், கல் தூணும் மட்டுமே தெரிகின்றன. நண்பர் சிவா இந்தப் பதிவை படித்துவிட்டு, இதுபோன்ற கடல் உள்வாங்கும் சமாச்சாரம் இந்தியாவிலேயே அந்தமான், லட்சத்தீவு ஆகிய இடங்களில் மாதம் ஒரு முறை கடல் உள்வாங்குகிறது, ஆங்கிலத்தில் இதை இஸ்துமஸ் (Isthumus) என்று சொல்லியிருக்கிறார். நன்றி நண்பரே. உண்மைதான், பல இடங்களில் கடல் இது போல உள்வாங்கலாம், ஆனால், அந்தக் கடல் நடுவே ஒரு புராதனமான சிவன் கோயில் இருப்பது இங்கு மட்டுமே, அதுவே இந்த இடத்தின் சுவாரசியம்.
பாண்டவர் காலத்து கோயில் என்கிறார்கள். உண்மை அந்த சிவனுக்கே வெளிச்சம். இத்துடன் சன் டி.வியில் ஒளிபரப்பிய நிகழ்ச்சியின் வீடியோ தொகுப்பை இணைத்திருக்கிறேன்.
கடல் கோயில் - வீடியோ பகுதி 1
கடல் கோயில் - வீடியோ பகுதி 2
(நன்றி: சன் டி.வி மற்றும் இந்த வீடியோவை You Tube இல் இணைத்த அந்த முகம் தெரியாத நண்பருக்கும்).
Comments
ஆச்சரியம் ஆனால் உண்மை!!!!!
அறியத் தந்தமைக்கு நன்றி.